ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்பது அரசியல் ,ஜாதி ,கட்சி ,மதம் ,ஆத்திகம்,நாத்திகம் ,பேதமின்றி தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா,பச்சை தமிழன் காமராஜர் ,தமிழர் தலைவர் வீரமணி ,விடுதலை ,மற்றும் உண்மை ஏடுகளால் கவரப்பட்ட மனித நேய சிந்தனையாளர்களின் அமைப்பு
விடுதலை வாசகர் வட்டம்

Friday, 20 August 2021
திருநங்கைகள் ,பெண்கள் ,ஆண்கள் என மூன்று பாலினமும் சேர்ந்து கொண்டாடிய மகளிர் தின விழா !
Tuesday, 16 February 2021
அறக்கட்டளையாக உருமாறும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் !
விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலர் சித.வீரமணி அனைவரையும்
வரவேற்று உரையாற்றினார். ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை ஜி கருணாநிதி அவர்கள் தலைமை உரையாற்றினார் மேனாள் இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு ) திரு.இரா.நடேசன் மேனாள் இணை இயக்குனர்மருத்துவர் வெ.தேவராசு ஆகியோர் முன்னிலை
வகித்தனர் மேனாள் சட்ட மன்ற உறுப்பினரும் திராவிட இயக்க மூத்த உறுப்பினர் கே.ஆர்.கிருஷ்ணன்
அவர்கள் இனமான பேராசிரியர் க.அன்பழகன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம் நிலை பயணத்தை
வாழ்த்தி ஊற்றங்கரை திமுக செயலர் எக்கூர் த.செல்வம், தொ.வி.மு.மாநில துணை செயலர் சா.அசோகன்,சிபிஎம் வட்ட
செயலர் மகாலிங்கம்,மதிமுக ஒன்றிய செயலர் துரை.கணேசன் ஆகியோர்
வாழ்த்துரை ஆற்றினார்
திராவிடப் பொழில் நூலை வெளியிட்டு பொருளாதார
தொய்வில்லாமல் ,மக்களை அறிவுபாதையில் அழைத்து
செல்லும் வாசகர் வட்டம் தொடர்ந்து நடைபெற ஊற்றங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி
நிறுவனங்கள் சார்பில் ரூ 10 இலட்சம் வழங்கப்படும் என
பெருங்கொடையாளர் கல்வியாளர் சந்திரசேகரன் அறிவித்தார். திராவிட பொழிலுக்கு வித்யா மந்திர் கல்வி நிருவனங்கள்
சார்பில் 10 ஆண்டு சந்தா செலுத்தி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
செயலர் ஆர்.பி .இராஜூ பெற்றுக்கொண்டார் .அவரை தொடர்ந்து ஊற்றங்கரை நகரின் முக்கிய பொறுப்பாளர்கள்
பலரும் திராவிட பொழில் இதழுக்கு சந்தா செலுத்தி பெற்றுக்கொண்டனர் (பெற்றுக்கொண்ட சிறப்பு விருந்தினர்
பட்டியல் தனியாக இணைக்கப்பட்டுள்ளது ) திராவிட பொழில் இதழை அறிமுகப்படுத்தி மாநில அமைப்பு
செயலர் ஊமை.ஜெயராமன் உரையாற்றினார் .
நிறைவாக திராவிடம் வெல்லும்
என்னும் தலைப்பில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மிக
சிறப்பான உரையாற்றினார் . விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளர் ஆடிட்டர் இராஜேந்திரன்
நன்றியுரையாற்ற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது