விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Saturday, 30 November 2013

'என் தந்தை கலைவாணர் ''

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்ற கலைவாணர் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் 
''என் தந்தை கலைவாணர் '' என்னும் கலைவாணரின் மகன் என் .எஸ்.கே .நல்லதம்பி ஆற்றிய நெகிழ்சியுரை




கலைவாணர் என்.எஸ்.கே பிறந்த நாள் கருத்தரங்கம் மற்றும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் படத்திறப்பு விழா

















































ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்ற கலைவாணர் என்.எஸ்.கே பிறந்த நாள் கருத்தரங்கம்   மற்றும்  நடிகர் காகா ராதாகிருஷ்ணன் படத்திறப்பு விழா


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 35 ஆம் நிகழ்வான கலைவாணர் என்.எஸ்.கே பிறந்த நாள் கருத்தரங்கம் மற்றும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் படத்திறப்பு விழா நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு முன்னதாக கலைவாணரின் திரைக்காவியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும் நகைச்சுவை காட்சிகளும் ஒளிபரப்ப பட்டன  ஒளிபரப்பப்பட்டது .இந் நிகழ்ச்சிக்கு  வாசகர் வட்ட துணை செயலர் ஆடிட்டர் ராஜேந்திரன்   வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா . அப்பாசாமி வாசித்தார் ,வாசகர் வட்ட  செயலாளர்  பழ.பிரபு விழா அறிமுக உரையை ஆற்றினார்
    இந் நிகழ்ச்சிக்கு சமாஜ்வாதி கட்சியின் மாவட்ட தலைவர் நரேஷ் யாதவ்  தலைமை வகித்து உரையாற்றினார் .புரட்சி திலகம் கே.பாக்கியராஜ் ரசிகர் மன்ற தலைவர் கே .சந்திரன் ,சிவாஜி ரசிகர் மன்ற பொறுப்பாளரும் கிராமநிர்வாக அலுவலருமான முகமது உஸ்மான்   , ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி  ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
  திராவிட இயக்க நடிகர் காகா ராதா கிருஷ்ணன் படத்தினை பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ் .ஏ.காந்தன்   திறந்து வைத்து உரையாற்றினார் .நடிகர் காகா ராதா கிருஷ்ணன் அவர்களை குறித்த புகழுரையை கவிஞர் இ .சாகுல் அமீத் உரையாற்றினர்
     . .வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு மத்தூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் கி .முருகேசன் ,மேனாள் பேரூராட்சி தலைவர் பொன்.பரமசிவம் ,மேனாள் மருத்துவ இணை இயக்குனர் வே.தேவராசன் ,  மேனாள் நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் .சிவலிங்கம்  தலைவர் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர்
            திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ .வெங்கடாசலம் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையை ஆற்றினார் . ''என் தந்தை கலைவாணர்  ''என்னும் தலைப்பில்  கலைவாணரின் மகன் என்,எஸ்.கே  நல்லதம்பி அவர்கள்  உணர்வுபூர்வமாக  உரையாற்றி. பார்வையாளர்கள் பல கேள்விகளுக்கு மிகச் சிறப்பான பதில் அளித்தார்
நிறைவாக வாசகர் வட்ட பொருளார் அண்ணா .அப்பாசாமி  நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியினை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் தொகுத்து வழங்கினார்
            அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட், ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்

35 ஆம் நிகழ்வு கலைவாணர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்