விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 29 August 2013

விடுதலை வாசகர் வட்டத்தில் நம்மாழ்வார்


இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம் மற்றும் நாதஸ்வர கலைஞர் டி.என் .இராசரத்தினம் அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள் படத்திறப்பு விழா  புகைப்படங்கள்




















































                        ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற
                                                      இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கமும்
                  நாதஸ்வர கலைஞர் டி.என். இராசரத்தினம் அவர்களின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் படத்திறப்பு விழா
ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கமும் நாதஸ்வர கலைஞர் டி.என். இராசரத்தினம் அவர்களின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் படத்திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது .
  .நிகழ்ச்சிக்கு முன்னதாக அறிவுதிருக்கோவிலில் திராவிடர் தமிழர் இயக்க பொதுச் செயலர் பேராசிரியர் சுபவீ அவர்கள் ''பெரியாரும் வேதாந்திரி மகரிஷியும் ''என்கிற தலைப்பில் ஆற்றிய உரை ஒலிப்பரப்பட்டது .அதை தொடர்ந்து நாதஸ்வர கலைஞர் டி.என். இராசரத்தினம் அவர்களின் நாதஸ்வர இசை ஒலிப்பரப்பட்டது
இந் நிகழ்ச்சிக்கு  வாசகர் வட்ட துணை செயலாளர் ஆடிட்டர் ராசேந்திரன்   வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா . அப்பாசாமி வாசித்தார் ,வாசகர் வட்ட  செயலாளர்  பழ.பிரபு அறிமுக உரையை ஆற்றினார்
    இந் நிகழ்ச்சிக்கு அரிமா சங்க பொறுப்பாளர் தொழிலதிபர் முத்து .சந்திரசேகரன்  தலைமை வகித்து உரையாற்றினார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் , மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வி.ஜி .இளங்கோ  ,திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ .வெங்கடாசலம் ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி  ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
    நாதஸ்வர கலைஞர் டி.என். இராசரத்தினம் அவர்களின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு அவரது படத்தினை டி.என். இராசரத்தினம்அவர்களின் சீடர் கிருஷ்ணா பிள்ளை அவர்களின் நேரடி சீடர் ஊற்றங்கரை நகரின் மூத்த இசை கலைஞர் பாண்டு என்கிற பாண்டுரங்கம்  படத்தினை திறந்து வைத்து உணர்வுபூர்வமாக உரையாற்றினார் .அவரை  தொடர்ந்து கவிஞர் சாகுல் அமீத் அவர்கள் நாதஸ்வர கலைஞர் டி.என். இராசரத்தினம் அவர்களின் பெருமைகளை விளக்கி மிகச் சிறப்பான கருத்துரையை ஆற்றினார்
     . .வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் ,கடவுள் இல்லை சிவக்குமார் ,திராவிடர் மகளிர் பாசறையின் பொருளாளர் அகிலா எழிலரசன் ,ஒன்றிய இளைஞ்சரணி பொறுப்பாளர் சிவராஜ் ,மூளை நரம்பியல் மருத்துவர் வசந்தகுமார்   ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர்  மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம் தொடங்கியதும் தோழர் மகேந்திரன் அறிமுக உரையாற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்
      ''அழிந்து வரும் இயற்கை விவசாயமும் தலைகுனியும் நவீன விவசாயமும் '' என்னும்  தலைப்பில் வேளாண் இயற்க்கை விஞ்சானி முனைவர் கோ .நம்மாழ்வார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் மூட நம்பிக்கை பணிகள் குறித்தும் இன்றைய நவீன வேளாண்மையில் யூரியா பூச்சிமருந்துகளால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் பெரியார் தொண்டர்களும் இயற்கை ஆர்வலர்களும் ஒன்றிணைந்து போராடவேண்டிய அவசியம் குறித்தும்    மிக சிறப்பான கருத்துரையை  வருகை தந்த பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் உரையாற்றினார் .அவரது உரைக்கு பின்னர் பார்வையாளர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியது .பல கேள்விகளுக்கு ஆதாரத்துடனும் பாடல்களை பாடியும் முனைவர் நம்மாழ்வார் பதில் அளித்தது அனைவரையும் ஈர்த்தது .
நிறைவாக வாசகர் வட்ட துணைதலைவர் இர .வேங்கடம்   நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியினை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் தொகுத்து வழங்கினார்
            அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்