விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 18 November 2016

குழந்தைகள் தின விழா

                                                                                     


 ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 71 ஆம் நிகழ்வாக நவம்பர் 1குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு காலை 9 மணியளவில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் பிஞ்சு மாத இதழும் 51(A) h அமைப்பும் இணைந்து குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது






 ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பல்லாங்குழி அமைப்பின் நிறுவனர் இனியன் ஓசை மற்றும் ஒலிகளில்  இருந்து மொழிகள் எவ்வாறு தோன்றியது என்பதை விளையாட்டின் மூலம் விளக்கி ,பழந்தமிழர்களின் விளையாட்டுக்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பதையும்  விளக்கினார் . மாணவர்களை இரு கூறுகளாக பிரித்து “”சட்டி பானை லொடக்””என்கிற புதிய விளையாட்டினை கற்று  தந்தார் தோழர் .இனியனுடன்  இணைந்து மாணவர்கள் குதுகலமாக விளையாடி மகிழ்ந்தனர்





அவ்வாறே ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் அறிஞர் அறிவரசன் அறிவியல் செய்முறைகளை விளக்கி நடைமுறை வாழ்வில் எங்கெல்லாம் இது பயன்படுகிறது என்பதை விளக்கினார்.மேலும் மாணவ மாணவிகளின் அறிவியல் வினாக்களுக்கு எளிமையாக அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கங்களை தெரிவித்தார்





            இந்த நிகழ்வில் அதியமான் மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் சீனி..திருமால்முருகன் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் மேனாள் இணை இயக்குனர் மரு.தேவராசு ,ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி ,நகர் திராவிடர் கழக தலைவர் இர.வேங்கடம் ,மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சித .வீரமணி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ.சிவராஜ் ,மத்தூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர்  சிலம்பரசன் ,ஒன்றியமகளிரணி பொறுப்பாளர் வித்யா ,விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு உள்ளிட்ட தோழர்களும் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்











 மாலை 2 மணியளவில் தீரன் சின்னமலை பன்னாட்டு உறைவிட பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தோழர்களை பள்ளி நிர்வாகத்தினர் அன்புடன் வரவேற்றனர் பல்லாங்குழி அமைப்பின் நிறுவனர் இனியன் குழந்தைகள் மகிழும் வண்ணம் அவர்களுக்கு கதைகள் கூறியதுடன் அவர்களையும் கதைகள் கூரை செய்து அவர்களின் கற்பனை ஆற்றலை ஊக்குவித்தார் அறிவியல் அறிஞர் அறிவரசன் அறிவியல் செய்முறைகளை விளக்கி நடைமுறை வாழ்வில் எங்கெல்லாம் இது பயன்படுகிறது என்பதை விளக்கினார்,மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரிய பெருமக்களும் மிகுந்த ஆவலுடன் நிகழ்வில் பங்கேற்றனர் ,பள்ளி நேரம் முடிந்த நிலையிலும் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்ச்சி கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது
 
காலை மாலையென இரண்டு பள்ளிகளிலும் நடைபெற்ற ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட குழந்தைகள் தின விழா நிகழ்வுகள் பள்ளியின் அனைத்து தரப்பிலும் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது ,மாணவர்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு சுயமி எடுத்துக்கொண்டனர் .இது போன்ற அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை தொடர்ந்து தங்கள் பள்ளிகளில் நடத்திட விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்களிடம் பள்ளி நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்