ஊற்றங்கரையில் எழுச்சியுடன் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா !மற்றும் சங்கர் I A S அகாடமியின் நிறுவனர் திரு .சங்கர் அவர்களின் பாராட்டு விழா !
இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின்துணை தலைவர் சி.சுவாமிநாதன்வாசித்தார் ,விழா அறிமுக உரையை ப.க.மாநில துணைத் தலைவர் அண்ணா .சரவணன் ஆற்றினார்
இந் நிகழ்ச்சிக்குதிராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கி தலைமை உரையையாற்றினார் ,ஊற்றங்கரை ஒன்றிய திமுக செயலாளர் எக்கூர்.த.செல்வம் , திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் சங்கர் I A S அகாடமியின் நிறுவனர் திரு சங்கர் தமிழர்களை அதிகார பொறுப்பில் அமர்திடும் முயற்சிகளுக்க்காகவும் அண்மையில் வெளியிடப்பட்ட சிவில் சர்விஸ்முடிவுகளில் அதிக அளவு பங்களிப்பை வழங்கியமைக்கும் பாராட்டப் பட்டார் திராவிடர் கழக தலைமை செயற் குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் பாராட்டுரை யாற்றினார்
செப்டம்பர் 17 நடிகவேள் எம் .ஆர்.ராதா அவர்களின் நினைவு நாளையுட்டிநடிகவேள் படத்தினை ஊற்றங்கரை நகர திராவிட முன்னேற்ற கழக செயலாளர் இர .பாபு சிவக்குமார் திறந்துவைத்து நினைவேந்தை உரையாற்றினார்
முன்னால் அமைச்சரும் தருமபுரி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வ.முல்லைவேந்தன் அவர்கள் விழாவில்கருப்பு சட்டை அணிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தந்தை பெரியார் கொள்கைகளை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் சமசீர் கல்வி ,தமிழ் புத்தாண்டு ஆகிவற்றில் ஆளும் பார்ப்பன அரசு கடைப்பிடித்து வரும் பார்ப்பனிய கொள்கைகளை விளக்கமாக எடுத்துக் கூறி கருத்துரையாற்றினார் வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள் காந்தன் ஆசிரியர் ,அண்ணா.சரவணன் ,இர.வேங்கடம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் . .விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் . ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர் சிவராஜ் நன்றியுரையாற்றினார்
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் விடுதலையில் வெளிவந்த அய்யா சுவையான சம்பவங்கள் என்கிற நகலும் தன்னம்பிக்கை இதழில் வெளிவந்த சங்கர் அவர்களின் நேர்காணல் நகலும் ,பெரியார் பெருந்தொண்டர் சாமிநாதன் அவர்களின் பிறந்த நாள் மலரும் வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்
விடுதலை வாசகர் வட்ட ஜூன் மாத கருத்தரங்க நிகழ்வுகளின் புகைப்படங்களை http://ugividuthalai.blogspot.com/2011/09/133-i-s.html என்னும் வலை பூ தளத்தில் காணலாம்
No comments:
Post a Comment