விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Wednesday, 28 February 2018

51A (h) மற்றும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா






















51A (h) என்னும் அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்தும் பொது அமைப்பும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் இணைந்து தேசிய அறிவியல் தின விழா ஊற்றங்கரை சிவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெகு சிறப்புடன் கொண்டாடப் பட்டது
இந் நிகழ்ச்சிக்கு சிவா மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிறுவனர் முத்து .செல்வராசன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார் ,பள்ளியின் முதல்வர் ஜோதி செல்வராசன் அவர்களும் விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் இரா.வேங்கடம் அவர்களும் ,சீரிய பகுத்தறிவாளரும் கஞ்சனூர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித .வீரமணி அவர்களும் ,சிவா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் துணைத்தலைவர் எஸ்.மாலதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51-A(H) யில் கூறியுள்ளபடி அறிவியல் உணர்வைமனித மதிப்புகளைகேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். என்கிற அடிப்படையில் 51A (h) அமைப்பு துவங்கப்பட்டுள்ளது என்றும்
மக்களின் மத்தியில் நிலவும் பல்வேறு விதமான மூட நம்பிக்கைகள் குறித்து அறிவியல் விளக்கங்களுடன் மேனாள் இணை இயக்குனர் மருத்துவர்.வெ தேவராசு விளக்கமாக கூறி உரையாற்றினார்
சிவா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவர் கதிரவன் கிராமப்புற சூழ்நிலையில் கல்வி கற்றாலும் பார்வையற்றோர் பிறர் உதவியின்றி சென்சார் கருவி கொண்டு நடக்க கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வருகை தந்த பெருமக்கள் பாராட்டி மகிழ்ந்தனர் ,வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கி சிறப்பிக்கப் பட்டது
நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலர் முனைவர் .எஸ்.ஆர் சேதுராமன் மந்திரமா தந்திரமா நிகழ்வினை பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் வெகு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினார் .பள்ளியின் சார்பில் 51A (h) அமைப்பிற்கும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் பள்ளியில் அறிவியல் நிகழ்வு நடத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது