ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 70 ஆம் மாத நிகழ்வாக சிறீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டத்துடன் இணைந்து ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாள் தேசியகருத்தரங்கமாக ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கத்தில் காலை 9.3௦ மணியளவில் நடைபெற்றது
இந் நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது .இந் நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.க.இராஜா வரவேற்புரையாற்றினார் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு விழாஅறிமுகவுரையாற்றினார் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் .கு.செங்கோடன் அவர்களும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் மேனாள் இணை இயக்குனரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவருமான மருத்துவர் வெ.தேவராசு அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் இந் நிகழ்ச்சிக்கு வித்யாமந்திர் கல்வி குழுமங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்
காலை 10 மணியளவில் முதல் அமர்வு தொடங்கியது கவிமாமணி புலவர் வேலூர் ம.நாராயணன் அவர்கள் சிரிக்க .சிந்திக்க என்கிற தலைப்பில் தந்தை பெரியார் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மாணவர்கள் பயன் பெரும் வண்ணம் பல்வேறு செய்திகளை நகைச்சுவையுடன் உரையாற்றினார்
. இரண்டாம் அமர்வு:காலை11.30 மணியளவில் தொடங்கியது வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் சேலம் பெரியார் பல்கலைகழகங்களின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான க.அருள் அவர்கள் அப்துல் கலாம் அவர்களின் படத்தினை திறந்து வைத்து புகழுரையாற்றினார்
திராவிடர் முன்னேற்ற கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளரும் அமெரிக்காவில் நடைபெற்ற இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழருமான தமிழன்பிரசன்னா அவர்கள் .''கனவு காணுங்கள் சிறகுகளை விரியுங்கள் '' என்கிற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார் ,தமிழன் பிரசன்னா உரை மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை ஊட்டியது
இந்த நிகழ்வில் திமுக மாநில வணிகர்அணி செயலாளர் கவிஞர் .காசி.முத்து மாணிக்கம் , திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி,மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சித.வீரமணி மாவட்ட கழக துணை செயலர் அரங்க இரவி ,நகர திராவிடர் கழக தலைவர் இர.வேங்கடம் ,.பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இர.பழனி ,வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் இராஜேந்திரன் ,மாவட்ட இளைஞரணி செயலர் செ.சிவராஜ்,ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொருளாளர் முருகேசன் ,ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர்கள் வித்யா ,முருகம்மாள் ,பெரியார் பெருந்தொண்டர்கள் போரப்பா,பொன்னுசாமி ,,வழக்கறிஞர் ஜெயசீலன் ,நல்லாசிரியர் வரதராசன் ,க.ப.ஆறுமுகம் ,மேனாள் கிராம நிர்வாக அலுவலர் கோபால் ,மேனாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கான்பாய் ,திமுக மாவட்ட மருத்துவரணி துணை செயலர் மருத்துவர் மாலதி ,மத்தூர் டாக்டர் திருமாறன் ,மேனாள் பேரூராட்சித் தலைவர் ஜெயலட்சுமி ,அவ்வை சுரேஷ் ,ஊற்றங்கரை திமுக இணைய தள பொறுப்பாளர் தணிகை குமரன் உள்ளிட்ட .ஏராளமான வாசகர் வட்ட உறுப்பினர்களும் ,திராவிடர் கழகம் ,திமுக ,விடுதலை சிறுத்தைகள் அமைப்புக்களை சார்ந்த உறுப்பினர்களும் ,கல்லூரி பேராசிரியர்களும் ,பணியாளர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
ஒவ்வொரு ஆண்டும் அப்துல்கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்துடன் இணைந்து கொண்டாட கல்லூரி நிர்வாகத்தின் ஒப்புதல் அளித்தனர்,மிக விரிவான ஏற்பாடுகளை செய்த கல்லூரி நிர்வாகிகளுக்கும் ,நிறுவனர் அய்யா வே .சந்திரசேகரன் அவர்களுக்கும் வாசகர் வட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது .நிறைவாக கல்லூரியின் நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் .ச.பார்த்திபன் நன்றி நவில நாட்டு பண் இசைக்க நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது