நிகழ்வு நடைபெற்ற அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள கணினி நூலகம்
அருட்தந்தை அ.ஜோசப் அவர்களின் தலைமையுரை
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற தமிழர் தொன்மை குறித்த ஆய்வுக் கருத்தரங்கம் மற்றும் மருத்துவர் வெ.தேவராசு எம்.டி.,அவர்களுக்கு பாராட்டு விழா.பிப்ரவரி 5 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் துணைசெயலாளர் ஆடிட்டர் ந.இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் மாத அறிக்கை வாசித்தார் .விழா அறிமுக உரையை விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலர் கவி .செங்குட்டுவன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு புனித அந்தோணியார் ஆர்.சி.சர்ச்,ஊற்றங்கரை அருட்பணி.அ.ஜோசப் அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினர்.ஊற்றங்கரை தமிழ்சங்கத்தின் தலைவர் கீ.ஆ.கோபாலன் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டப்படுவார் .இம் மாதம்
,மாவட்ட அளவில் சிறந்த அதிகாரியாக கிருட்டினகிரி மாவட்ட ஆட்சி தலைவரால் பாராட்டுப்பெற்ற, சீரிய தமிழ் பற்றாளர் ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்கத்தின் காவலர் ,சமுக சிந்தனையாளர் ,முதுநிலை மருத்துவர் வெ.தேவராசு M .D .அவரின் சிறப்பான மருத்துவ சேவைக்காக பாராட்டப்பட்டார் .அவரது தன் விவரக் குறிப்பினை திராவிடர் கழக இளைஞ்சரணி பொறுப்பாளர்
சிவராஜ் வாசித்தார்.ஊற்றங்கரை தமிழ்சங்கத்தின் செயலாளரும் விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான மானமிகு.பழ.வெங்கடாசலம் அவர்கள் பாராட்டுரையாற்றினார்
முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு கவிஞர் .சுப்புலட்சுமி,தமிழ்சங்க பொறுப்பாளர் குருநாதன்,வாசகர் வட்ட துணைசெயலாளர் இரா.பழனி,புலவர்.அண்ணாமலை ஆகியோர் சிறப்பு செய்தனர்.
இவ் விழாவில் தமிழக விஞ்சானி ஜி.டி.நாயுடு அவர்களின் மார்ச் 22 பிறந்த நாளையொட்டியும் சனவரி 4 நினைவு நாளையொட்டியும் அவரது படத்தினை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.ராஜேந்திரன் திறந்துவைத்து உரையாற்றினர்
உலகம் முழுவதும் உள்ள தமிழர் பண்பாடுகளின் கூறுகள் குறித்தும் ,இன்றைய தமிழகத்தின் தொன்மை குறித்து நமக்கு தெரிந்ததும் அறியாததும் குறித்தும் ,கடல் சூழ்ந்த தமிழர்களுக்கு கடல் மேலாண்மை குறித்து உலக கப்பல் நாகரிகத்தின் வளர்ச்சி ஆங்கிலேய நீராவி கப்பல்களால் மறைக்கப்பட்ட வரலாற்றை நமது வழிகலங்களின் திறன் அது சென்ற இடங்களை பற்றியும் காணொளி மூலம் அண்மையில் பெரியார் விருதினை தமிழர் தலைவர் அவர்களால் பெற்ற ஒரிசா பாலு என்கிற சிவ.பாலசுப்ரமணியம் கருத்துரையாற்றினார்
விடுதலை வாசகர் வட்ட செயல்பாட்டினை பாராட்டி வேலூர் தமிழ் சங்க செயலாளர் மு.சுகுமார் அவர்கள் அளித்த ருபாய் 2000 த்தை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி அவர்களிடம் நிகழ்ச்சியில் வழங்கினார் .அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செ.ராஜேந்திரன் ஒரு ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்கினார்.மானமிகு இரா .பழனி நன்றி உரையாற்றினார்
.நிகழ்ச்சியில் பங்கு பெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் நகலெடுத்து வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவு வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு ,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.