விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Wednesday, 28 September 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

செப்டம்பர் 29 பிறந்த நாள் காணும் சங்கர் I .A S அகாடமியின் நிறுவனர் .திரு .D .சங்கர் அவர்களை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் வாழ்த்துகிறது !

Tuesday, 20 September 2011

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா !மற்றும் சங்கர் I A S அகாடமியின் நிறுவனர் திரு .சங்கர் அவர்களின் பாராட்டு விழா !

அரங்கம் நிரம்பி வழிந்தது ! கருத்து மழை பொழிந்தது !
ஊற்றங்கரையில் எழுச்சியுடன் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா !மற்றும் சங்கர் I A S அகாடமியின் நிறுவனர் திரு .சங்கர் அவர்களின் பாராட்டு விழா !

ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கமும் ,சங்கர் I A S அகாடமியின் நிறுவனர் திரு சங்கர் அவர்களுக்கு பாராட்டு விழாவும் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது

இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின்துணை தலைவர் சி.சுவாமிநாதன்வாசித்தார் ,விழா அறிமுக உரையை ப.க.மாநில துணைத் தலைவர் அண்ணா .சரவணன் ஆற்றினார்
இந் நிகழ்ச்சிக்குதிராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கி தலைமை உரையையாற்றினார் ,ஊற்றங்கரை ஒன்றிய திமுக செயலாளர் எக்கூர்.த.செல்வம் , திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்

ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் சங்கர் I A S அகாடமியின் நிறுவனர் திரு சங்கர் தமிழர்களை அதிகார பொறுப்பில் அமர்திடும் முயற்சிகளுக்க்காகவும் அண்மையில் வெளியிடப்பட்ட சிவில் சர்விஸ்முடிவுகளில் அதிக அளவு பங்களிப்பை வழங்கியமைக்கும் பாராட்டப் பட்டார் திராவிடர் கழக தலைமை செயற் குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் பாராட்டுரை யாற்றினார்

செப்டம்பர் 17 நடிகவேள் எம் .ஆர்.ராதா அவர்களின் நினைவு நாளையுட்டிநடிகவேள் படத்தினை ஊற்றங்கரை நகர திராவிட முன்னேற்ற கழக செயலாளர் இர .பாபு சிவக்குமார் திறந்துவைத்து நினைவேந்தை உரையாற்றினார்

முன்னால் அமைச்சரும் தருமபுரி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வ.முல்லைவேந்தன் அவர்கள் விழாவில்கருப்பு சட்டை அணிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தந்தை பெரியார் கொள்கைகளை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் சமசீர் கல்வி ,தமிழ் புத்தாண்டு ஆகிவற்றில் ஆளும் பார்ப்பன அரசு கடைப்பிடித்து வரும் பார்ப்பனிய கொள்கைகளை விளக்கமாக எடுத்துக் கூறி கருத்துரையாற்றினார்
வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள் காந்தன் ஆசிரியர் ,அண்ணா.சரவணன் ,இர.வேங்கடம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் . .விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் . ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர் சிவராஜ் நன்றியுரையாற்றினார்

நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் விடுதலையில் வெளிவந்த அய்யா சுவையான சம்பவங்கள் என்கிற நகலும் தன்னம்பிக்கை இதழில் வெளிவந்த சங்கர் அவர்களின் நேர்காணல் நகலும் ,பெரியார் பெருந்தொண்டர் சாமிநாதன் அவர்களின் பிறந்த நாள் மலரும் வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்

விடுதலை வாசகர் வட்ட ஜூன் மாத கருத்தரங்க நிகழ்வுகளின் புகைப்படங்களை http://ugividuthalai.blogspot.com/2011/09/133-i-s.html என்னும் வலை பூ தளத்தில் காணலாம்

Monday, 12 September 2011

விடுதலை வாசகர் வட்ட பேனர்கள்

ஊற்றங்கரை நகரில் அமைக்கப்பட்ட பேனர்      
திறந்து வைக்கப்பட உள்ள எம் .ஆர் .இராதா படம்

Wednesday, 7 September 2011

தமிழ் இணையப் பயிலரங்கம்

http://viduthalai.in/new/e-paper/17041.html   

http://muelangovan.blogspot.com/2011/08/blog-post_21.html

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கம்!
பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

ஊற்றங்கரை, செப்.1-ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயில ரங்கம் ஞாயிற்றுக் கிழமை(21.08.2011) காலை 10 மணியளவில் ஊற்றங்கரை காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் நடைபெற்றது. திட்டமும் செயற்பாடு களும்முன்னதாக இணையம் என்ற உலக வலைத்தளத்தைப் பாம ரரும் புரிந்துகொள்ள வும், தமிழ் இணை யத்தை பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் அறிந்து கொள்ளவும் தமிழ் இணையப் பயில ரங்கத்தை நடத்த ஊற் றங்கரை விடுதலை வாச கர் வட்டம் முடிவு செய் தது.
இப் பயிலரங்கத் திற்கு தேவையானது திரையிடும் கருவி, திரை, ஒலிவாங்கி, மற்றும் ஒலிபெருக்கிக் கருவிகள் மற்றும் பங்கேற்போ ருக்கு ஒரு எழுதுகோல், ஒரு குறிப்பேடு மட் டுமே. ஒரு கல்லூரி நிறு வனத்தின் மூலம் எளி மையாக ஏற்பாடுகளை செய்யலாம் என திட்ட மிட்டு ஊற்றங்கரை நகரின் மிகச் சிறப்பு வாய்ந்த வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர் கல்வி செம்மல் வே.சந்திரசே கரன் அவர்களை அணு கிய போது நிகழ்ச்சி நடத்த அரங்கம், திரை யிடும் கருவி, திரை, ஒலிவாங்கி, ஒலிபெருக் கிக் கருவிகள் மற்றும் பங்கேற்கும் அனைவ ருக்கும் உணவு,தேனீர், போக்குவரத்து வசதி களை ஏற்பாடு செய்து தருவதாக பெரு உள் ளத்துடன்ஒப்புக் கொண்டார்.
சுற்றறிக்கை
ஊற்றங்கரை ஒன்றி யத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ் இணையப் பயில ரங்கம் குறித்த சுற்ற றிக்கை அனுப்பி, பங் கேற்பாளர்கள் முன் பதிவு செய்ய வேண்டு கோள் விடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி, கேபிள் விளம்பரம், முக நூல் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுகோள் வைக்கப் பட்டது. பலரும் ஆர் வத்துடன் பதிவு செய் தனர். பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாண விகளின் பெயர் பட்டி யலை தலைமை ஆசிரி யர்கள் அனுப்பி வைத்த னர். பொதுமக்கள் விளம் பரத்திற்கு டிஜிட்டல் பதாகையை ஜெசிந்தா மெட்டல் மார்ட் வழங் கினார்.
மாணவர்களுக்கு குறிப்பேடு ரவிக்குமார் பேப்பர் ஸ்டோர்ஸ் அவர்களும், எழுது கோல்களை ராசி புக் ஸ்டோர்ஸ் உரிமையா ளர் திருமதி கவிதா சுரேஷ் அவர்களும் நன் கொடையாக வழங்கி னர்.
குவிந்தனர்
நிகழ்ச்சி நிரல் 200-க்கும் மேற்பட்ட மாண விகள் தனிப் பேருந்து கள் மூலமும், பொது மக்கள் இணைய ஆர்வ லர்கள் ஊற்றங்கரை பேருந்து நிலையத்தில் இருந்து மற்றுமொரு தனி பேருந்து மூலமும் காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வரப்பட் டனர். பயிலரங்கு காலை பத்து முப்பது மணிய ளவில் தொடங்கியது. மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா.சர வணன் விழாவினை தொகுக்க விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் பழ.பிரபு வரவேற் புரை ஆற்றினார். வித்யா மந்திர் நிறுவங்களின் நிறுவனர் திரு.வே.சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், திராவிடர் கழக மாவட் டத் தலைவர் கே.சி எழிலரசன், திராவிடர் கழக மண்டல செயலாள ரும் விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப் பாளருமான பழ.வெங்க டாசலம், மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளரும் விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை. ஜி.கருணாநிதி ஆகி யோர்முன்னிலை வகித்து உரையாற்றினர். முன்னதாக வித்யா மந்திர் நிறுவங்களின் நிறுவனர் திரு.வே.சந்திர சேகரன் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் வி.ஜி. இளங்கோ அவர்களும், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் அவர்களுக்கு மாவட்ட இணைச் செய லாளர் அரங்க.இரவி அவர்களும், மண்டல செயலாளர் பழ.வெங்க டாசலம் அவர்களுக்கு திருப்பத்தூர் பாண்டி யன் அவர்களும், வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக் கிய அணி துணை செய லாளர் தணிகை.ஜி.கரு ணாநிதி அவர்களுக்கு ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் சிவராஜ் அவர்களும், மாநில ப.க செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கு பெரியார் பெருந்தொண்டர் கி.ஆ.கோபாலன் அவர் களும், பயிலரங்கத்தை நடத்த வந்த பேராசிரியர் மு.இளங்கோவன் அவர் களுக்கு மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் அவர்களும், வித்யா மந் திர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் முதல் வர் அருள் அவர்களுக்கு வாசகர் வட்ட செயலா ளர் பழ.பிரபு அவர் களும், கல்லூரி நிர்வாக அலுவலர் செங்கோடன் அவர்களுக்கு வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி.கருணாநிதி அவர் களும் நினைவுப் பரிசு வழங்கினர். வாசகர் வட்ட துணைத் தலைவர் இர.வேங்கடம் நன்றி உரைக்கு பின் மேடை மாநில பக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் அறிமுக உரைக்காக ஒப் படைக்கபட்டது. இணையத்தின் தேவை குறித்தும், அறிவியலை தமிழில் வளர்க்க வேண் டியதைப் பற்றி தந்தை பெரியாரின் கருத் துகளை எடுத்துக்காட் டியும், செம்மொழி இளம் அறிஞர் விருது வென்ற முனைவர் மு. இளங்கோவன் குறித்தும் அவர்கள் இணையப் பயிலரங்கத்தை அறி முகம், செய்தும் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.
கருத்தைக் கவர்ந்த பயிலரங்கம்
புதுச்சேரி பாரதிதா சன் மகளிர் கல்லூரியின் துணை பேராசிரியர் முனைவர்.மு .இளங்கோ வன் அவர்கள் இணை யத்தில் எளிமையாக, தமிழ்த்தட்டச்சு செய் வது குறித்து முதலில் அறிமுகம் செய்தார். மின்னஞ்சல் கணக்கு உரு வாக்கம், தமிழ் விசைப் பலகை அறிமுகம், மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, நூலகம், தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, இணைய இதழ்கள், தமிழ் இணையப் பல் கலைக்கழகம், தமிழ் இணைய மாநாடுகள், விக்கிப்பீடியா, விக்சனரி, மின்நூலகம், மின்னகர முதலிகள், இணைய வழித் தமிழ்ப்பாடங்கள், சமூகவலைத்தளங்கள் பற்றிய பல செய்திகளை முற்பகல் வகுப்பில் எடுத் துரைத்தார். மதியஉணவு இடைவேளைக்குப் பிறகு ப.க. துணை தலைவர் அண்ணா.சர வணன் அவர்களின், தமிழா நீ பேசுவது தமிழா என்னும் பாட லுடன் வகுப்புக்கள் தொடங்கின. இரண்டு மணிமுதல் நான்குமணி வரை செய்முறையாக வலைப்பூ உருவாக்கம் முதல் இணையவழிக் கல்வி பற்றிய செய்தி களைப் பகிர்ந்து கொண்டார். நிறைவாகப் பயிற்சி பெற்ற மாணவர்களும் பொதுமக்களும் தங்கள் கருத்துகளை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக நிகழ்வு சிறப்பாக நடக்க ஒத்துழைத்த கல்லூரி கணினி துறைத் தலைவர் செந்தில்நாதன், நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளர் கோவிந் தன் ஆகியோருக்கு முனைவர் மு.இளங்கோவன் நினை வுப் பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் அருள், கவி.செங் குட்டுவன், மக்கள் தொடர்பு பொறுப் பாளர் தர்மலிங்கம், கல்லூரி ஆசிரியர் பெரு மக்கள்,மாணவர்களை அழைத்து வந்த பள்ளி களின் தலைமை ஆசிரி யர்கள், ஆசிரிய பெரு மக்கள் அனைவருக்கும் வாசகர் வட்டத்தின் சார்பில் நன்றி தெரி விக்கப்பட்டது.
அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப் பேடு, எழுதுகோல், பிஸ்கட் தரப்பட்டது. நிகழ்ச்சி யின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது . இது போன்ற பயில ரங்குகள் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் அல்லது திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுக்க நடத்தவேண் டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டு கோள் விடுத்தனர்.

பச்சைத்தமிழர் காமராசர் அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா !

திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்தரங்கம்

எழுச்சியுடன் நடைபெற்ற மே தின சிறப்பு கருத்தரங்கம்

மே தின சிறப்பு கருத்தரங்கம்

மே தின சிறப்பு கருத்தரங்கம்

தன்னம்பிக்கை சிறப்பு கருத்தரங்கமும் அதியமான் கல்வி நிறுவனர் திரு .சீ.திருமால் முருகன் அவர்களுக்கு பாராட்டு விழா

இப்படித்தான் நடக்கவேண்டும் ஊற்றங்கரையில் மகளிர் நாள்விழா!

மகளிர் நாள் கருத்தரங்க புகைப்படங்கள்

மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்

இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்

இருதய நலம் குறித்த சிறப்புக் கருத் தரங்கம்

தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம் மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

விடுதலை வாசகர் வட்ட துவக்க விழா மற்றும் தமிழர் தலைவர் மானமிகு.கி .வீரமணி அவர்களின் பிறந்த நாள்

Saturday, 3 September 2011

ஊற்றங்கரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்!