விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Wednesday, 14 December 2011

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா !

  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம்      ஆண்டு துவக்க விழா !
                                                                          மற்றும்

                         மருத்துவர் .கொ.மாரிமுத்து M .B .B .S ., D .C .H .,DNB அவர்களுக்கு பாராட்டு விழா
                            * விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி 79 ஆம் ஆண்டு  பிறந்த நாள்
                             * மூடநம்பிக்கை குறித்த கருத்தரங்கம்
                              * சமூகநீதிக் காவலர் வி.பி சிங் பட திறப்பு
                              * வீரமணி - ஒரு விமர்சனம் நூல் வெளியீடு
                                                              அன்புடன் அழைக்கிறோம் !
  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவும் மருத்துவர் கொ .மாரிமுத்து   அவர்களுக்கு பாராட்டு விழாவும் ,விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் ,மூடநம்பிக்கை குறித்த கருத்தரங்கமும் ,சமூகநீதிக் காவலர் விபி சிங் பட திறப்பும் ,வீரமணி ஒரு விமர்சனம் நூல் வெளியீட்டு விழாவும்  வரும் திசம்பர்   திங்கள் 18 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில்   ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெறுகிறது

இவ் விழாவிற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணா .சரவணன்   வரவேற்புரையாற்றுகிறார்.விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் மானமிகு.அண்ணா .அப்பாசாமி அவர்கள் ஆண்டு  அறிக்கை வாசிக்கிறார் . எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெ.செந்தில் நாதன்M.B.B.S.,M.S(ortho) ராஜ் ஆர்த்தோ கேர்    தலைமை தாங்குகிறார்  ,விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக மண்டல செயலாளருமான   மானமிகு பழ .வெங்கடாசலம்   அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றுகின்றார்

மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் அவர்கள் மூத்த எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி -ஒரு விமர்சனம் என்னும் நூலை வெளியிடவித்யா மந்திர் கல்வி நிறுவனக்களின் நிறுவனர் வே .சந்திரசேகரன் ,காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் கணேஷ்மல் ,தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை மரியஅந்தோணி ராஜ்,தூய நெஞ்சக் கல்லூரியின் தேர்வுக் கண்காணிப்பாளர் அருட் தந்தை பிரவீன் பீட்டர் ,மத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் பொன்.குணசேகரன் ,  விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி,திருப்பத்தூர் காங்கிரஸ் பொறுப்பாளர்  T V மாதவன் ,  ஆகியோர் நூல்களை பெற்று கொள்கின்றனர்

 ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் 2009 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் கிருட்டினகிரி மாவட்டத்தில் சிறந்த மருத்துவர் எனமாவட்ட ஆட்சி தலைவரிடத்தில் விருது பெற்ற திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து பாராட்டப்படுகிறார் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முக தாடை அறுவை சிகிச்சை நிபுணர் பழ .ஜெகன்பாபு M.D.S.பாராட்டுரை நிகழ்த்துகிறார்



             நவம்பர் 27  சமுக நீதிக் காவலர் விபி சிங் அவர்களின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில் சமுக நீதிக் காவலர் விபி சிங் அவர்களின் படத்தினை வேலூர் கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் முகமது சயி M.B.B.S.M.S(opthal)திறந்து வைத்து உரையாற்றுகின்றார்  


''தமிழ் நாடும் மூடநம்பிக்கையும்   ''என்னும் தலைப்பில் இளைஞ்சர் இயக்கத்தின் நிறுவனர் மருத்துவர் நா .எழிலன் MBBS.,MD  கருத்துரையாற்றுகின்றார்

விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்குகின்றார்.மானமிகு இரா .வேங்கடம்    நன்றி உரையாற்றுகின்றார்
அனைவரும் வருக !

No comments:

Post a Comment