உங்கள் பங்களிப்பை தாருங்கள் !
அன்புடையீர் ! வணக்கம் நமது ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து ஜனவரி 27 ஆம் நாள் வெள்ளிவிழா கருத்தரங்கத்தை நடத்த உள்ளது . வாசகர் வட்டத்தின் இரண்டு ஆண்டுகள் சிறப்புடன் நடைபெற உதவிய நன்கொடையாளர்கள் ,புரவலர் பெருமக்கள் ,அரசு அதிகாரிகள் ,கல்வி நிறுவனங்கள் ,ஊர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அனைவரும் நம் நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்கள் .
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தலைப்புக்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன .தமிழகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் ,சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர் .ஊற்றங்கரை நகருக்கு பெருமை சேர்த்த நம் பெருமைக்குரிய மண்ணின் மைந்தர்கள் பாராட்டப்பட்டனர் .ஊற்றங்கரை நகரின் சமுக இலக்கிய வரலாற்றில் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் தனது கால் தடத்தை அழுத்தமாய் பதிந்துள்ளதை எவரும் மறுக்கமாட்டார்கள்
இந்த சாதனை தொடரவும் விடுதலை வாசகர் வட்டத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைந்து சிறந்து விளங்கவும் சமுக சிந்தனை உள்ள தங்களை போன்றவர்களின் பங்களிப்பை அன்புடன் எதிர் நோக்குகிறோம்
அடுத்த ஓராண்டிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் உறுப்பினர் கட்டணம் ரூ 250 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது .அஞ்சல் செலவு சொற்பொழிவாளர் வழிசெலவு ,அச்சகச் செலவு ஆகிய பலவற்றையும் கருத்தில் கொண்டு இத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது .விடுதலை வாசகர் வட்டத்தின் வளர்ச்சியை மேலும் முன்னெடுக்க வேண்டி தங்களும் தங்கள் நண்பர்களும் உறுப்பினராக வேண்டுகிறோம்
இரண்டு புரவலர்கள் ஒரு கூட்டநிகழ்விற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் புரவலர்களை சேர்க்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டு இவ் ஆண்டு புரவலர் தொகை ரூ 2000 மட்டும் நிர்ணைக்கப் பட்டுள்ளது சமுக சிந்தனை உள்ள வள்ளல்
பெருமக்கள் புரவலர் திட்டத்தில் இணைந்தும் ,அதற்க்கு மேல் நன்கொடை அளித்தும் வாசகர் வட்ட நிகழ்சிகளை தொடர்து நடத்தி தர அன்புடன் வேண்டுகிறோம்
ஜாதி மத அரசியல் பேதமின்றி மனித நேயத்தை மட்டுமே முன் வைத்து விடுதலை வாசகர் வட்டத்தை வளர்த்திடுவோம் !மாதந்தோறும் கருத்து செறிவுள்ள ஆய்வரங்குகளை நடத்திடுவோம் !மண்ணின் மைந்தர்களை உச்சி முகர்ந்து பாராட்டுவோம் !விடுதலை வாசகர் வட்டத்திற்கு என்றென்றும் நம் பங்களிப்பை செலுத்திடுவோம் !
வாசகர் வட்டத்தில் நடைபெற்றுள்ள கருத்தரங்கமும் - கருத்துரையாலர்களும்
------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
விடுதலை ஆசிரியர் கி.வீரமணி பிறந்தநாள் கருத்தரங்கம் -முன்னால் N .G .O சங்க தலைவர் அறிவுக்கரசு
தமிழ் புத்தாண்டு& தமிழர் திருநாள் கருத்தரங்கம் -துரை.சந்திரசேகரன்
இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் -Dr .சிவசுபிரமனியம் M .D .(cardio )
மகளிர் தின கருத்தரங்கம் -வழக்கறிஞ்சர் .அ.அருள்மொழி
தன்னம்பிக்கை பயிற்சி கருத்தரங்கம் -தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஜாகிர் ஹுசைன்
மே தின கருத்தரங்கம் - சாகுல் அமீத்
திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்தரங்கம் -பெரியாரியல் பேச்சாளர் பெரியார் செல்வன்
காமராஜர் பிறந்த நாள் விழா -கவிஞர் கலி பூங்குன்றன்
தமிழ் இணைய பயிலரங்கம் -புதுவை பேராசிரியர் .மு.இளங்கோவன்
பெரியார் பிறந்த நாள் விழா -முன்னால் அமைச்சர் முல்லைவேந்தன்
ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் - நிழல் .திருநாவுக்கரசு
மூடநம்பிக்கை குறித்த சிறப்பு கருத்தரங்கம் - மருத்துவர் எழிலன்
மொழிப் போர் தியாகிகள் நினைவு கருத்தரங்கம் -இ .ஜி .சுகவனம் M P
தமிழர் தொன்மை குறித்த கருத்தரங்கம் -ஒரிசா பாலு என்கிற சிவ.பாலசுப்ரமணியம்
உலக மகளிர் தின விழா - கவிஞர் .ருக்மணி
திராவிடர் இயக்க 100 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் -நக்கீரன் துணை ஆசிரியர் கோவி .லெனின்
நகைச்சுவை குறித்த சிறப்பு கருத்தரங்கம் -தமிழ்நெஞ்சன்
வாசகர் வட்ட சிறப்பு கருத்தரங்கம் -தமிழர் தலைவர் வீரமணி
பச்சைத்தமிழர் காமராஜர் 110 ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா - தேசிய முரசு ஆசிரியர் கோபண்ணா
மனிதநேயக் கருத்தரங்கம் -பேராசிரியர் சிராஜுதீன்
தந்தை பெரியார் 110 ஆம் நாள் கருத்தரங்கம் -வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா
நெதுசு நூற்றண்டு விழா -பேராசிரியர் மங்கள முருகேசன்
ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கம் - வழக்கறிஞர் பூவை .புலிகேசி
வாசகர் வட்டத்தால் பாராட்டப்பட்டவர்கள்
------------------------------
----------------------------------------
1 .பெரியார் பெருந்தொண்டர்கள்
2 .வித்யா மந்திர் நிறுவனர் வே.சந்திரசேகரன்
3 .பத்திரிக்கை முகவர் ரகோத்தமன்
4 .நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை புவனேஸ்வரி
5 .அரிமா .முத்து .சந்திரசேகரன் CAK பெட்ரோலியம்
6 .நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் வரதராசன்
7 .அதியமான் கல்வி நிறுவனர் திருமால் முருகன்
8 .மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன்
9 .சங்கர் IAS அகடமியின் நிறுவனர் சங்கர்
10 வித்யா மந்திர் கல்லூரியின் முதல்வர் .க.அருள்
11 தேசிய விருது பெற்ற ஒளிபதிவாளர் கோ.முரளி
12 மருத்துவர் .கொ.மாரிமுத்து
13 .கவிஞர் .சாகுல் அமீத்
14 மருத்துவர் வெ.தேவராசு
.15 .ஓடிஸா மாநில சார் ஆட்சியர் மரு.பிருந்தா
16 நகரின் மூத்த திராவிட இயக்க உறுப்பினர் வ.சாமிநாதன்
17 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தலைவர் மாரிசெட்டி
18 வடஅமரிக்க தமிழ்சங்கத் தலைவர் தண்டபானிகுப்புசாமி
19 நரிக்குறவர் இனத்திலிருந்து மருத்துவம் பயில தேந்தெடுக்கப் பட்ட முதல் மாணவர் ராஜ பாண்டி
20 உலக தமிழ்க் கவிஞர் பேரவையின் அமைப்பாளர் .கவி .செங்குட்டுவன்
21 நல்லாசிரியர் விருது பெற்ற மு.இந்திராகாந்தி
22 நல்லாசிரியர் விருது பெற்ற பெ.ராசேந்திரன்
23சாதி மறுப்பு மணம் செய்து கொண்ட தம்பதியினர்
தொடர்புக்கு
பழ .வெங்கடாசலம் -9443910444
அமைப்பாளர்
தணிகை .ஜி .கருணாநிதி-9865817165
தலைவர்
பழ.பிரபு -9942166695
செயலர் pazhaprabu @gmail .com
வாசகர் வட்ட செய்திகள் ,புகைப்படங்கள் ,விடியோக்களைக் காண http://ugividuthalai.blogspot.in/