விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 20 August 2021

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் குறித்து பேராசிரியர் சுபவீ


 

விடுதலை வாசகர் வட்டம் கொண்டாடிய அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா


 

திருநங்கைகள் ,பெண்கள் ,ஆண்கள் என மூன்று பாலினமும் சேர்ந்து கொண்டாடிய மகளிர் தின விழா !

 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட மார்ச் மாத நிகழ்வாக மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் மார்ச் 8 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் அரங்க கூட்டமாக நடைபெற்றது

நிகழ்வின் தொடக்கமாக திராவிடர் மகளிர் பாசறையின் ஒன்றிய செயலர் அ.முருகம்மாள் அவர்கள் வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். நிகழ்சிக்கு ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமிகு.உஷா ராணி குமரேசன் அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினர். பொறியாளர் ஜெ.ஹேமாநிஷா அவர்களும் , ஊற்றங்கரை திருநங்கைகள் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமிகு எஸ்.அஸ்வினி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் தோழர் அஸ்வினி முன்னிலை வகித்து உரையாற்றிய போது மூன்றாம் பாலினமாக திருநங்கைகளின் வாழ்வியல் சிக்கல்களை கூறியதோடு திராவிட இயக்கம் தான் தங்களின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்தது .திருநங்கைகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர மேடை அமைத்து கொடுத்த விடுதலை வாசகர் வட்டத்திற்கு நன்றி கூறி உரையாற்றினார்

திராவிடர் மாணவர் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலர் செல்வி.இ.ச.மணிமொழி அவர்கள் அன்னை மணியம்மையார் படத்தினை அன்னை மணியம்மையார் வாழ்க என்ற ஒலி முழக்கம் எழுப்பி திறந்து வைத்து வருகிற மார்ச் 10 ஆம் நாள் அன்னை மணியம்மையார் பிறந்த நாளையொட்டி,வாசகர் வட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள் மகளிர், குழந்தைகள் என பலரும் குழுமி கேக் வெட்டி கொண்டாடினர். விடுதலை வாசகர் வட்டம் சார்பில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி அவர்களும் , துணைத்தலைவர் மருத்துவர் வெ.தேவராசு அவர்களும் வாழ்த்துரையாற்றினர்







தி கிரேட் இந்தியன் கிச்சன் என்கிற மலையாள திரைப்படத்தின் விமர்சன உரையை திராவிடர் மாணவர் கழக பொறுப்பாளர் செல்வி .கியூபா பிரபு நிகழ்த்தினார்
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைமை செயற்குழு உறுப்பினரும் , எழுத்தாளருமான இரா.உமா அவர்கள் பங்கேற்று “பெண்களும் பாலின சமத்துவமும்” என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் திருநங்கைகளின் வாழ்வியல் சிக்கல்களை கூறி பெரியார் சொன்னது போல் கருப்பை இல்லாத தாயாக திருநங்கைகளை பார்ப்பதாகக் கூறி திருநங்கைகளின் வாழ்வியல் சிக்கல்களை கூறி பாலின சமத்துவத்திற்காக திராவிட இயக்கத்தின் பணிகளையும் கோடிட்டு காட்டி உரையை நிகழ்த்தினார். பாலின சமத்துவத்திற்காக வீட்டிலும் நாட்டிலும் முன்னெடுக்க வேண்டிய பணிகளை பட்டியலிட்டு காட்டினார் . பாலினத்தை ஒன்றாம் ,இரண்டாம் ,மூன்றாம் பாலினம் என வகைப்படுத்தியது யார் ? என கேட்ட தோழர் உமா தந்தை பெரியார் முதல் கலைஞர் வரை பாலின சமத்துவத்திற்காக ஆற்றிய பணிகளை சுட்டிக் காட்டி மிக சிறப்பான உரையை வழங்கினார்
தொ.வி.மு.மாநில துணை செயலர் சா.அசோகன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் குபேந்திரன்,ஊற்றங்கரை ஒன்றிய திக செயலர் செ.சிவராஜ் ,திமுக இணைய தள பொறுப்பாளர் தணிகை குமரன் உள்ளிட்ட பல தோழர்கள் கருத்துரையாற்றினர் . நிகழ்வை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் நிறைவாக கயல்விழி நன்றியுரையாற்றினார்

மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் - எழுத்தாளர்.இரா.உமா