விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 26 January 2012

மொழிப்போர் தியாகிகள் நினைவு கருத்தரங்கம் மற்றும் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் விழா






































































ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற   தமிழ்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் விழா மற்றும் மொழிப்போர் தியாகிகள் நினைவு  கருத்தரங்கம் கடந்த ஜனவரி   22  ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில்   ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு விடுதலை  வாசகர் வட்டத்தின் துணைசெயலாளர்  ஆடிட்டர் ந.இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் மானமிகு.அண்ணா .அப்பாசாமி அவர்கள் மாத  அறிக்கை வாசித்தார்  .விழா அறிமுக உரையை மாவட்ட தலைவர் திரினாமுல் காங்கிரஸ்  திரு க.அசோக் உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு பர்கூர்  சட்டமன்ற தி மு க உறுப்பினர்   திருமிகு கே .ஆர் .கே நரசிம்மன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினர் .திராவிட கழக மாவட்ட செயலாளர்  மானமிகு வி.ஜி . இளங்கோ, மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட  தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி  ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் ''சுயரூபம் " ஒரு நிலவும் சில நட்சத்திரங்களும் "  கவிதைத் துறைமுகம் சுரதா " ஆகிய கவிதை தொகுப்புகளை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிய கவிஞர் .இ .சாகுல் அமீத்  பாராட்டபட்டார்.அவரது தன விவரக் குறிப்பினை  வித்யா மந்திர் கல்லூரியின் கணினி  பேராசிரியர்  ச.செந்தில்நாதன் வாசித்தார் .தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில தலைவர் கவிஞர் .இரவிந்திர பாரதி பாராட்டுரை நிகழ்த்தினார்.

முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு  திமுக நகர செயலாளர் இர. பாபு சிவக்குமார் ,பாப்பிரெடிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன்  ,முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.பரமசிவம் ,நகர திமுக அவைத் தலைவர் பா .அம்மானுல்லா ,திமுக ஒன்றிய செயலாளர் எக்கூர். த. செல்வம்   ஆகியோர் சிறப்பு செய்தனர்.

             திசம்பர் 25  மொழிப் போர் தியாகிகள்  நினைவு நாளை நினைவு கூறும் வகையில்  சென்னை பல் மருத்துவர்  மொழி போர் தியாகிகள்  படத்தினை நாடளுமன்ற உறுப்பினரும்  ,திமுக இளைஞர் அணியின் மாநில துணை அமைப்பளருமான  இ.ஜி.சுகவனம் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்  ''தமிழ் எங்கள் உயிருக்கு நேர்    ''என்னும் தலைப்பில் முனைவர்  வேலூர் ந .நாராயணன்      கருத்துரை  ஆற்றினர் .

விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்கினார்.மானமிகு இரா .பழனி  நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியில் பங்கு பெற வந்திருந்த அனைவருக்கும்  தமிழர் தலைவரின் டாக்டர்  கலைஞரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி   நகலெடுத்து வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவு வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு ,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்..

No comments:

Post a Comment