விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Saturday, 28 July 2012

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நடைப்பெற்ற பச்சைத் தமிழர் காமராசர் 110 வது பிறந்த நாள் விழா கருத்தரங்கம்























































ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பச்சைத்தமிழர்  காமராசர்  அவர்களின் 110  ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா  கருத்தரங்கம் ,   கடந்த  ஜூலை   22 ஆம்    தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற்றது

இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின்  துணை செயலாளரும் இந்திய தேசிய காங்கிரெஸ் பொறுப்பாளருமான இர .திருநாவுக்கரசு   
வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின்  பொருளாளர் அண்ணா .அப்பாசாமிவாசித்தார் ,விழா அறிமுக உரையை வாசகர் வட்டத்தின்  துணைத் தலைவர் இர .வேங்கடம்  ஆற்றினார்
  இந் நிகழ்ச்சிக்கு தருமபுரி காங்கிரெஸ் மாவட்ட பொருளாளரும் ,மூப்பனார் பேரவையின் மாநில துணை தலைவர்  கே.எ .அரங்கநாதன் தலைமை தாங்கி கல்வி கடவுள் என்றால் அது காமராசர் தான் எந்த கடவுளும் பொறியாளராகவும்,மருத்துவராகவும் ஆக்கவில்லை காமராசர் தான் அதை செய்தார் பெரியார் சொன்னதை அவர் செய்ததால் தான் காமராசர் புகழை எவராலும் மறைக்க முடியவில்லை .இன்றைக்கு காமராசர் பிறந்த நாளை கொண்டாடும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தை பாராட்டுவதாக தனது தலைமை உரையையாற்றினார்

ஊற்றங்கரை பேரூராட்சி தலைவர் எஸ் .பூபதி ,திராவிடர் கழக மாவட்ட செயலாளர்  வி.ஜி.இளங்கோ
,ஊற்றங்கரை காமராசர் அறக்கட்டளை தலைவர் டி.எஸ் .திருநாதன்  ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்

ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் நரிக்குறவர் இனத்திலிருந்து மருத்துவம் பயில தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் மாணவர் எம் .ராஜபாண்டி  
அவர்களும்  2011 - 2012 ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி தேர்வில் தமிழில் மாநில அளவில் முன்றாமிடம் பெற்ற வ.வைத்தீஸ்வரி அவர்களும் இம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிது உறுதுணையாக இருந்த அதியமான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சீனி .திருமால்முருகன் அவர்களும்    பாராட்டப்பட்டனர்   .திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி பாரட்டுரையாற்றினார் .தேசியமுரசின் ஆசிரியர் கோபண்ணா அவர்கள் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார் .

  ஜூலை 15 மறைமலை அடிகள்  பிறந்த நாளையொட்டி
மறைமலை  அடிகள்  படத்தினை  ஊற்றங்கரை தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் தி.இர.குருநாதன்  படத்தினை திறந்து  வைத்து உரையாற்றினார் .தேசியமுரசின் ஆசிரியரும்  காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ஆ.கோபண்ணா  அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டுபெரியாரும் பெருந்தலைவரும் என்னும் தலைப்பில் சிறப்பானதொரு கருத்துரையாற்றினார்   வருகை தந்த  சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள்  காந்தன் ஆசிரியர் ,கரன்சந்த் சிங் ,ஆசிரியர் சிவலிங்கம் ,நிருபர் கீ.ஆ.கோபாலன் ,க.வே .சுந்தரேவேலன்ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் .விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் . திரிணாமுல்காங்கிரெஸ் மாவட்ட தலைவர் க.அசோக்  நன்றியுரையாற்றினார்

நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் காமராசர்  செய்தி நகலும் பெரியார் பிஞ்சு இதழில் எம்.ராஜபாண்டி குறித்த கட்டுரை  நகலும்  வழங்கப்பட்டது  .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்