விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Saturday, 16 February 2013

மூன்றாம்ஆண்டு தொடக்க விழா மற்றும் மத வெறி எதிர்ப்பு கருத்தரங்கம்


















ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில்  மதவெறி எதிர்ப்பு  கருத்தரங்கமும் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவும்    கடந்த  ஜனவரி   27 ஆம்    தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற்றது 

இந் நிகழ்ச்சிக்குவிடுதலை  வாசகர் வட்டத்தின்  துணை செயலாளர் ஆடிட்டர் ராசேந்திரன் வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின்  பொருளாளர் அண்ணா .அப்பாசாமிவாசித்தார் ,  
  இந் நிகழ்ச்சிக்கு அரூர் சட்ட மன்ற தொகுதியின் மார்க்ஸ்சிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர் டெல்லிபாபு அவர்கள் தலைமை வகித்து தோழர் ஜீவா படத்தினை திறந்து வைத்து தலைமை உரையாற்றினார் 
ஊற்றங்கரை மண்டல மருந்து வணிகர்கள் சங்க பொருளாளர் சி.வி.தாமரைசெல்வன் ,  திராவிடர் கழக மாவட்ட செயலாளர்  வி.ஜி இளங்கோ , திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் , ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார். திராவிடர் கழக சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  மதம் மனிதம் மகாத்மா என்னும் தலைப்பில்   சிறப்பானதொரு கருத்துரையாற்றினார்   வருகை தந்த  சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள்  புலவர் அண்ணாமலை ,மண்டல மாணவரணி அமைப்பாளர் சிற்றரசன்  ,பேராசிரியர் செந்தில்நாதன் ,ஆடிடர் ராசேந்திரன் ,ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் .விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் வாசகர் வட்ட துணைத் தலைவர் .இரா.பழனி   நன்றியுரையாற்றினார் 

அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்