''தந்தையே தா உன் கைத்தடி''
அனைத்து உலக மகளிர் நாள் கருத்தரங்கம்
திராவிட இயக்க வீராங்கனைகள் படத்திறப்பு
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 16 ஆம் நிகழ்வாக மார்ச் 4 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் உலக மகளிர் தின விழாவும் கிருட்டினகிரி மாவட்டத்தின் முதல் இந்திய ஆட்சி பணியிற்கு (I .A .S )தேர்வு பெற்ற ஊற்றங்கரையின் பெருமைக்குரிய மருத்துவர் தே.பிருந்தா IAS அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைப்பெற்றது
இவ் விழாவிற்கு மகளிர் பாசறையின் மாவட்ட செயலாளரும் மாதம்பதி அரசினர்உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியருமான மு .இந்திராகாந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .
விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலர் முருகம்மாள் அப்பாசாமி அவர்கள் மாத அறிக்கை வாசித்தார் .
அறிமுக உரையை ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்பகவல்லி கணேசன் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கண்காணிப்பாளர் கரு.தணிகைகுமாரி அவர்களும் ,சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் முதல்வருமான பிலோமினா அவர்களும் ,திலகவதி அருள் அவர்களும் ,வழக்குரைஞர் பிரபாவதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி ,அமைப்பாளர் பழ .வெங்கடாசலம் ,துணைசெயலாளர் ஆடிட்டர் ராஜேந்திரன் ,கி.ஆ .கோபாலன் , ஆகியோர் சிறப்பு செய்தனர்.
இவ் விழாவில் அன்னை மணியம்மையார் ,அன்னை நாகம்மையார் ,மூவலூர் ராமாமிர்தம் ,மீனாம்பாள் சிவராஜ் ,தருமாம்பாள் ஆகிய திராவிட இயக்க வீராங்கனைகள் படத்தினை ஊற்றங்கரை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் அழகுமணி திறந்து வைத்து உரையாற்றினார்.
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் ,நகருக்கு பெருமை சேர்த்த பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டப்படுவார் .இம் மாதம் கிருட்டினகிரி மாவட்டத்தின் முதல் இந்திய ஆட்சி பணி பொறுப்பை (I .A S )ஏற்றவரும் ,முதல் முயற்சியிலேயே தனது சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்றவருமான ஊற்றங்கரையின் பெருமைக்குரிய மண்ணின் மைந்தர் மருத்துவர் .தே.பிருந்தா அவர்கள் அவர்கள் பாராட்டப்பட்டார். திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா அவர்கள் பாராட்டுரையாற்றினார்
.மருத்துவர் .தே.பிருந்தா அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாய் திகழ்ந்த அவரது தாயார் தெய்வாணை பாராட்டப்பட்டார். அவருக்கு மேனாள் திராவிடர் கழக மாவட்ட மகளிரணி தலைவர் கலைமணி பழனியப்பன் சால்வை அணிவித்தார்
ஊற்றங்கரை புனித அந்தோணியார் திருச்சபையின் அருட்தந்தை அ.ஜோசப் அவர்கள் மருத்துவர் .தே .பிருந்தா அவர்களுக்கு சால்வை அணிவித்தார்
'' பெரியாரும் பெண்ணியமும் '' என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் என்கிற பெருமை பெற்றவரும் கவிஞரும் முனைவருமான ருக்மணி அவர்கள் தந்தையே தா உன் கைத் தடி என்னும் தலைப்பில் ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் மிகமிக அற்புதமான காணக்கிடைக்காத அதிசயம் பெரியார். பெரியாரின் சிந்தனை யிலும், செயலிலும் மிக உன்னதமானது பெண்ணுரிமைக் கோட்பாடு. தனி வாழ்க்கை வேறு; பொதுவாழ்க்கை வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாதது பெரியாரின் வாழ்வு. உண்மையும், நேர்மையும், துணிச்சலும் மனிதத்துவமும் நிறைந்த அவரைப் போன்ற பொதுத்தொண்டு புரிந்தோர் அரிதினும் அரிதானவர்களே! உலகில் பெண்ணியச் சிந்தனைக்கும், பெண் விடுதலைக்குமான செயல்பாடு களுக்கும் முன் மாதிரியாகவும், வேறு எவரையும் ஒப்பிடமுடியாதபடி திகழ்ந்த வரும் பெரியாரே ஆவார். பெண் உரிமைக் காவலர் என்பதன் முழு அடையாளமும் அவரேஎன்று கூறி .இன்னமும் பெண்ணுக்கு வாழ்வுரிமை கிடைக்காமல், தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பாலும் எருக்கம்பாலும் தந்து கொல்லப்படும் நிலையில் தந்தையின் தத்துவமே பெண் இனத்தை மீட்டு எடுக்கும் கைத்தடியாய் பயன் படுத்துவோம் என்று உரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியை வித்யா பிரபு தொகுத்து வழங்கினார் .நா .வசந்த மல்லி சிவராஜ் நன்றி உரையாற்றினார்
நிகழ்ச்சியில் பங்கு பெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் நகலெடுத்து வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவு வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு ,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.

No comments:
Post a Comment