மருத்துவம் முதல் மாவட்ட ஆட்சி பணி வரை மானுட சேவையில்
மருத்துவ மேல் படிப்பு படிக்க சென்னையில் அண்ணன் சங்கர் இல்லத்தில் தங்கியிருந்த போது, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் அமர்ந்து இருப்பார் .அப்போது அங்கு படிக்கும் மாணவர்களை பார்த்து நாமும் சிவில் சர்வீஸ் எழுதினால் என்ன என முயற்சி செய்தார்
ப்ரீலிமினரிக்கு புவியியல் பாடத்தையும் மெயின் தேர்வுக்கு புவியியல் மற்றும் விலங்கியல் பாடத்தையும் தேர்ந்தெடுத்து 2009 ஆண்டு நடைப்பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 152 ஆம் இடத்தை பெற்று முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் . 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தார் .டேராடூன் அடுத்த முசௌரியில் உள்ள லால்பகதூர் சாஸ்த்ரி தேசியஆட்சிப் பணி அகாதமியில் மூன்று மாத கால பயிற்சி முடித்து ஒரிசா மாநில கிரன்சூர் மாவட்ட பயிற்சி ஆட்சியராக பணியில் உள்ளார்
இளம் வயதில் தந்தையை இழந்த மருத்துவர் பிருந்தா அவர்களின் வாழ்க்கையில் அவரது சகோதரர் திரு .சங்கர் அவர்களின் பங்கு மகத்தானது ,போற்றத்தக்கது ,கல்வி ,பணி மட்டும் அல்ல மருத்துவர் பிருந்தா அவர்களின் வாழ்வினையரையும் அவரே ஏற்பாடு செய்தார் .இணையத்தின் மூலம் மணமக்களை ஒருவருக்கொருவர் தேர்ந்து எடுத்துக்கொண்டனர்.
மருத்துவர் பிருந்தா அவர்களின் வாழ்விணையர் முனைவர் .இ.சிவக்குமார் அலஸ்காவில் உள்ள ஜியார்ஜியா மருத்துவ பல்கலைக் கழகத்தில் புற்றுநோய் துறை அறிஞராக பணியாற்றுகின்றார் .இவர்கள் இருவருக்கும் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி ஊற்றங்கரையில் திருமணம் நடைபெற்றது
.
நம்ம நாட்டுல மக்கள் தொகை அதிகம். அது நம்பளோட வளர்ச்சிக்கு தடையா? இது ஐ.ஏ.எஸ். நேர்முக தேர்வின் போது மருத்துவர் பிருந்தா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஒரு போதும் தடையில்லை. மக்கள் சக்தியை முழுமையாக பரவலாக பயன்படுத்தினால், நம்முடைய வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியே அடையாது. மேலும், ஜனத்தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ள சில வெளிநாடுகளில் நம் மனித வளத்தை பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் கிட்டும். பிருந்தாவின் இந்த பதில் தான் ஐ.ஏ.எஸ் “. தேர்வில் அகில இந்திய அளவில் ரேங்க் ஹோல்டராக அவரை உயர்த்தியிருக்கிறது.
ஒரு எளிய விவசாய ,பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து தமது கடும் உழைப்பால் தன்னையும் உயர்த்தி,பிறருக்கும் உதவி எடுத்துக்காட்டாக விளங்கி வரும் திரு .சங்கர் அவர்களுக்கும் பெண்ணாய் பிறத்தலே பாவம் என்கிற சமுகத்தில் தன்னையே உதாரணமாக்கி

மங்கையர் செம்மல் மருத்துவர் பிருந்தா !
கிருட்டினகிரி மாவட்டத்தின் முதல் இந்திய ஆட்சி பணி பொறுப்பை (I .A S )ஏற்றவரும் ,முதல் முயற்சியிலேயே தனது சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்றவருமான ஊற்றங்கரையின் பெருமைக்குரிய மண்ணின் மைந்தர் மருத்துவர் .தே.பிருந்தா அவர்கள் கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் 15 -5 -1982 அன்று தேவராஜ் -தெய்வானை தம்பதியருக்கு இளைய மகளாய் பிறந்தார். தமிழகத்தின் முன்னணி ஐ.ஏ.எஸ்., அகாடமிகளில் ஒன்றான சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் திரு .சங்கர் அவர்கள் இவருடைய சகோதரர் ஆவார் .
ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல் வகுப்பினையும் ,இரண்டாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான உயர் நிலைக் கல்வியினை ஊற்றங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியிலும், தனது மேல் நிலைக் கல்வியினை இராசிபுரம் எஸ் .ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார் .விளையாட்டிலும் நாட்டியத்திலும் மிகுந்த ஆர்வம் உள்ள மருத்துவர் .பிருந்தா அவர்கள் பள்ளி ,கல்லூரி நாட்களில் பல பரிசுகளை பெற்றுள்ளார் .மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற அவரின் தணியாத ஆர்வத்தினால் நுழைவு தேர்வு எழுதி ,மருத்துவத்திற்கு இன்னும் மதிப்பெண்கள் தேவைப்பட்ட சூழலில் இம்ப்ருமென்ட் எழுதி திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம்(MBBS ) கற்றார் .அதன் பின்னர் 5 மாத காலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றினார்.
ப்ரீலிமினரிக்கு புவியியல் பாடத்தையும் மெயின் தேர்வுக்கு புவியியல் மற்றும் விலங்கியல் பாடத்தையும் தேர்ந்தெடுத்து 2009 ஆண்டு நடைப்பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 152 ஆம் இடத்தை பெற்று முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் . 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தார் .டேராடூன் அடுத்த முசௌரியில் உள்ள லால்பகதூர் சாஸ்த்ரி தேசியஆட்சிப் பணி அகாதமியில் மூன்று மாத கால பயிற்சி முடித்து ஒரிசா மாநில கிரன்சூர் மாவட்ட பயிற்சி ஆட்சியராக பணியில் உள்ளார்
இளம் வயதில் தந்தையை இழந்த மருத்துவர் பிருந்தா அவர்களின் வாழ்க்கையில் அவரது சகோதரர் திரு .சங்கர் அவர்களின் பங்கு மகத்தானது ,போற்றத்தக்கது ,கல்வி ,பணி மட்டும் அல்ல மருத்துவர் பிருந்தா அவர்களின் வாழ்வினையரையும் அவரே ஏற்பாடு செய்தார் .இணையத்தின் மூலம் மணமக்களை ஒருவருக்கொருவர் தேர்ந்து எடுத்துக்கொண்டனர்.

.
நம்ம நாட்டுல மக்கள் தொகை அதிகம். அது நம்பளோட வளர்ச்சிக்கு தடையா? இது ஐ.ஏ.எஸ். நேர்முக தேர்வின் போது மருத்துவர் பிருந்தா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஒரு போதும் தடையில்லை. மக்கள் சக்தியை முழுமையாக பரவலாக பயன்படுத்தினால், நம்முடைய வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியே அடையாது. மேலும், ஜனத்தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ள சில வெளிநாடுகளில் நம் மனித வளத்தை பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் கிட்டும். பிருந்தாவின் இந்த பதில் தான் ஐ.ஏ.எஸ் “. தேர்வில் அகில இந்திய அளவில் ரேங்க் ஹோல்டராக அவரை உயர்த்தியிருக்கிறது.
ஒரு எளிய விவசாய ,பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து தமது கடும் உழைப்பால் தன்னையும் உயர்த்தி,பிறருக்கும் உதவி எடுத்துக்காட்டாக விளங்கி வரும் திரு .சங்கர் அவர்களுக்கும் பெண்ணாய் பிறத்தலே பாவம் என்கிற சமுகத்தில் தன்னையே உதாரணமாக்கி
''செல்வப் பிள்ளாய் இன்று புவியின் பெண்கள் சிறு நிலையில் இருக்கவில்லை ;விழித்துக்கொண்டார் !
என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் எழுச்சியுற்ற பெண்ணாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் .பிருந்தா அவர்களையும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் பாராட்டி மகிழ்கிறது"அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
எண்ணும்படி அமைத்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகும்நாள் எந்நாளோ அந்நாளேதுன்பமெல்லாம்
போகும்நாள் இன்பப் புதிய நாள் என்றுரைப்போம்!'' என்றார் புரட்சிக் கவிஞர் இன்றைக்கு அந்த புதிய நாளுக்கான வாயிலை திறந்த பிருந்தா அவர்களின் மானுட சேவை என்றும் தொடரட்டும் வாழ்க !

மாவட்ட ஆட்சியர் பிருந்தாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்கள்.
ReplyDelete