அக்டோபர் 23 தேதி ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற பெண்ணியல் கருத்தரங்கில் ''பெரியாரும் பெண் விடுதலையும் '' என்கிற தலைப்பில் முனைவர் .பெ.மாதையன் உரை
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்பது அரசியல் ,ஜாதி ,கட்சி ,மதம் ,ஆத்திகம்,நாத்திகம் ,பேதமின்றி தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா,பச்சை தமிழன் காமராஜர் ,தமிழர் தலைவர் வீரமணி ,விடுதலை ,மற்றும் உண்மை ஏடுகளால் கவரப்பட்ட மனித நேய சிந்தனையாளர்களின் அமைப்பு
விடுதலை வாசகர் வட்டம்

Monday, 24 October 2011
''பெரியாரும் பெண் விடுதலையும் '' என்கிற தலைப்பில் முனைவர் .பெ.மாதையன் உரை
அக்டோபர் 23 தேதி ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற பெண்ணியல் கருத்தரங்கில் ''பெரியாரும் பெண் விடுதலையும் '' என்கிற தலைப்பில் முனைவர் .பெ.மாதையன் உரை
Sunday, 23 October 2011
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற பெண்ணியல் கருத்தரங்கம் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் க.அருள் அவர்களுக்கு பாராட்டு விழா
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்புடன் நடைபெற்ற
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் அக்டோபர் மாதம் கிராமப்புற மகளிர் நாளையொட்டி பெண்ணியல் கருத்தரங்கமும் ,ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் .க,அருள் அவர்களுக்கு பாராட்டு விழாவும் கடந்த அக்டோபர் திங்கள் 23 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது
இவ் விழாவிற்கு மானமிகு.ம.வித்யா அவர்கள் வரவேற்புரையாற்ற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் இர.வேங்கடம் மாத அறிக்கை வாசித்தார் . திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளிரணி பொருளாளருமான மானமிகு.எ .அகிலா எழிலரசன் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி மிகச் சிறப்பான தலைமையுரையாற்றினார் ,திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மானமிகு .மு.இந்திராகாந்தி அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்
ஊற்றங்கரை காவல் ஆய்வாளர் எம்.சிவலிங்கம் அவர்களும் ,உடற் கல்வி ஆசிரியரும் பெரியார் வீர விளையாட்டுக் கழக செயற் குழு உருபினருமான அழகு மணி அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர்
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் ஸ்ரீ வித்யமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்.க.அருள் அவர்கள் கல்வி மற்றும் சமுக பணிகளுக்காக பாராட்டப்பட்டு பாராட்டு நினைவு பரிசினை வித்யா மந்திர் நிறுவனர் வே.சந்திர சேகரன் .மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்தி வழங்கினார் மாவட்ட மகளிரணி செயலாளர் மானமிகு .ம.கவிதா அவர்கள் வடலூர் வள்ளலார் பிறந்த நாளினை ஒட்டி வள்ளலார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்
''பெரியாரும் பெண் விடுதலையும் ''என்னும் தலைப்பில் பெரியார் பல்கலை கழகத்தின் பதிவாளரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் பெ.மாதையன் பல்வேறு காலகட்டங்களில் தந்தை பெரியார் பெண் விடுதலை குறித்து தெரிவித்த கருத்துக்களை தெரிவித்து மிக சிறப்பான ஆய்வுரையை நிகழ்த்தினார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு வித்யா ,கவிஞ்சர் சுப்புலட்சுமி ,புலவர் அண்ணாமலை ,காந்தன் ஆசிரியர் ,.இர.வேங்கடம் ,ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்
விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்கினார் .மானமிகு முருகம்மாள் நன்றி உரையாற்றினார்
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் விடுதலையில் வெளிவந்த வாழ்வியல் சிந்தனைகள் நகலும் முனைவர் அருள் அவர்கள் பற்றிய குறிப்பும் வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்
விடுதலை வாசகர் வட்ட அக்டோபர் மாத கருத்தரங்க நிகழ்வுகளின் புகைப்படங்களை Monday, 17 October 2011
பெண்ணியல் கருத்தரங்கம் மற்றும் முனைவர் .க. அருள் அவர்களுக்கு பாராட்டு விழா
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில்
பெண்ணியல் கருத்தரங்கம்
மற்றும்
ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்
முனைவர் .க. அருள் அவர்களுக்கு பாராட்டு விழா
***************************************************************************************************************************************************************
அன்புடன் அழைக்கிறோம் !
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெண்ணியல் கருத்தரங்கமும் ,ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் .க,அருள் அவர்களுக்கு பாராட்டு விழாவும் வரும் அக்டோபர் திங்கள் 23 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெறுகிறது
இவ் விழாவிற்கு மானமிகு.ம.வித்யா அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் இர.வேங்கடம் மாத அறிக்கை வாசிக்கிறார் . திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளிரணி பொருளாளருமான மானமிகு.எ .அகிலா எழிலரசன் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார் ,திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மானமிகு .மு.இந்திராகாந்தி அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றுகின்றார்
ஊற்றங்கரை காவல் ஆய்வாளர் எம்.சிவலிங்கம் அவர்களும் ,உடற் கல்வி ஆசிரியரும் பெரியார் வீர விளையாட்டுக் கழக செயற் குழு உருபினருமான அழகு மணி அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர்
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் ஸ்ரீ வித்யமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்.க.அருள் அவர்கள் கல்வி மற்றும் சமுக பணிகளுக்காக பாராட்ட படுகிறார்.மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் பாராட்டுரை நிகழ்த்துகின்றார் மாவட்ட மகளிரணி செயலாளர் மானமிகு .ம.கவிதா அவர்கள் வடலூர் வள்ளலார் பிறந்த நாளினை ஒட்டி வள்ளலார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார்
''பெரியாரும் பெண் விடுதலையும் ''என்னும் தலைப்பில் பெரியார் பல்கலை கழகத்தின் பதிவாளரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் பெ.மாதையன் கருத்துரையாற்றுகின்றார்
விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்குகின்றார்.மானமிகு முருகம்மாள் நன்றி உரையாற்றுகின்றார்
அனைவரும் வருக !
Subscribe to:
Posts (Atom)