அன்புடன் அழைக்கிறோம் ! ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழர் தொன்மை குறித்த ஆய்வு கருத்தரங்கமும் ,மருத்துவர் வெ.தேவராசு M .D . அவர்களுக்கு பாராட்டு விழாவும் வரும் பிப்ரவரி திங்கள் 5 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெறுகிறது
இவ் விழாவிற்கு ஆடிட்டர் .ராசேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி மாத அறிக்கை வாசிக்கிறார் . அருட்பணி பங்குதந்தை .அ.ஜோசப் புனித அந்தோனியார் சர்ச் அவர்கள் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார் ,விடுதலை வாசகர் வட்ட புரவலர் கவி.செங்குட்டுவன் அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றுகின்றார் .திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ அவர்களும் .ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க தலைவர் கீ .ஆ.கோபாலன் அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர் ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம்,மருத்துவர் வெ.தேவராசு M .D .அவரின் சிறப்பான மருத்துவ பணிகளுக்காக பாராட்ட படுகிறார்.ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் பாராட்டுரை. நிகழ்த்துகின்றார்.
அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செ.ராஜேந்திரன் அவர்கள் தமிழக விஞ்சானி ஜி .டி.நாயுடு படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

'.தமிழர் தொன்மை குறித்த ஆய்வுகருத்தரங்கில் கடல் சார் ஆய்வாளர் சிவ.பாலசுப்ரமணி கருத்துரையாற்றுகின்றார்
.திரு சிவ.பால சுப்பிரமணி அவர்களின் தன் விவரக் குறிப்பு சிவ பாலசுப்ரமணி 1963 ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் சிவஞானம் ராஜேஸ்வரி அவர்களுக்கு திருச்சி உறையூரில் மகனாய் பிறந்தார். இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளிநாட்டு கருவிகளை பழுது பார்க்கும் தொடர் பான பொறிஇயல்துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர் .
தமிழர்களின் தொன்மைத் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருபவர் ஒரிசா புபனேஸ்வர் தமிழ் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து செயலர் ஆக பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்து அவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தவர். ஒரிசாவில் அவர் செய்த கலிங்க தமிழ் தொடர்புகள் தொடர்பானதமிழ் ஆய்வுகள் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டியசெயல் ஆகும்.
ஒரிசா என்ற கிளைகளில் தமிழை தேடிய அவர் அவருடைய வெகு நாள் தொழில் நுட்பம் மற்றும் மரபு சார்ந்த பணிகள் தொடர்பால் குமரி கண்டம் மற்றும் லெமுரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டு, இன்று மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம் போன்ற நிகழ்வுகள் தமிழ் இலக்கியம் சொன்ன செய்திகளின் அடிப்படை உண்மைகள் என்று நிரூபித்து வருகிறார். அதே போல் இனபெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகமாய் மாற்றப்பட்டதையும், ஆமைகள் நம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகள், நம்முடைய கடலோடிகளால் பயன்படுத்தப்பட்டு அவர்கள் உலகம் முழுவதையும் வலம் வந்தபதிவுகளை ஆமைகள் தொடர்பான இடங்கள் தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்தவர். புவியின் சுழற்சியில் தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்கள் அவர்கள் இயற்கையின் பயன்பாட்டை உலகிற்கு முதலில் கடல் மூலமாக சென்று அறிமுகப்படுத்தியவர்கள் என்பதை தமிழர்களின் கடல்சார் மேலாண்மை, இரும்பு நாகரிகம், நெல், வேளாண்மை நாகரிகம் போன்ற தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருபவர்.
மீனவர்கள், நீர் மூழ்கிகள் மற்றும் பாய் மரக்கப்பல் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து பல்வேறு தொழில் நுட்பங்களை அவர்களிடம் அறிமுகபடுத்தி வருபவர். அதே சமயத்தில் அவர்களின் கடல்சார் மேலாண்மையை உலகிற்கு தொலைக்காட்சிகளின் மூலம் அறிமுகப்படுத்தி வருபவர் தமிழர்கள் கடல்சார் மரபு மற்றும் சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து தமிழகம் முழவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருபவர்.
வரலாறு சங்க கால தமிழ் இலக்கியம் என்பது வருங்கால சமூகத்திற்கு வழிகாட்டிகளாக இருக்கும் என்பது அவருடைய நம்பிக்கை அதன் மூலம் பல சிக்கல்களை கடற்கரையில் தீர்த்து கொண்டு வருகிறார் நுளையர், முக்குவர், நாவியர்மற்றும் வாதிரியார்களைப் பற்றிய அவருடைய ஆய்வு முயற்சிகள் தொடருகின்றன. இணைய உலகில் வரலாறு மற்றும் மரபு சுற்றுச்சூழல் தொடர்பான குழுமங்களுடன் நெருங்கி பழகுபவர் பல மாணவர்களின் கடல்சார் ஆய்வுகளுக்கு துணை புரிந்து வருகிறார் கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராய் பணிபுரிபவர் மீன் வளம், பாய் மர கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் ஆய்வு, இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல்சார் குழுமம், மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்
ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை தொடங்கி கடல்சார் மேலாண்மை தொடர்பாக இயங்கி வருபவர் அவருக்கு ராஜேஸ்வரி என்ற துணைவியாரும் வெங்கடேஷ், வீணா என்ற மகனும் மகளும் இருக்கிறார்கள். அவரின் உலகளாவிய கடற்கரை தொடர்பான சமூகம் பற்றிய ஆய்வுகள் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் .
இவ் விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்குகின்றார்.மானமிகு இர .பழனி நன்றி உரையாற்றுகின்றார்
அனைவரும்வருக !