
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்., மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் விழா அறிமுக உரையை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் மகளிர் பாசறையின் மாநில பொருளாளர் அகிலா எழிலரசன் தலைமை வகித்து உரையாற்றினார். ஏ.ஜி திருச்சபையின் rev.,என்.எஸ்.டேவிட், திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். டாக்டர் இராபர்ட் கால்டுவெல் படத்தினை பெரியார் பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளர் கவிஞர் .பெரு.முல் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் 2௦0 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கம் லையரசு திறந்து வைத்து சிறப்பான கருத்துரை ஆற்றினார்.
வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு தருமபுரி மாவட்ட மேனாள் திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், விடுதலை சிறுத்தைகளின் ஒன்றிய செயலாளர் நாசி .சரவணன் ,திமுக நகர செயலாலர் இர .பாபுசிவகுமார் , விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட துணைச் செயலாளர் அசோகன் ஆசிரியர் கவி .செங்குட்டுவன்,ஆசிரியர் இரு.கிருட்டிணன் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர். விழாவில் பங்கேற்று கருத்துரை ஆற்ற வருகை தந்த கவிஞர் அறிவுமதி அவர்கள் உணர்வுள்ள தமிழர்களின் சந்திப்பில் நெகிழ்ந்து சில நிமிடங்கள் ஒலிபெருக்கி முன்னால் பேச இயலாமல் தவித்தார் 'அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது ,பின்னர் உணர்ச்சி பிழம்பாய் தன் உணர்வுகளை மடை திறந்த வெள்ளம் தமிழ்=உயிர்நேயம் என்னும் தலைப்பில் பாவலர் அறிவுமதி மிக சிறப்பான கருத்துரையை வருகை தந்த பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் உரையாற்றினார்.பின்னர் வாசகர் வட்ட உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்
நிறைவாக வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் செ.சிவராஜ் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார்.