விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Tuesday, 27 November 2018

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 85 ஆம் மாத நிகழ்வு













ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 85 ஆம் மாத நிகழ்வாக வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது

இவ் விழாவிற்கு கல்லூரியின் செயலர் ஆர் .பி இராசு தலைமை தாங்கினார் முன்னதாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து தயாரித்த கவிப்பேரரசு எழுதிய அப்துல் கலாம் குறித்த பாடல் திரையிடப்பட்டது தமிழ்த்துறை தலைவர் முனைவர் .க .இராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்  

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணை செயலர் நல்லாசிரியர் சித.வீரமணி விழா அறிமுக உரையாற்றினார் விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி துணைத்தலைவர் மருத்துவர் வெ.தேவராசு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .நிகழ்வின் முதல் அமர்வை துவக்கி வைத்து கல்லூரியின் முதல்வர் முனைவர் .க .அருள் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்

  தென்அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச வலுதூக்கும் போட்டியில் நான்காம் இடமும் ,தனிப்பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை புரிந்த வலு தூக்கும் வீராங்கனை அக்கியம்பட்டி .கமலி நிகழ்வில் பாராட்டப்பட்டார்
மேனாள் மேலவை உறுப்பினரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்நிருவனத்தலைவருமான  .செ.முத்துசாமி அவர்கள் பாரட்டுரையற்றினார் . வலு தூக்கும் வீராங்கனை அக்கியம்பட்டி .கமலி ஏற்புரை நிகழ்த்தினார்
முதல் அமர்வின் நிறைவாக திராவிடர் மாணவர் கழக மாநில செயலர் .ச.பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் அவர்கள் “இது வாலிப வயசு என்னும் தலைப்பில் இளைஞர்களை கவரும் வகையில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார்

பிற்பகல் 2.௦௦ மணியளவில் இரண்டாம் அமர்வு துவங்கியது
சுடர் மனநல ஆலோசனை மய்யம் சார்பில் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி இலக்கை நோக்கி” (power point presentation ) என்னும் தலைப்பில் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலரும் உளவியலாளருமான பழ.பிரபு உரையாற்றினார் .மாணவ மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து தமது உரையை பலத்த கரவொலியோடு நிறைவு செய்தார் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ச.பார்த்திபன் நன்றியுரையாற்ற நாட்டுபண் இசைக்க விழா நிறைவு பெற்றது

குளிரூட்டப்பட்ட கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இவ் விழாவில் 5௦௦ க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை கல்லூரியில் நடத்திட வேண்டும் என்று ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்