விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Tuesday, 15 May 2012

நகைச்சுவை குறித்த கருத்தரங்கம் மற்றும் டி .எ .மதுரம் படத்திறப்பு



 
                     
 ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நகைச்சுவை குறித்த கருத்தரங்கமும் திராவிட திரைப்பட நகைச்சுவை நடிகை  டி. எ. .மதுரம் அவர்களின்  படத்திறப்பு விழாவும் மே  திங்கள் 6 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அரசு அலுவலர்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது .





  .
இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத்  தலைவர் இர .பழனி  அவர்கள் வரவேற்பு ஆற்றினார்

.விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர்  பழ.பிரபு  மாத அறிக்கை வாசித்தார்  . விடுதலை வாசகர் வட்ட புரவலரும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவருமானஅண்ணா .சரவணன் அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்.




தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் அரங்க .அனந்தகுமார் அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் .




வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் அவர்களுக்கு விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் இர.வேங்கடம்  அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஒய்வு  பெற்ற ஆசிரியர் கரன்சிங் அவர்களும்,தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் அரங்க .அனந்தகுமார் அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கழக துணை செயலாளர் எம்.கே.எஸ் .இளங்கோவன்  அவர்களும் ,திருப்பத்தூர் குடும்ப ஆலோசகர் கவிஞர் சுப்புலட்சுமி  அவர்களுக்கு மானமிகு கலைமணி பழனியப்பன்   அவர்களும்,.ஊற்றங்கரை ஸ்டேட் பேங்க் மேலாளர் ஜி.குணசேகர்  அவர்களுக்கு ஒய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத் துணைத் தலைவர் முருகேசன்  அவர்களும் ''வீரமணி ஓர் விமர்சனம் ''நூலினை அளித்து சிறப்பு செய்தனர் .
      ஒய்வு பெற்ற ஆசிரியர் சங்கத் தலைவர் மாரிசெட்டி பாராட்டப்பட்டார் .
















ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் ஊற்றங்கரை வட்ட  ஒய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க தலைவர் வ .மாரிசெட்டி அவர்கள் ஆற்றிய சிறப்பான சங்க பணிகளுக்காக  நினைவு பரிசு அளித்து பாராட்ட்டப்பட்டார் .ஊற்றங்கரை புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் வே.சந்திரசேகரன் ,ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம்,உள்ளிட்ட பலரும் சால்வை அணிவித்து பாராட்டினர்



திருப்பத்தூர் குடும்ப ஆலோசகர் கவிஞர் சுப்புலட்சுமி அவர்கள் திராவிட திரைப்பட நகைச்சுவை நடிகை டி .எ .மதுரம் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார் .


.ஊற்றங்கரை ஸ்டேட் பேங்க் மேலாளர் ஜி.குணசேகர் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார் .

. நிறைவாக சன் தொலைக்காட்சியின் அரட்டை அரங்கம் தேர்வுக் குழு தலைமை உறுப்பினரும் ,மிகச் சிறந்த நகைச் சுவை பேச்சாளருமான தமிழ்நெஞ்சன் ''சிரிக்க தானே இந்த நேரம் ''என்னும் தலைப்பில் அனைவரும் வயிறு குலுங்க சிரிக்கும் வண்ணம் மிகச் சிறப்பான உரையாற்றினார் .இறுதியாக வாசகர் வட்ட துணைத் தலைவர் இர .வேங்கடம் நன்றியுரை ஆற்றினார் நிகழ்ச்சியில் பங்கு பெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள்,நகைச்சுவை  குறித்த கட்டுரை நகலெடுத்து வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவு வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு ,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்