திராவிடர் இயக்க ஆய்வாளர்
க.திருநாவுக்கரசு அவர்கள் 23.6.2013 அன்று காலை 10 மணியளவில் கிருட்டினகிரி
மாவட்டம், ஊற்றங்கரையில் அமைந்துள்ள விடுதலை வாசகர் வட்டத்தில்
அருமையானதொரு ஆய்வுரையை ஒரு மணி 45 நிமிடங்கள் நிகழ்த்தினார். வாசகர்
வட்டத்தினர் மானமிகு சுயமரியாதைகாரன் என்று தலைவர் கலைஞர் அவர்கள்
30.4.2006 -இல் அளித்த பேட்டியின் போது ஒற்றை வரியில் தம்மைப்பற்றி அவர்
கூறியதையே திருநாவுக்கரசுக்குத் தலைப்பாக வழங்கினர். அத்தலைப்பின் கீழ்
க.திருநாவுக்கரசு அவர்கள் பல்வேறு அரிய தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார்:
விடுதலை நாளேட்டின் பெயரால் ஒரு வாசகர் வட்டத்தை இங்கே - ஊற்றங்கரையில் இருக்கிற நமது தோழர்கள் அமைத்து, எம்மையும் பேசுமாறு அழைத்ததற்கு நாம் பெரிதும் மகிழ்கின்றோம். விடுதலை நாளேட் டின் பெயரால் வாசகர் வட்டம் அமைத்து அதனை இயக்கி வருகிற தோழர்களை நாம் மனமாரப் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். விடுதலை வாசகர் வட்டம் இதேபோல தமிழ்நாடு முழுமையாக உருவாக வேண்டும் என்று பேராசைப்படுகின்றோம்.
விடுதலை நாளேட்டின் பெயரால் ஒரு வாசகர் வட்டத்தை இங்கே - ஊற்றங்கரையில் இருக்கிற நமது தோழர்கள் அமைத்து, எம்மையும் பேசுமாறு அழைத்ததற்கு நாம் பெரிதும் மகிழ்கின்றோம். விடுதலை நாளேட் டின் பெயரால் வாசகர் வட்டம் அமைத்து அதனை இயக்கி வருகிற தோழர்களை நாம் மனமாரப் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். விடுதலை வாசகர் வட்டம் இதேபோல தமிழ்நாடு முழுமையாக உருவாக வேண்டும் என்று பேராசைப்படுகின்றோம்.
எம்முடைய மகிழ்ச்சியும் பேராசை யும்
இரட்டிப்பு ஆகிற வகையில், கலைஞர் தம்மைப்பற்றி ஒற்றை வரியில் தெரிவித்து
இருக்கிற கருத்தமைவை. எமக்குத் தலைப்பாகத் தந்து இருப்பது தான்! அந்தச்
சொற்றொடர் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பது! இது தான் ஊற்றங்கரை விடுதலை
வாசகர் வட்டத்தினர் பேசுமாறு எமக்கு வழங்கி இருக்கிற தலைப்பு. இங்கே நமது
தோழர்கள் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களுடைய படத்தினையும்
திறந்து வைத்து எமக்கு முன்பாக உரையாற்றி இருக்கிறார்கள். ஏற்கெனவே
மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிற எனக்கு - தலைப்பு வேறு பெருமகிழ்ச்சியை
உண்டாக்கி இருக் கிற நிலையில் பன்மொழிப் புலவரின் படத்திறப்பு அவர்
மொழியிலயே சொல் வதென்றால் எமக்கு இன்பத்துள் இன்பத்தைப் பெருக்கி
வழிந்தோடச் செய்து இருக்கிறது.
பன்மொழிப்புலவர் கா.அப்பாத் துரையாருடைய
படத்தை திறந்து வைத்து இங்கே உரையாற்றினார்கள், திராவிட இயக்க வரலாற்று
ஆசிரியர் களில் இருவரை நாம் மறக்க முடியாது. ஒருவர் பன்மொழிப்புலவர்; மற்றொ
ருவர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள், பன்மொழிப் புலவரைப்பற்றி
எடுத்துரைத்தவர் ஓரளவு செய்தி களைத் திரட்டி வைத்து கூறினார். பன்மொழிப்
புலவர் 200-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஷேக்ஸ்பியர் கதைகளின்
சுருக்கங்களை நமக்கு எடுத்துச் சொன்னவர். பல்கலைக்கழக ஆங்கில - தமிழ்
அகராதி, சைவ சித் தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆங்கில - தமிழ் அகராதிகளை
தொகுத்து அளித்தவர்.
பெரியார் திடலில் சங்க ராச்சாரி யார்? எனும் தொடர் சொற்பொழிவை ஆசிரியர் நிகழ்த்தினார். ஒவ்வொரு நாள் சொற்பொழிவுக்கும் அறிஞர் அண்ணா தலைமை தாங்கினார். அது போல ஒரு சொற்பொழிவுக்கு பன் மொழிப்புலவர் கா.அப்பாத் துரையார் ஆற்றிய ஆய்வுரை மறக்க முடியாதது ஆகும். அவ்வுரையில் ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கஆழமான, அறிவார்ந்த மாபெரும் சிந்த னையாளரைப் பற்றி நாமும் எமது திராவிட இயக்கத்தவர்கள் எனும் நூலில் பதிவு செய்து இருக்கின்றோம். இத்தகைய பேரறிஞர் ஒருவரின் படத்தை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தி னர் திறந்து வைத்து அவரை நினைவு கூர்ந்தமைக்கு அவர்களை நாம் வெகு வாகப் பாராட்ட கடமைப்பட்டு இருக்கின் றோம்.
இதேபோல நமது இயக்கச் சார்பு டைய மாபெரும்
ஆய்வாளர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள். இவர் சமயத்தைப் பற்றியும்,
பௌத்தத்தைப் பற்றியும் மிக ஆழமாக ஆய்வை மேற் கொண்டவர். அவருடைய நூல்களெல்
லாம் புதிதாகப் பதிபபிக்கப்பட்டு விற்ப னைக்கு வந்து இருக்கின்றன. கலைஞர்
அவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் ஆய் வாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்
தாளர்கள், கவிஞர்கள் என்று எந்த இயக்கத்தை, கட்சியைச் சேர்ந்தவர் களாக
இருப்பினும் அவர்களது படைப்பு களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கி னார்கள்.
100க்கும் மேற்பட்டவர்களுடைய படைப்புகளை நாட்டுடைமையாக்கி இருக் கிறார்கள்.
இச்சாதனை எந்த முதல் வராலும் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனையாகும். அந்த
வகையில் தான் பன்மொழிப் புலவரின் நூல்களும் நாட்டு டைமையாக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய பெருமக் களையெல்லாம் ஊற்றங் கரை விடுதலை
வாசகர் வட்டம் நினைவுகூர வேண் டும் என்று இந்தச் சந்தர்ப் பத்தில் நாம்
கூறிக் கொள் கின்றோம். இப்போது நாம் மான மிகு சுயமரியாதைக்காரன் என்று
எமக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள், அதற்குள் இப்போது செல் வோம்,
மானமிகு சுயமரியா தைக்காரன் என்பது ஒற்றைவரி கொள்கை உள்ளீடுள்ள ஒரு
சொற்றொடர். பெரியார் சொல்லுவார் மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று!
இதுவும் கலைஞர் சொன்னது போல கொள்கை உள்ளீடுள்ள ஒரு முழக்கம். அது பெரி
யாரிடமிருந்து மரபு வழியாக நமக்கு வருகிற கொள்கைத் தாக்கம்!. பொது வாகச்
சமூகத்தில் மானம் என்கிற சொல் எப்பொருளில் வழங்கப்படுகிறது என்பதை நாம்
முதலில் தெரிந்து கொண்டால்தான் - பெரியாரும் கலைஞரும் கூறுகிற
மானத்திற்கும், மானமிகுவிற்கும் இருக் கிற உட்பொதிந்த பொருளை நாம் அறிந்து
கொள்ள முடியும். கலைஞர் மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தம்மை மட்டும்
ஒருமையில் பிரகடனப் படுத்திக் கொண்டாலும் அந்த ஒருமை யில் நம் அனைவரையும்
சேர்த்து பன் மையின் கூறாய் மானமிகு சுயமரியா தைக்காரர்கள் என்ற பொருளே
அதன் தொகையாய் நிற்கிறது. ஏனென்றால் கலைஞர் என்பவர் தனி மனிதர் அல்லர்;
அவர் ஓர் இயக்கமாய் கொள்கைகளை எதிரொலிக்கிற வாழும் ஊழியாய்த் திகழுபவர்.
மானம் என்பதற்கு அகராதி கூறும் பொருள் என்ன? தன்மதிப்பு, அகங்காரம்,
அபிமானம், அளவு, உவமை, ஒரு வித பொருத்தம், கணிதம், குற்றம், நேசம்,
பிடிப்பு, பெருந்தன்மை, பெருமை, மரியாதை, வலி, விமானம், வெட்கம், கத்தூரி,
கவுரவம், கற்பு, புலவி, சபதம், அன்பு, பிரமாணம் இப்படி மானம் என்பதற்கு
சொற்களை அடுக்கிக் காட்டுகிறது - அகராதி! இதனால் நம்மால் ஒரு முடிவுக்கு வர
முடியாமல் குழப்பம் போல் தோன்றுகிறது அல்லவா?
ஆனால் மானம் என்பது பற்றி நமது
திருக்குறள் ஓர் அதிகாரத்தையே எடுத்துக் கொண்டு நமக்கு வாழ் நெறியை
எடுத்துக்காட்டுகிறது. திருக் குறள் குடும்பத்திற்கு மானம் வேண்டும்
என்கிறது. அதே நேரத்தில் குடும் பத்திற்குள் மானம் பார்க்கக்கூடாது என்றும்
சொல்கிறது.மானமாவது எக்காலத்திலும் தமது நிலையில்
திரியாமை என்கிறது. அதனை மூன்றாக வகைப்படுத்து கிறது. 1) தமது தன்மை
குன்றுவன செய்யாமை, 2) இகழ்வார் மாட்டு செல் லாமை, 3) இழிதொழில் செய்யாமை,
பொறாமை இல்லாமை என வகைப் படுத்துகிறது. இந்த அளவுகோல் தமிழ்க்
குடும்பத்திற்கு ஆனது.
கலைஞர் சொல்கிற மானமிகு பெரியார்
சிந்தனையிலிருந்து முளைத் தது. பெரியாரை அறிஞர் அண்ணா கல்லூரி காணாத கிழவர்
என்றார். கலைஞரும் கல்லூரி காணாதவர் தான். பெரியார் சொன்னது போல கலைஞரும்
இயற்கையின் மைந்தர் பள்ளிப்பருவத்திலேயே சுயமரியாதைப் பழமாகிப் போனவர்
அவர்! மானத்தி லிருந்து முளைத்து மானம் மிகுதியாக சுயமரியாதை எழுச்சி
பெற்றதாலேயே குடி அரசில் தீட்டாயிடுத்து எனும் கட்டுரையை கலைஞர் எழுதினார்.
மிகச்சிறிய கட்டுரை தான் அது. அந்தக் கட்டுரை எழுதுகிறபோது அவருக்கு வயது
22. மானம் இயல்பாய் இருப்பதைவிட, கூடுவதற்கு என்ன காரணம்?
தமிழர் சமூக அமைப்பில் நால் வருணம்
இருந்ததில்லை. நால்வருணம் என்பது என்ன? பிராமணன் (பார்ப் பான்),
க்ஷத்திரியன் (அரசன்), வைசி யன் (வணிகன்), சூத்திரன் என இந்த சமூக அமைப்பை
நான்காகப் பிரித்து வைத்து இருக்கிறார்கள். இதில் நாம் அனைவரும்
சூத்திரப்பிரிவைச் சேர்ந்த வர்கள். மற்ற மூன்று பிரிவுகளிலும்
உள்ளவர்களைவிட எண்ணிக்கையில் மிக அதிகமாக இருக்கிறோம். நாம் உழைக்கின்ற
பெருமக்கள்! ஆனால் சூத்திரப் பிரிவில் வைக்கப்பட்டு இருக்கின்றோம்.
சூத்திரர் என்றால் யார்? தாசி மகன், அடிமை, மற்ற மூவ ருக்கும் தொண்டு
செய்பவன். இந்த சூத்திரப் பிரிவில் தான் நாம் எல் லோரும் வைக்கப்பட்டு
இருக்கிறோம். அதை மறுத்து, இன இழிவைப் போக்கிக் கொள்ள முயல்கிறவர்களே
மானமிகு ஆவார்கள். அதைத்தான் மானமிகு என்று கலைஞர் சொல்லு கிறார். இது
மட்டும் இல்லை.
கலைஞர் ஒரு முறை ஆட்சிப் பொறுப் பில் இருந்தபோது ஒரு வினாவுக்கு விடையளிக்கின்றார். ஆம் இது நாலாந்தர அரசு தான் என்று கூறினார். இந்த நாலாந்தரத்தில் தான் - இதில் சூத்திரர் அரசு என்கிற கோபம் இருக் கிறது. மானம் மிகுந்து வெளிப்படுகிறது - கலைஞர் மானமிகு சுயமரியாதைக் காரர் ஆகிவிடுகிறார். அதை ஒழித் தாக வேண்டும் என்கிற ஆத்திரத்தில் பதில் அளிக்கிறார்.
சூத்திரப் பிரிவுக்கு அடுத்து பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்டவர்களை வைத்து இருக்கிறார்கள். ஆனால் அவர் களை நால்வருணத்திற்குள் கொண்டு வரவில்லை. ஆகவே தான் பெரியார் சொன்னார். நான் பஞ்சமனாகவே பிறக்கவில்லையே என்று வேதனைப் படுகிறேன். அப்படி பிறந்திருந்தால் சூத் திரனாக - தாசி மகனாக எனக்கு இருக்கிற பட்டம் இன இழிவு இல்லாமல் இருந்திருக்கும். இந்த அவரது கருத்தில் தான் மானமிகு என்பதன் முழு வெளிப்பாடு - பொருள் துல்லியமாக விளக்கப்பட்டு இருக்கிறது. இந்த மான மிகுவை ஏற்றுக்கொண்டு தான் கலைஞர் சமுதாயப் பணியாற்றி வருகிறார். ஆகவே தான் 22-ஆவது வயதில் அவர் குடிஅரசில் தீட்டாயிடுத்து எனும் கட் டுரை எழுதினார். எதற்காக எழுதினார்?
கலைஞர் ஒரு முறை ஆட்சிப் பொறுப் பில் இருந்தபோது ஒரு வினாவுக்கு விடையளிக்கின்றார். ஆம் இது நாலாந்தர அரசு தான் என்று கூறினார். இந்த நாலாந்தரத்தில் தான் - இதில் சூத்திரர் அரசு என்கிற கோபம் இருக் கிறது. மானம் மிகுந்து வெளிப்படுகிறது - கலைஞர் மானமிகு சுயமரியாதைக் காரர் ஆகிவிடுகிறார். அதை ஒழித் தாக வேண்டும் என்கிற ஆத்திரத்தில் பதில் அளிக்கிறார்.
சூத்திரப் பிரிவுக்கு அடுத்து பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்டவர்களை வைத்து இருக்கிறார்கள். ஆனால் அவர் களை நால்வருணத்திற்குள் கொண்டு வரவில்லை. ஆகவே தான் பெரியார் சொன்னார். நான் பஞ்சமனாகவே பிறக்கவில்லையே என்று வேதனைப் படுகிறேன். அப்படி பிறந்திருந்தால் சூத் திரனாக - தாசி மகனாக எனக்கு இருக்கிற பட்டம் இன இழிவு இல்லாமல் இருந்திருக்கும். இந்த அவரது கருத்தில் தான் மானமிகு என்பதன் முழு வெளிப்பாடு - பொருள் துல்லியமாக விளக்கப்பட்டு இருக்கிறது. இந்த மான மிகுவை ஏற்றுக்கொண்டு தான் கலைஞர் சமுதாயப் பணியாற்றி வருகிறார். ஆகவே தான் 22-ஆவது வயதில் அவர் குடிஅரசில் தீட்டாயிடுத்து எனும் கட் டுரை எழுதினார். எதற்காக எழுதினார்?
இசைத்துறையில் சீர்காழி மூவர் என்றும்
திருவாரூர் மூவர் என்றும் இசைவாணர்கள் இருந்து இருக்கின் றார்கள்.
திருவாரூர் மூவரில் ஒருவர் தியாகய்யர். இவர் இராமநாமக்கீர்த் தனைகளைத்
தெலுங்கில் பாடியவர். திருவையாறில் பிறந்தவர், பார்ப்பனர். திருவாரூர்
இசைவாணர் மூவருமே பார்ப்பனர்கள். சீர்காழி மூவர் பார்ப்பனர் அல்லாதவர்கள்.
திருவாரூர் மூவரை விட சீர்காழி மூவர் சீனியர்கள். ஆனால் அவர்கள் அவ்வளவாகக்
கண்டு கொள் ளப்படுவதில்லை என்பது தனியாகப் பேசப்பட வேண்டிய பொருள். திருவை
யாறில் பிறந்த தியாகைய்யருக்கு ஆண்டு தோறும் விழா எடுக்கப்பட்டு
பாடகர்கள் பாடுவார்கள். அப்படி பாடு கிறபோது ஒரு நாள் நிகழ்ச்சியில்
இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடினார். இவர் நந்தனார், பட்டினத்தார்
போன்ற படங்களிலும் நடித்தவர். தமிழர்! மாபெரும் இசைவாணர்!!
இவர் பாடி முடித்தவுடன் அடுத்த
நிகழ்ச்சியாகப் பாட வந்தவர் அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் எனும் இசை
யாளர். இவர் அந்த மேடையில் உடனே அமர்ந்து பாடாமல் தேசிகர் விநாயகர் மேல்
தமிழ்ப் பாட்டுப்பாடியதால் மேடை தீட்டாகிவிட்டதாம். ஆகவே தண்ணீர் ஊற்றி
மேடை கழுவப்பட்ட பிறகே அரியக்குடி பாடினார். இந்நிகழ்வைக் கண்டனம்
செய்துதான் கலைஞர் தீட்டாயிடுத்து எனும் கட்டுரையை குடி அரசில் எழுதினார்.
ஒரு தமிழன் - சூத்திரன் தமிழ்ப் பாட்டுப் பாடினான். ஆகவே மேடை
தீட்டாகிவிட்டது. நீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு அரியக் குடி பாடினார்
என்றால் அதற்கு என்ன பொருள்? அவர் பார்ப்பனர் - நால் வர்ண வரிசையில் மேலே
இருப்பவர். முகத்தில் பிறந்தவர். மேலாண்மையைக் காட்ட பூணூல்
அணிந்திருப்பார். பாடிய தமிழரோ கருத்த மேனியர்; தமிழர்; சூத்திரர்;
வேசிமகன் இவ்விழி நிலை மாற்றப்பட வேண்டுமானால் மானம் மிக வேண்டும். ஆகவே
கலைஞர் மானமிகு என்பதை சுயமரியாதைக்காரன் என்ப தோடு சேர்த்துக்கொண்டார்.
அந்த உணர்வு அவருக்கு 22 வயதிலேயே இருந்ததால் தான் தீட்டாயிடுத்து எனும்
கட்டுரையை அவர் எழுதினார்.
சுயமரியாதைக்காரர் என்றால் தன்மானம்
உள்ளவர் என்று பொருள். தன்மானம் என்று தமிழில் சொல்லு வதைவிட சுயமரியாதை
என்று மக்கள் விளங்கிக் கொள்ளும் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்று பெரியார்
விரும்பினார். நான் சூத்திரன் இல்லை - தாசி மகன் இல்லை - வேசி மகன் இல்லை.
இந்து சட்டம் சொல்கிறபடி இந்து மதம் சொல்கிறபடி நான் சூத்திரன் இல்லை.
நான் மானம் மிகுந்த தமிழன். வர்ணாசிரம வரம்புக்குள் வாராதவன், சுயமரியாதை
உள்ளவன் வர்ண அமைப்பை ஒப்புக்கொள்ள - ஏற்றுக் கொள்ள முடியாதவன். ஆகவே நான்
மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று கலைஞர் கூறுகிறார்
தெருச்சண்டையின் போது கூறுகிற மான,
ஈனத்திற்கும், சுயமரியாதை எனக்கும் இருக்கு என்று வேட்டியை தூக்கி மடித்து
கைகலப்பிற்கு தயார் ஆவதற்கும் நாம் மேலே கூறுகிற பொருள் இருக்க
வாய்ப்பில்லை, ஆகவே தான் கலைஞர் கூறுகிற மானம் - மானமிகு என்றாகி
சுயமரியாதைக்காரனோடு சேர்ந்து பெரியாரின் வாசம் பெற்று அது மனிதர்க்கு
அழகாகிறது. ஆகவேதான் கலைஞர் தம்மை மானமிகு சுயமரி யாதைக்காரன் என்று
ஒற்றைவரியில் சொன்னார். ஆனால் அதற்குள் இருக்கிற உட்பொதிந்த பொருளைத் தான்
நாம் மிகச்சுருக்கமாக இங்கே பார்த்தோம்.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவருக்கும் இருக்கிற சில முக்கிய வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிக முக்கிய மானதாகும். பெரியார் அவர்கள் தொடக்கக் காலத்தில் என்ன கொள்கைகளைப் பேசி வந்தாரோ அதே கொள்கைகளைத் தியாகராய நகரில் அவராற்றிய இறுதிப் பேருரை யிலும் எடுத்துரைத்தார். அவர் அரசி யல் அதிகாரத்தைக் கைப்பற்று வதைவிட பார்ப்பனர் அல்லாதாருக்கு உரிமைகள் பெற்றுத்தருவதற்கு தமக்கு உகந்த அரசாங்கத்தைக் கையாளாக வைத்துக்கொள்ளவே கருதினார். எந்த அரசாங்கம் ஆனாலும் அந்த அரசாங்கத்தை அவர் வேலை வாங்கினார். ஒரு போதும் அவர் அரசியல் அதிகாரத்தைப் பெற எண் ணியதில்லை. வாய்ப்புகள் வந்தபோதும் அதை அவர் விரும்பியதில்லை. தமது இயக்கத்தையும் அவர் ஈடுபடுத்த கருதியதில்லை. இப்படி ஓர் இயக்கத் தலைவரை, இயக்கத்தை உலகில் வேறெங்கும் நீங்கள் காணமுடியாது. இவை இரண்டும் அரிதினும் அரிதான எடுத்துக்காட்டுகள் காட்ட முடியாத செய்திகளாகும். ஆக, பெரியார் அவர்கள் அரசியல் அதிகாரம் இல்லா மலேயே சாதனைகள் புரிந்த தலைவர் ஆவார். இன்னும் அவர் வாழுகிறார்; அவர் கொள்கைகள் தேவைப்படுவ தாய் இருக்கின்றன.
அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தையே
தேர்தலில் ஈடுபாடு கொள்ளச் செய்து அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்று
எண்ணினார். பெரியார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நமது இயக்கக் கொள்கைகளை
நிறைவேற்ற ஓர் அரசாங்கம் நமக்கு கையாளாக இருக்கத் தேவையில்லை. நமக்கு நாமே
ஜனநாயகத்தின் மூலம் ஓர் அரசாங்கத்தை அமைத்து அதன் வழி நமது கொள்கைகளை - ஓர்
அரசியல் கட்டுமானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே அண்ணா
விரும்பினார். பெரியார் அரசியல் அதி காரம் இல்லாமலேயே வெளியிலிருந்து சாதனை
புரிந்தார். அண்ணாவோ அரசியல் அதிகாரம் பெறவிழைந்து திமுகவைத் தோற்றுவித்து
சாதனைகள் புரிந்தார். பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இருக்கிற
முக்கிய வேறுபாடுகளுள் தலையாய வேறுபாடு இதுவே!
அறிஞர் அண்ணா பெரியாரோடு இயக்கப்பணி
ஆற்றிய காலத்தில் எஸ்.இராமநாதன், எஸ்.குருசாமி, ப.ஜீவா னந்தம்,
கே.எம்.பாலசுப்பிரமணியம், பி.பாலசுப்பிரமணியம், முத்துசாமி வல்லத்தரசு,
ஆர்க்காடு இராமசாமி முதலியார், ஊ.பு.அ. சவுந்திர பாண்டி யனார்,
கே.வி.அழகர்சாமி, ஆர்.கே.சண் முகம் செட்டியார், முத்தையா செட்டியார்,
பி.டி.ராஜன், கி.ஆ.பெ.விசுவநாதம், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் போன்ற
தலைவர்கள், ஜமீன்தாரர்கள், நிலக் கிழார்கள், சிற்றரசர்கள், பெரும் பெருந்
தனக்காரர்கள் எல்லாம் இடம் பெற்று இருந்தார்கள். அறிஞர் அண்ணாவின் நுழைவு -
அவரது உழைப்பு, சிந்தனை, அணுகுமுறை மற்றத்தலைவர்களிலிருந்து வேறுபாடு
உடையதாய் இருந்தது. ஆகவே தமிழ்நாட்டு மக்களுக்கு நமது இயக்கத்தில்
பெரியாருக்கு பிறகு அறிஞர் அண்ணாவே மிக அதிகமாக தெரிந்தார். பாமரர் முதல்
படித்தவர் வரை அவர் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.
திமுக உருவானதற்குப் பிறகு பெரியாரின்
அரசியல் நிலை காமராசர் ஆதரவாக மாறி இருந்தது. முதலில் நாம் குறிப்பிட்டபடி
பெரியாருக்கு ஓர் அரசியல் ஊழியக்காரர் தேவை. அவர் காமராசராக இருந்தார்.
அவர் சார்ந்த கட்சி காங் கிரசாக இருந்தது. ஆகவே பெரியாரின் சூத்திரப்படி
காமராசரை, காங்கிரசைப் பெரியார் ஆதரித்தார். அவர் கணக்குபடி சாதனை வரவுகள்
நிகழ்ந்தன. அதே நேரத்தில் திமுகவைப் பெரியார் கடுமையாக விமர்சனம் செய்தார்.
1949 செப்டம்பரிலிருந்து 1967 மார்ச் 3-ஆம் தேதி வரை பெரியார் திமுகவை
எதிர்த் தாலும் கொள்கை சார்ந்த சாதனைகள் இருபுறமும் தொடர்ந்தன. 1967
மார்ச் 4-ஆம் தேதி திருச்சிக்குச் சென்று அறிஞர் அண்ணா பெரியாரைச் சந்தித்
தார். உடன் நாவலர், கலைஞர் சென்று இருந்தனர். 1967-ஆம் ஆண்டு தேர் தலில்
திமுக மகத்தான வெற்றி பெற்றது. 6-ஆம் தேதி ஆட்சிப்பொறுப்பை ஏற்ப தற்கு
முன்பு பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப் பெறவும், ஆதரவு கோரவுமே
சென்றிருந்தார் அண்ணா! சந்திப்புக் கான முன் ஏற்பாடுகளை அன்பில்
தருமலிங்கம் செய்து இருந்தார். சந்திப்பு 10 நிமிடங்களே நிகழ்ந்தன. அது
முதல் பெரியார் தாம் மதிக்கிற வரையில் திமுக ஆதரவு நிலையையே மேற்கொண்டார்.
அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்று 23
மாதங்கள் ஆட்சி செய்தார். அவர் ஆட்சியின் போது மூன்று மகத் தான சாதனைகளை
அறிஞர் அண்ணா கொள்கை வழி நிறைவேற்றிக் காட் டினார்.
1) நமது நாட்டிற்குத் தமிழ்நாடு எனப்பெயர் சூட்டியமை.
2) சுயமரியாதைத் திருமணச் சட்டத்திருத்தம்
3) இருமொழித் திட்டம் ஆகியன வாகும். இவை மூன்றுமே திராவிட இயக்கத்தின்
கொள்கை வழி நிறை வேற்றப்பட்ட சாதனைகளாகும். தமிழ் நாடு பெயர் மாற்றம்
என்பது மாபெரும் சாதனையாகும். அது நமது தனித் தன்மையை நிலைநாட்டுவது ஆகும்.
சுயமரியாதைத் திருமணச் சட்டத் திருத்தம் சமுதாய வாழ்வில் வர்ணாசிரம சாதன
மேலாண்மையைப் புறக்கணிப்ப தோடு சமஸ்கிருதமய மாதலைத் தடுப்பதும் ஆகும்.
இருமொழித்திட்டம் தமிழகத்தில் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயன்பாட்டு
மொழிகளாக இருக்கும். மூன்றாவதாக இந்திக்கு இங்கே இடமில்லை என்பதைத் தமிழ்
நாட்டில் சட்டப்பூர்வமாக அறிவித்தது ஆகும். இந்தி என்பது என்ன? சமஸ்
கிருதத்தின் கிளை மொழியல்லவா? கள்ளமொழி அல்லவா? அதன் ஆதிக் கத்தை
ஒழிப்பதும் இருமொழித் திட்டத் தின் செயல்பாடாகும். ஆக அறிஞர் அண்ணா
காலத்தில் நிறைவேற் றப்பட்ட இம்மூன்று சாதனைகளும் நாம் அனை வரும் மானமிகு
சுயமரியாதைக்காரர் கள் என்பதை எடுத்துரைப்பனவாகும்.
அறிஞர் அண்ணா காலத்தில் மேற்கண்ட
இச்சாதனைகளை நினைவு கூரும் அதே வேளையில் நமது பாட்டன் மார் இயக்கமான
நீதிக்கட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் நமக்குச் சொல்வது என்ன?
1) சமூக நீதி 2) அறநிலையப் பாதுக்காப்புச் சட்டம் 3) திராவிடர் கழகம் 4)
திராவிட முன்னேற் றக்கழகம் இவை நான்கிற்கும் உரிய பொதுப் பெயர் தான்
திராவிட(ர்) இயக்கம்!
நாம்
அடிக்கடி கூறுவது உண்டு; எழுதுவதும் உண்டு . திராவிட(ர்) இயக்கம்
என்பதற்கு என்ன கொள்கை? ஜாதிகளற்ற வர்ணாசிரமம் நீங்கிய, பகுத்தறிவோடு கூடிய
சமத்துவ சம தர்ம சமுதாயம் காணப்பாடுபடுவது தான் திராவிட(ர்) இயக்கத்தின்
கொள்கை. திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்டு இருக்கிறது.
நீதிக்கட்சி 17 ஆண் டுகள்; அறிஞர் அண்ணா சுமார் 2 ஆண்டுகள்; கலைஞர் சுமார்
18 ஆண்டுகள் ஆக 37 ஆண்டுகள் தமிழ் நாட்டை ஆண்டு வந்து இருக்கின்றோம்.
எம்மைப் பொறுத்தவரை அஇஅதி முகவை
திராவிட(ர்) இயக்கமாகக் கருதுவதில்லை. ஆனால் அக்கட்சி யினர் ஆட்சியோ
எம்ஜிஆர் 10 ஆண்டு கள், ஜெயலலிதா இப்போதைய ஆட்சியோடு சேர்த்து 15 ஆண்டுகள்
ஆக 25 ஆண்டுகள் திராவிட(ர்) இயக்கக் கணக்கில் சேர்த்துக் கொள் ளும்படியான
அவலநிலையை உரு வாக்கி இருக்கிறார்கள் என்பதையும் இந்த நேரத்தில் உங்கள்
முன் நினைவு படுத்த வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம். ஆனாலும் மேலே
சுட்டிக்காட்டியுள்ள 37 ஆண்டுகளில் மானம் மிகுந்த சுயமரியாதை தன்மை யுள்ள
ஒரு தமிழ் கட்டுமானத்தை நாம் அவர்களின் மூலம் உருவாக்கி இருக் கின்றோம்.
அதன் முன்னுரையாகத் தான் ஆறு சாதனைகளை மேலே சுருக்கமாக எடுத்துக்காட்டி இரு
க்கின்றோம். அந்த முன்னோர் வழியை மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தம்மைப்
பிரகடனப்படுத்திக் கொள் ளும் கலைஞர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது
அத்தன்மைக் குன் றாது செயல்பட்டார். ஆகவே அவர் மானமிகு சுயமரியாதைக்காரர்
என்று தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்ள முற்றிலும் தகுதி உடையவர் ஆனார்.
இதை நாம் எப்படி அறிந்து கொள் வது? தெரிந்து கொள்வது என்று உங்களுக்குத்
தோன்றலையாம்.
நீங்கள் அதற்காக கவலைப்பட வேண்டியது
இல்லை. அவரது சாத னைகளிலிருந்து மகத்தானவையாக ஆறு சாத னைகளைத் தெளிவு
செய்து கொள் வோம். 1) சமூக நீதி, 2) அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆக
சட்டம், 3) இந்தி எதிர்ப்பு, 4) தமிழில் அர்ச்சனை, 5) தமிழ்ச் செம்மொழி, 6)
திருவள்ளுவரைப் போற்றுதல்; திருக்குறள் பரப்புரை இந்த ஆறு சாதனைகளை
மட்டும் முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு அவர் எப்படி மானமிகு சுயமரியாதைக்
காரராக விளங்குகிறார் என்பதைப் பார்ப்போம்.
கலைஞர் அவர்கள் பெரியார், அறிஞர்
அண்ணாவின் கொள்கை களை திராவிட(ர்) இயக்கத்தின் கொள்கைகளை சொல்லும் வகை
யெல்லாம் நிறைவேற்றிய மாபெரும் சாதனையாளர் ஆவார். கலைஞர்
எஸ்.எஸ்.எல்.சி.வரை படித்தவர், தேர்வில் வெற்றி பெறாதவர். ஏன்? அறிஞர்
அண்ணா கூட மூன்றாவது முறை தான் எஸ்.எஸ்.எல்.சி தேறினார். கணிதத்தில் அண்ணா
ரொம்ப வீக்! கலைஞர் இயற்கையின் மைந்தர் என்று ஏற்கெ னவே குறிப்பிட்டு
இருக்கிறோம். அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் வேறு பாடு உண்டு என்று
பெரியார் கூறுவார். கலைஞர் புத்திசாலி, கலைஞர், பெரி யாரின் குடிஅரசில்
சுமார் ஓர் ஆண்டு பணியாற்றிவிட்டு கோவையில் திரைப் படங்களுக்கு உரையாடல்
அமைக்கும் பணிக்குச் சென்று விட்டார்.
திராவிட(ர்) இயக்கத்தின் கலை, இலக்கியப்
பணிகள் 1943-க்குப் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன் திராவிட இயக்கத்தாருள் முதன் முதலாகத் திரைப்படத்துறைக்கு
எழுதச் சென்றவர். அவருக்குப் பிறகு கலைஞரே உரையாடல் அமைக்கச் சென்றவராக
விளங்குகிறார். இவர் எழுதிய ராஜகுமாரி, அபிமன்யூ போன்ற படங்கள் 1947,
1948-லேயே வெளிவந்தன. அறிஞர் அண்ணாவின் நல்ல தம்பியும், வேலைக்காரியும்
1949-இல் தான் வெளிவந்தன. அறிஞர் அண்ணா கலைஞரை விட 15 ஆண்டுகள் மூத்தவர்.
ராஜகுமாரியும், அபிமன்யூவும் வெளிவந்த போது கலைஞரின் வயது 23, 24 தான்!
எப்படி அறிஞர் அண்ணா நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத் தலைவர்களைக் கடந்து
முன்னேறி னாரோ, அப்படித்தான் திமுகவிலிருந்த பட்டதாரி தலைவர்களைக் கடந்து
கலைஞர் முன்னேறினார். பட்டதாரிகள் அவருக்கு முட்டுக்கட்டையாக இருந் தனர்
என்றாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறியவர் கலைஞர். இதனை ஒரு கூட்டத்தில்
ஒப்புக்கொண்டு பேசினார். பேராசிரியர் அவர்கள்! அப்படிப்பட்ட தலைவர்தான்
தம்மை மானமிகு சுயமரியாதைக்காரன் என்று பிரகடனப் படுத்திக் கொண்டார்.
நாம் மேலே கலைஞரின் ஆறு முக்கிய
சாதனைகளைப் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றோம். அதில் முதலாவதாகச்
சமூகநீதியைப் பற்றி கூறி இருக் கின்றோம். சமூகநீதி என்பது என்ன? நால்வர்ணப்
பகுப்பு பஞ்சமரைச் சேர்த்து அய்ந்தாகப் பிரிக்கப்பட்டுள்ள சமூக அமைப்பில்
உள்ள ஜாதிகளிடையே கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகிய வற்றில் சமவாய்ப்பை
சட்டபூர்வமாக அனைவருக்கும் வழங்குவது சமூகநீதி. இப்படி சமவாய்ப்பை
உருவாக்கித் தருவ தால் ஒரு கட்டத்தில் ஜாதிகளற்ற, வர்ணங்கள் நீங்கிய
சமுதாயம் உரு வாகும். அதற்கு இன்னும் சில நூற்றாண் டுகள் ஆகலாம்,
இந்தப்பணியை 1920-களில் நீதிக்கட்சி தொடங்கியது.
கலைஞர் தொலைக்காட்சியில் திராவிட இயக்கம் -
100 எனும் நிகழ்ச் சியில் நாம் பங்கேற்று 88 நிகழ்வுகளில் பேசினோம்.
எம்மால் நிறைவு அடைய முடியவில்லை. அவ்வளவு செய்திகள் இருக்கின்றன. மானமிகு
சுயமரியாதைக் காரன் என்பதை நீங்கள் எளிதான தலைப்பாகக் கருதவேண்டாம். அதில்
உட்பொதிந்துள்ள செய்திகளை இங்கே சொல்ல வேண்டுமானால் 100 கூட் டங்கள் இதுபோல
பேசலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் சுருக் கமாக இங்கே எடுத்து
கூறுகின்றோம்.
1920-களில் நீதிக்கட்சி சமூக நீதியை அறிமுகப்படுத்தினாலும் 1840-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி காலத்திலேயே நிலை ஆணைகளை சமூகநீதிக்காகப் போட்டு இருக் கிறார்கள். காங்கிரஸ் முதல் அமைச் சரும் 1940-களில் சமூகநீதி உத்தரவை பிற்பட்டோருக்கென உயர்த்தியும் தனித்தும் ஓர் ஆணையில் அறிவித் தார். 1950-ஆம் ஆண்டு இந்தியா குடிஅரசு நாடு ஆனதற்குப் பிறகு நமது எதிரிகள் சும்மா இல்லை. நீதி மன்றத்திற்குப் போனார்கள். நாமோ முதல் அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வரும்வரை சமூகநீதிக்குப் போராடினோம். சமூகநீதிக்கான உத் தரவை நாம் எப்போது பிறப்பித்தோமோ அப்போது நமது எதிரிகள் அதன் மீது கண்ணாகவே இருந்து வந்தார்கள். இன்னமும் அந்தப் பார்வையிலேயே அவர்கள் இருக்கிறார்கள்.
1920-களில் நீதிக்கட்சி சமூக நீதியை அறிமுகப்படுத்தினாலும் 1840-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி காலத்திலேயே நிலை ஆணைகளை சமூகநீதிக்காகப் போட்டு இருக் கிறார்கள். காங்கிரஸ் முதல் அமைச் சரும் 1940-களில் சமூகநீதி உத்தரவை பிற்பட்டோருக்கென உயர்த்தியும் தனித்தும் ஓர் ஆணையில் அறிவித் தார். 1950-ஆம் ஆண்டு இந்தியா குடிஅரசு நாடு ஆனதற்குப் பிறகு நமது எதிரிகள் சும்மா இல்லை. நீதி மன்றத்திற்குப் போனார்கள். நாமோ முதல் அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வரும்வரை சமூகநீதிக்குப் போராடினோம். சமூகநீதிக்கான உத் தரவை நாம் எப்போது பிறப்பித்தோமோ அப்போது நமது எதிரிகள் அதன் மீது கண்ணாகவே இருந்து வந்தார்கள். இன்னமும் அந்தப் பார்வையிலேயே அவர்கள் இருக்கிறார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகச்
சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். அந்தச் சட்டம் இப்போது உச்சநீதிமன்றத்தின்
முன்னே இருந்து வருகிறது. அதற்காகத் திராவிடர் கழகம் போராடி வருவதையும்
நீங்கள் அறிந்திருப்பீர்கள். அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்
என்பதை 1917-ஆம் ஆண்டு திரா விடன் இதழ் எழுதியது. பெரியார் அதை நெஞ்சில்
தைத்த முள்ளாகக் கருதிப் போராட்டத்தை நிறுத்தினார். நீங்கள் கேட்கலாம்.
கோவில் அர்ச்சகர் ஆவதில் என்ன இருக்கிறது? அதில் என்ன வருமானம் வந்துவிடப்
போகிறது? அப்பொறுப்பில் பார்ப்பனர்களே இருந்துவிட்டுப் போனால் என்ன? கடவுள்
நம்பிக்கை இல்லாதவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என
வற்புறுத்துவது எதற்கு? - என்று வினாக்களைத் தொடுத்துக் கொண்டே போகலாம்.
1970-ஆம் ஆண்டு சட்டம் நிறை
வேற்றப்பட்டும் அது உச்சநீதிமன்றத் தில் கிடப்பில் போடப்பட்டு இருப்பதி
லிருந்தே அதன் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். இதில் நாம்
தலையிட்டுச் சட்டம் செய்வதன் நோக்கம் வர்ணாசிரமத்தை ஒழிப்பதா கும். அனைத்து
ஜாதியினருக்கும் இதன் மூலமாகச் சமத்துவத்தை ஏற் படுத்துவது ஆகும்.
வருமானம் என் பதைவிட பார்ப்பன சமூக மேலாண்மை ஒழிக்கப்படுவது முக்கியமாகும்.
கடவுள் இல்லையென்று சொல்கிறவர் கள் இதனை முன்னெடுத்துச் செல் வதற்குக்
காரணம் சமன்மையை நிலை நாட்டுவதற்குரிய போராட்டமாக இதைக்கருதுவதே ஆகும்.
இவ்வளவு உள்ளடக்கத்தைப் பெற்று இருக்கிற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
ஆகிற சட்டத்தை மானமிகு சுயமரியா தைக்காரர் தானே கொண்டு வரமுடியும். இதற்கான
விளக்கத்தை முன்னரே நாம் குறிப்பிட்டு இருப்பதைத் தோழர்கள் ஒப்பீடு செய்து
பார்த்தால் கலைஞரின் பேருரு எத்தகைய மகத்தானது என்பதை நீங்கள் புரிந்து
கொள்வீர்கள்.
தமிழில் அர்ச்சனை என்பதும் நீண்ட கால தமிழர்களின் போராட்டம்தான்!
... எவற்றினுக்கும்
மேலான தன்மொழியைத்
தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு
பொதுவினின்று நீக்கி
வைத்தால் பொறுக்கலாமோ?
தமிழில் அர்ச்சனை என்பதும் நீண்ட கால தமிழர்களின் போராட்டம்தான்!
... எவற்றினுக்கும்
மேலான தன்மொழியைத்
தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு
பொதுவினின்று நீக்கி
வைத்தால் பொறுக்கலாமோ?
என்று கேட்டார் புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன், தமிழில் வழிபாடு கோவில் களில் நிகழ்த்தப் பெறுவது எப்போது
முதல் நிறுத்தப்பட்டது? வடமொழியில் - சமஸ்கிருதத்தில் கோவில்களில் வழிபாடு
எப்போது முதல் செய்யத் தொடங்கினர்? - என்கிற வினாக்களை எழுப்பினார்
நமக்குக்கிடைக்கிற விடை என்ன? இந்த இரண்டிற்கும் ஒரே விடைதான்- இராஜராஜ
சோழன்தான் காரணம்! அவன்தான் சமஸ்கிருத வழிபாட்டைப் புகுத்தியவன்,
தொல்காப்பியர் காலத் திலோ சங்க காலத்திலோ சமஸ்கிருதத் தில் வழிபாடு எனும்
பேச்சுக்கே இட மில்லை. இருண்ட காலம் என்று சொல் லப்படுகிற களப்பிரர்
காலத்தில் கூட சமஸ்கிருத வழிபாடு நிகழ்த்தப்பட வில்லை. ஒரு சிலர் பல்லவர்
காலத்தில் தான் சமஸ்கிருத வழிபாடு தொடங்கியது என்பர். எது எப்படி
இருப்பினும் சமஸ் கிருதம் அர்ச்சனை மொழியாயிற்று. 1930-களிலும்,
1940-களிலும் சிக்கல்கள் எடுத்துக்கூறப்பட்டன. 1950-களில் பெரியார், அறிஞர்
அண்ணா, குன்றக் குடி அடிகளார் போன்ற பெரியவர்களி டையே பிரச்சினை
விவாதிக்கப்பட்டது. அதாவது மக்களிடையேயும் எடுத்து வைக்கப்பட்டது.
பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது
(1963-1967) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி சந்திரசேக ரேந்திர
சரஸ்வதி சங்கராச்சாரியர் தமிழில் அர்ச்சனையைத் தொடங்கி வைத்தார். தொடங்கி
வைத்ததோடு சரி. பிறகு ஏன் தொடரவில்லை? அங்கேதான் இருக்கிறது சூட்சமம்!
சமஸ்கிருதத்தின் இடத்தில் தமிழை எப்படி அமர வைக்க சங்கராச்சாரியார்
விரும்புவார்? கலைஞர் அவர்கள் 1970-களிலேயே தமிழில் அர்ச் சனையை
தொடங்கினாலும், தமிழ்குடி மகன் அறநிலையப் பாதுக்காப்புத்துறை அமைச்சராக
இருந்தபோது அதனை ஓர் இயக்கமாகவே தமிழக கோவில்களில் ஈடுபாட்டோடு செய்தார்.
அவருக்கு கலைஞர் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
கோவில்களுக்கு வழிபாடு நிகழ்த்தச் செல்லுகிற தமிழர்கள் தமிழில் அர்ச் சனை செய்ய வேண்டும் என அர்ச்ச கரிடம் சொல்ல வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று கோவில்களில் விளம்பரப்பலகை எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய் யுங்கள் என்று அர்ச்சகரிடம் கேட்கத் தயங்குகிறார்கள் அல்லது வெட்கப்படு கிறார்கள். நம்மில் ஒரு சிலர் தமிழில் செய்தால் என்ன? சமஸ்கிருதத்தில் செய்தால் என்ன? என்று விவரம் புரியா மல் இருக்கிறார்கள். உரிமை மறந்து பக்தியில் மூழ்கிவிடுகிறார்கள் கோவி லுக்குச் செல்லுகிற ஒவ்வொருவரும் நினைவாக தமிழில் அர்ச்சனை செய் யுங்கள் என்று கேட்பீர்களேயானால் தமிழ், கோயில்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
கோவில்களுக்கு வழிபாடு நிகழ்த்தச் செல்லுகிற தமிழர்கள் தமிழில் அர்ச் சனை செய்ய வேண்டும் என அர்ச்ச கரிடம் சொல்ல வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று கோவில்களில் விளம்பரப்பலகை எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய் யுங்கள் என்று அர்ச்சகரிடம் கேட்கத் தயங்குகிறார்கள் அல்லது வெட்கப்படு கிறார்கள். நம்மில் ஒரு சிலர் தமிழில் செய்தால் என்ன? சமஸ்கிருதத்தில் செய்தால் என்ன? என்று விவரம் புரியா மல் இருக்கிறார்கள். உரிமை மறந்து பக்தியில் மூழ்கிவிடுகிறார்கள் கோவி லுக்குச் செல்லுகிற ஒவ்வொருவரும் நினைவாக தமிழில் அர்ச்சனை செய் யுங்கள் என்று கேட்பீர்களேயானால் தமிழ், கோயில்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
கலைஞர் ஓர் இயக்கமாய் இந்தத் தமிழில்
வழிபாட்டு முறையை ஏன் கொண்டுவந்தார்? அறிஞர் அண்ணா நமது நாட்டிற்குத்
தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றித் தமிழ்
கட்டுமானம் இருக்க வேண்டும். அழிந்துபோன தமிழியல் வழக்கை மீட்டுருவாக்கம்
செய்ய வேண்டும். அதனை உறுதியாகக்கட்டி எழுப்ப வேண்டும். அதுதான் தமிழ்த்
தேசிய வாழ்வின் அடிப்படை, அதை மானமிகு சுயமரியாதைக்காரரால்தான்
செய்யமுடியும். ஆகவேதான் தமிழில் அர்ச்சனையை கலைஞர் செயல்படுத் தினார்.
தமிழ்செம்மொழி என்பதை மத்திய அரசை
அறிவிக்கச் செய்தவர் கலைஞர். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1900-ஆம்
ஆண்டில் சென்னைப் பல் கலைக்கழகத்தில் தமிழைப் பாடத் திட்டத்தில்
சேர்ப்பதற்குப்போராட வேண் டியதாக இருந்தது. மற்ற இந்திய மொழி களுக்கு உள்ள
தகுதி வழங்கப்பட்டு இருந்தது. இன்னும் சொல்வதானால் சென்னைப் பல்கலைக்கழகம்
தொடங் கிய காலத்திலிருந்தே தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி
மறுக்கப்பட்டு வந்தது. திராவிட இயக்கத்தின் ஆதரவு அமைப்புகளான சைவ
சித்தாந்த பெரு மன்றமும், கரந்தைத் தமிழ்ச் சங்கமும், பார்ப்பனர் அல்லாதார்
மாநாடுகளிலும் 1918, 1919, 1920 ஆகிய ஆண்டுகளில் தமிழுக்குச் செம்மொழித்
தகுதி வழங்கத் தீர்மானங்களை நிறைவேற்றின. அத் தீர்மானங்களில் பாரசீகம்,
அரபி, சமஸ் கிருத மொழிகளுக்கு இணையாகச் செம் மொழித் தரத்தில் தமிழ்
மொழியையும் ஆட்சிப்பணித் தேர்வுகளில் வைக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டனர்.
இன்னொரு செய்தியை இங்கே சொல்லியாக
வேண்டும். சமஸ்கிரு தத்தை எந்த அரசும் இதற்கு முன்பாக செம்மொழி என்று
அறிவிக்கவில்லை. உலகிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசு ஒரு
மொழியைச் செம்மொழி என்று அறிவித்திருப்பது தமிழுக்கு மட்டுமே நிகழ்ந்து
இருக்கிறது என்பதைத் தமிழர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச்
சாதனையைச் செய்தார் கலைஞர். ஏன் செய்தார்? அவர் மானமிகு சுயமரியா தைக்காரர்
என்பதால்! இக்கோரிக்கை எழுந்து ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு நிகழ்ந்து
இருக்கிறது. அவை எப்படி யெப்படியெல்லாம் நிகழ்ந்து இருக் கின்றன?
எப்படிப்பட்ட அறிஞர்கள் எல்லாம் செம்மொழியைப் பற்றி பேசி இருக்கிறார்கள்
என்று நாம் பார்க்கிற போது நமக்கு மெய்யெல்லாம் சிலிர்த்துப் போகிறது.இராபர்ட் கால்டுவெல், ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) பரிதிமாற் கலைஞர் ஆகியோரின் ஆய்வுகளே தமிழ்ச்செ
அறிஞர்களுக்கு இடையே தமிழ் மொழிக்குச்
செம்மொழித்தகுதி வழங்கப்படவில்லை என்ற குறைபாடு தொடர்ந்து இருந்து வந்தது.
1995-ஆம் ஆண்டு தஞ்சையில் 8-ஆவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது
மணவை முஸ்தபா அவர் களை உள்ளடக்கிய வல்லுநர்குழு தமிழைச்
செம்மொழியாக்கக்கோரி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை ஒன்றைத்
தந்தது. அதனால் பயனேதும் ஏற்பட்டுவிடவில்லை, 1996-இல் கலைஞர் முதல்வரானார்.
1996-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் நாள்
செம்மொழிப் பட்டியலில் தமிழ் எனத் தலைப்பிட்டு தினமணி நாளேடு தலையங்கம்
ஒன்றை எழுதி இருந்தது. அதில் மத்திய அரசின் பரிசீலனைக்குத் தமிழ்ச்
செம்மொழித்தகுதி வழங்கும் கோரிக்கையை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்
கொண்டதோடு அரசு இந்தச் சமயத்தை நழுவவிடக்கூடாது என்றும் எச்சரித்து
இருந்தது. கலைஞர் எச் சரிக்கையாக இருந்து வந்தார். ஆகவே அவரது அரசு மணவை
முஸ்தபா, வா.செ.குழந்தைசாமி, ஜான் சாமு வேல், பொற்கோ ஆகியோரைக் கொண்ட ஒரு
குழுவை அமைந்தது. அதோடு தமிழைச் செம்மொழியாக்கக் கோரி மத்திய அரசுக்குக்
கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தது. மத்திய அரசு அந்தக் கடிதத்தை
மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது, அந்நிறுவனம்
செம்மொழி என அறிவிக்கலாம் எனப்பரிந்துரைத்தது.
இதன் பிறகு சிறுசிறு அமைப்பு களும், சில
அரசியல் கட்சிகளும் செம்மொழிபற்றிய கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசை வலி
யுறுத்திப் போராட்டங்களை நடத்தின, பலன் இல்லை. மீண்டும் திமுக தலை வர்
கலைஞர் அவர்கள் 22.4.2003-இல் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழைச் செம்மொழியாக
அறிவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். அந்த முயற்சி 12.10.2004-இல்
மத்திய அரசின் அறிவிக்கையாக வெளிவந்தது. இதன் பிறகு மற்ற மொழிகளின் தகுதி
அறிந்து பரிந்துரைக்கக் குழு அமைத்து 1.11.2004 மத்திய அரசு அறிவிக்கை
வெளியிட்டது. ஆக 2004-ஆம் ஆண்டே தமிழ்ச் செம்மொழி ஆகிவிட்டது. 2005-இல்
சமஸ்கிருதத்திற்கும், 2008-இல் கன்னடத்திற்கும், தெலுங்கிற்கும் 2013-இல்
மலையாளத்திற்கு செம்மொழி அறிவிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த
அறிவிப்புகளில் நியாயம் இல்லை என்றாலும் தமிழ்தான் செம்மொழி என்று
முதன்முதலில் அறிவிக்கப்பட்டு இருக் கிறது. இதை பற்றி செய்திகள் நிரம்ப
இருப்பினும் இங்கே நாம் கூறப் போவதில்லை. நேரம் இல்லை, சுமார்
நூற்றாண்டுக்கு மேலாக இருந்த ஒரு பிரச்சினையை கலைஞர் முடித்து வைத்தார்.
தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கச் செய்து அவர் இமாலய வெற்றியைப்
பெற்றுவிட்டார்.
தமிழ்ச் செம்மொழி ஆனதற்கு பிறகு பெரிய
மாநாட்டை கோவையில் நடத்தி னார். கலைஞர், இடதுசாரி ஆய்வாளர் கள் தேவையில்லாத
விமர்சனங்களைச் செய்தார்கள். நாம் அவர்களை ஒன்று கேட்டுக்கொள்கிறோம்.
நம்மொழி செம் மொழி என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்ளும் வகையில்,
தெரிந்து கொள்ளும் வகையில், அறிந்து கொள்ளும் வகையில் மாநாடு ஏற்பாடு
செய்தது தவறா? சமஸ்கிருதத்திற்கு உலக மாநாடு நடைபெற்றது. தெலுங் கிற்கு உலக
மாநாடு நடைபெற்றது. இந்திக்கு உலக மாநாடு நடைபெற்றது. இது யாருக்காவது
தெரியுமா? கன் னடமும், மலையாளமும் உலக மாநாடு களை நடத்தட்டுமே! யாராவது
தெரிந்து கொள்கிறார்களா என்பதைப் பார்ப் போமா? முடியாது. திராவிட இயக்கத்
தாரால் மட்டுமே அப்படி உலகம் தழுவிய மாநாடு நடத்தமுடியும், அந்தப் பெரு
மிதத்திலும் சில ஆய்வாளர்கள் மாசு கற்பித்தார்கள்.
ஆகவே நண்பர்களே மானமிகு
சுயமரியாதைக்காரர்தான் தாய்மொழி யாம் தமிழைச் செம்மொழி என்று அறி விக்கச்
செய்யமுடியும். அந்தச் சொற் றொடரின் உள்ளீடு அப்படி! அதன் தனித் தன்மை
அப்படி! அதற்கு எவரும் எதிர் நின்று அறைகூவல் விட முடியாது.
அடுத்து திருவள்ளுவரைப் போற்று வது,
திருக்குறளைப் பரப்புவது கலை ஞரின் பணியாக இருந்து வருகிறது. இதற்குக்
காரணம் என்ன? ஈ.வெ. இராமசாமி பெரியார் 1927-இல் திருக் குறளைப் படித்தார்.
அதில் அவருக்குச் சில அய்யங்கள் தோன்றின. அவருடைய நண்பர் அறிஞர்
பா.வே.மாணிக்க நாயக் கரிடத்தில் விவாதித்துத் தெரிந்து கொண்டார். பெரியார்
எல்லாத் திருக்குறளையும் ஏற்றுக் கொள்ளு வதில்லை. திருக்குறள் வர்ணாசிரம
முறைக்கு எதிரானது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கொள்கையை
முழங்குவது, ஆகவே திராவிட இயக்கம் திருக்குறளைப் பரப்புகிறது, திருவள்
ளுவரையும் போற்றுகிறது.
1949 ஜனவரி மாதம் 15, 16 தேதிகளில் சென்னை
பிராட்வேயில் பெரியார் திருக் குறள் மாநாடு நடத்தினார். அப்போது திமுகழகம்
உருவாகவில்லை. செப்டம் பரில்தான் தோன்றப்போகிறது. அம் மாநாட்டில் பேசுகிற
போதுதான் திருக் குறளுக்கு சிறந்த பகுத்தறிவு சார்ந்த உரை ஒன்று
எழுதப்படவேண்டும் என்கிற வேண்டுகோளைப் பெரியார் வைக்கிறார். இம்மாநாடு
நடந்த சில மாதங்களில் சங்கரமடம் ஒரு திருக்குறள் உரையை வெளியிடுகிறது
என்றால் அதற்குக் காரணம் என்ன? என்பதை நமது தோழர்கள் ஆராய்ந்து பார்க்க
வேண்டும். அதற்குப் பிறகுதான் மு.வ.வின் தெளி வுரை வந்தது. அது நமது
இயக்கப் பார்வையில் இருக்கவில்லை அதைப் பாரதிதாசனே கண்டனம் செய்து
இருக்கிறார். புலவர் குழந்தையின் உரை வெளிவந்தது, அதற்கு முன்பும் திருக்
குறள் உரைகள் இருந்தன. அவை வருணாசிரமம் பேசின. மதம் சார்ந்த கருத்தை முன்
வைத்தன.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தமிழ் இறைவனாரின் திருக்குறளிலிருந்து ஒரு சொல் எடுத்து இயம்பிக் காட்டமாட் டாயா? என்று கேட்பார். தமிழ் இறை வனார் என்றால் - தமிழியல் தலைமை என்று பொருள். அந்தக் கட்டமைப்பைக் கட்டுவதற்கு பெரியார் திருக்குறளை சலித்து எடுத்தார். புரட்சிக் கவிஞர் கவிதை வடித்தார். திருவள்ளுவர் ஓவியம் வரைய காரணமாக இருந்தார். சிலைகள் அமைய அதுவே அடிப்படையாக அமைந் தது. அறிஞர் அண்ணா திருக்குறள் பற்றிக் கூறிய கருத்துகள் எல்லாம் அவ ருடைய படைப்புகளில் விரவி நிற்கின்றன.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தமிழ் இறைவனாரின் திருக்குறளிலிருந்து ஒரு சொல் எடுத்து இயம்பிக் காட்டமாட் டாயா? என்று கேட்பார். தமிழ் இறை வனார் என்றால் - தமிழியல் தலைமை என்று பொருள். அந்தக் கட்டமைப்பைக் கட்டுவதற்கு பெரியார் திருக்குறளை சலித்து எடுத்தார். புரட்சிக் கவிஞர் கவிதை வடித்தார். திருவள்ளுவர் ஓவியம் வரைய காரணமாக இருந்தார். சிலைகள் அமைய அதுவே அடிப்படையாக அமைந் தது. அறிஞர் அண்ணா திருக்குறள் பற்றிக் கூறிய கருத்துகள் எல்லாம் அவ ருடைய படைப்புகளில் விரவி நிற்கின்றன.
கலைஞர் திருக்குறளில் தோய்ந்தவர்,
குறளோவியம் தீட்டியவர்; தெளிவுரை எழுதியவர். சென்னை மாநகராட்சி சார்பாக
அமர்ந்த மேனியாக உள்ள வள்ளுவர் சிலையை திமுக நிர்வாகத்தின் சார்பில்
1964-இல் மயிலாப்பூரில் அமைத்தது என்றால் காரணம் என்ன? சென்னை மெரினா
கடற்கரையில் நின்ற நிலையில் திருவள்ளுவர் சிலை 1968-இல் உலகத்தமிழ்
மாநாட்டின் போது அமைக் கப்பட்டதே அதற்கு என்ன பொருள்? தென்குமரியில் 133
அடி உயரத்தில் வள்ளுவர் கம்பீரமாக நிற்கிறாரே அதற்கு யார் காரணம்? வள்ளுவர்
கோட்டம் அமைத்தது யார்? கலைஞர் அல்லவா?
அறிஞர் அண்ணாவினுடைய அமைச் சரவையில்
கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அப் போது அவர்
போக்குவரத்துத்துறைக்கும் அமைச்சர், பேருந்துகளில் திருவள்ளு வரின் ஓவியம்
படமாக வைக்கப்பட்டு அங்கே திருக்குறளும் அச்சடித்து சட்டம் போட்டு மாட்டி
வைக்கப்பட்டது. இப் போதும் பேருந்துகளில் நீங்கள் காண லாம். நீங்கள்
காண்கிற அந்த வள்ளு வரின் ஓவியம் தான் குடியாத்தம் தமிழ்ச் செல்வன்
பணச்செலவு செய்து புரட்சிக் கவிஞரின் ஆலோசனையின் பேரில், வேணுகோபால சர்மா
எனும் ஓவியர் வரைந்ததாகும். அதனைத்தான் முன்னர் நமது பேச்சில்
குறிப்பிட்டோம்.
அந்த ஓவியம் முற்றாக முடிந்தபின்
மயிலாப்பூரில் ஒரு வீட்டில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அறிஞர்
அண்ணா, காமராசர், கலைஞர், நாவலர் போன்ற தலைவர்கள் எல்லாம் பார்வை யிட்டு
ஒப்புதல் தெரிவித்த ஓவியமாகும். 1960-ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காங்கிரஸ்
மைதானத்தில் சி.சுப்பிர மணியம், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கலந்து கொண்ட
கூட்டத்தில் அந்த ஓவியம் வெளியிடப்பட்டது. இந்த ஓவியம்தான் அஞ்சல் தலையாக
வெளி யிடப்பட்டது, நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் வைக்கப்பட்டு
இருக்கிறது.
டாக்டர் சுப்பராயன் அஞ்சல்துறை அமைச்சராக
இருக்கிறபோதுதான் திருவள்ளுவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மாதிரி ஓவியத்தைக் காட்டியபோது ஒருவர் பூணூல் இல்லையே
என்று கேட்டு இருக்கிறார். அதற்கு சுப்பராயன் திருவள்ளுவர் மார்பின்
குறுக்கே அணிந்திருக்கும் மேலாடையின் உள்ளே பூணூல் மறைந்து இருக்கிறது
என்று நினைத்துக்கொள்ளுங்கள். பூணூல் இருக்கத் தேவையில்லை என்கிறவர்கள்
மேலாடைதான் அணிந்திருப்பதாகக் கருதிக் கொள்ளுங்கள் என்றார். இவ் வளவு தூரம்
திருவள்ளுவரின் ஓவியம் வேலை செய்து இருக்கிறது. கலைஞர் அவர்கள்
திருவள்ளுவர் சிலைகளையும், திருக்குறள் பரப்புரையையும் ஏன் மேற்கொள்கிறார்
என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள்.
மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தம்மைக்
கலைஞர் கூறிக்கொள் வது தெருச்சண்டையில் பேசப்படுகிற மானமோ சுயமரியாதையோ
அல்ல! மானமிகு சுயமரியாதைக்காரர் என்றால் வர்ணாசிரம சனாதன தர்மம் சொல்கிற
சூத்திர மக்கள், தாசி மக்கள், வேசி மக்கள், அடிமைகள் என்று கூறுவதை மாற்றி
நாங்கள் அப்படி அல்லர். நாங்கள் தமிழர்கள் - தொல்குடிகள் மானம் மிகுந்
தவர்கள் என்று சொல்வது ஆகும். அதைச் சிந்தித்து மனத்தில் இருத்தி தான்
கலைஞர் அவர்கள் அரசியல் சாத னைகள் நிகழ்த்தி வந்து இருக்கிறார்கள். அதனால்
தான் ஆதிக்க சக்திகளிடம் - மதவாதிகளிடம் எதிர்ப்புகள் அவருக்கு எப்போதும்
அதிகம் இருந்து வந்து இருக்கிறது.
இதுவன்றி, பழந்தமிழ் கட்டு மானத்தை
மீட்டுருவாக்க முனைந்து அவர் பணியாற்றி வருபவராக இன் றளவும் திகழுகிறார்.
இப்படிப்பட்ட மகத்தான சாதனைகளைப் புரிந்து வரலாறாக மாறி இருக்கிற கலைஞர்
என்றும் தமிழர்களின் எண்ணத்தில் நிறைந்து இருப்பார் எனக்கூறி உரையை நிறைவு
செய்கின்றோம்.
No comments:
Post a Comment