ஜூன் 27 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் மருத்துவ கருத்தரங்கமாக மிக சிறப்புடன் நடைபெற்றது
தொடக்கமாக சுடர் மனநல ஆலோசனை மய்யத்தின் மன நல ஆலோசகர் ம.வித்யா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு அறிமுக உரையாற்றினார்ஊற்றங்கரை அரசு மருத்துவமனையின் மருத்துவர் ப.மதன்குமார் , ஆபேல் கிளினிக் மருத்துவர் வசந்தகுமார் நடேசன் , மருத்துவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்
விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி தலைமை வகித்து தலைமை உரையாற்றி சிறப்பு செய்தார்
வெல்வோம் நீரிழிவை என்கிற தலைப்பில் போச்சம்பள்ளி ஜி.எம். மருத்துவமனையின் மேலான் இயக்குனரும் இனமான மருத்துவருமான மருத்துவர் மு.பிரித்திவி ராஜ்குமார் மிக சிறப்பான உரையை வழங்கி பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்
அழகி.இராஜேசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார் நிறைவாக திராவிடர் கழக மகளிரணி ஒன்றிய அமைப்பாளர் முருகம்மாள் அப்பாசாமி நன்றியுரையாற்ற நிகழ்வு இனிதே நிறைவுற்றது. வருகை தந்த அனைவருக்கும் தேநீர் ,பிஸ்கட் வழங்கப்பட்டது. இது போன்ற சிந்தனைக்கு விருந்தளிக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்