விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 3 February 2012

முத்தமிழ் நேசர் முதுநிலை மருத்துவர் வெ.தேவராசு !

ஊற்றங்கரை நகரில் மிகச் சிறப்பான மருத்துவ சேவை ஆற்றியமைக்காக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டு பெரும் மரியாதைக்குரிய மருத்துவர் வெ .தேவராசு அவர்கள் தமிழ் மூதாட்டி ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் ஆண்ட தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டி என்னும் கிராமத்தில் வெங்கடாசலம் -அன்னம்மாள் ஆகியோர்க்கு மகனாய் 14 - 10 -1951 பிறந்தவர் ஆவார்

கவுண்டம்பட்டியில் அமைந்துள்ள அரசு துவக்கப் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை கற்றார் .பின்னர் தனது ஊருக்கு அருகாமையில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அரசு உயர் நிலை பள்ளியில் தனது உயர் நிலைக் கல்வியை கற்றார்.உயர் நிலைக் கல்வி கற்கும்போது மாவட்டத்தில் இரண்டாவது மாணவராகவும் ,தாழ்த்தப்பட்ட மாணவர்களில் மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார் .தமிழ் மொழி மீதான ஆர்வம் இவருக்கு பள்ளி பருவத்திலேயே தொடங்கிற்று .பள்ளியில் இலக்கிய மன்ற செயலாளராக செயல்பட்டுள்ளார் .பள்ளி ,கல்லூரிகளில் நடக்கும் பேச்சுப் போட்டி ,கட்டுரைப் போட்டி ,கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார் .   1970 -1971 வரை அறிமுக  பல்கலைக்கழக படிப்பை
(PUC ) சேலம் அரசு கலைக் கல்லூரியில் முடித்தார் தாய்காட்டும் தாய் மொழிக்கே முதன்மை வேண்டும் தாய் நாட்டுப் பற்றுக்கே முதன்மை வேண்டும் என்கிற கவிதை வரிகளுக்கு ஏற்ப இவரது கல்வி அறிமுக பல்கலைக் கழக படிப்பு(PUC ) வரை தமிழ் வழிக் கல்வியாகவே அமைந்தது .

1971 ஆம் ஆண்டு
அறிமுக பல்கலைக் கழக படிப்பு(PUC )முடித்தவுடன் சில காலம் இளநிலை எழுத்தராக சேலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றினார் .அதன் பின்னர் 1972 இல் இளநிலை மருத்துவ பட்டப் படிப்பிற்கு(MBBS ) தேர்ந்து எடுக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பினை முடித்து சேலம் தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் நிறுவனத்தில் மருத்துவ அலுவலராக  முதன் முதலாக பணியமர்த்தப்பட்டார்.1979 -1980 வரை தமிழ்நாடு மின்சார வாரியம் பவானி,மேட்டுர்  பகுதியிலும் 1981 -1982 வரை அரசு தலைமை மருத்துவமனை தருமபுரியிலும் ,1982 -83 வரை அரசு மருத்துவமனை இராயக்கோட்டையிலும்,1983 -1984 வரை அரூர் அரசு மருத்துவமனையிலும் மருத்துவ அலுவலராக பணியாற்றினார் .அதன் பின்னர் 1984 ஆம் ஆண்டு முதுநிலைப் மருத்துவ பட்ட படிப்பிற்கு(MD ) தேர்வு செய்யப்பட்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 1986 ஆம் ஆண்டு வரை படித்தார்

1986 -91  வரை ஊற்றங்கரை அரசு மருத்துவமனையிலும் ,1991 -98 வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் காரப்பட்டு மருத்துவமனையிலும்பணியாற்றினார் .காரப்பட்டு மருத்துவ அலுவலராக பணியாற்றும் போது பழைய பஞ்சாயத்து கட்டிடத்தில் இயங்கி வந்த மருத்துவமனையை தற்போது இயங்கி வரும் எழிலார்ந்த கட்டத்தை அமைத்து கொடுத்த பெருமை இவரையே சாரும் .அது மட்டும் இல்லாமல் காரப்பட்டு ஏரியில் மாங்காய் ஏற்றி வந்த 14  பள்ளி குழந்தைகள் அந்த விபத்தில் உயிர் இழந்தனர் .அந்த விபத்தில் தீவிர சிகிச்சைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் ஆற்றிய சீரிய பணிகட்காக  அன்றைய தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவரிடத்தில் பாராட்டினை பெற்றார் .
1998 -2001
வரை மீண்டும் ஊற்றங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றினார் .அச் சமயத்தில்  சிங்காரப்பேட்டை ஏரியில் பேருந்து கவிழ்ந்து திருமண வீட்டார் பலர் அடிபட்டனர் 35 க்கும் மேற்ப்பட்டோர் இறந்து போயினர் இந்த விபத்து நடைப்பெற்ற போது விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தமைக்காகவும் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டமைக்காகவும் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி சான்றளித்துள்ளார் . 2001 -2002 வரை அம்மாபேட்டை இ .எஸ் .ஐ மருத்துவமனையிலும் 2002  இலிருந்து 31 .10 . 2009 இணை இயக்குநராய்  தன் பணிக்காலம் நிறைவடையும் வரை ஊற்றங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றினார் ஊற்றங்கரை அரசு மருத்துவமனையில் அவர் பணியாற்றிய காலத்தில் புறநோயாளிகள் வருகை ,உள் நோயாளிகள்  பிரசவம் ஆகியவற்றில் மாவட்டத்தில் முதல் இடத்தை பல முறை செய்துள்ளார் .
2007 ஆம் ஆண்டு கிருட்டினகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநராய் பொறுப்பேற்றார் .மாவட்ட அளவில் சுகாதார  பணிகட்கு சுமார் 1 கோடி ரூபாய் மாவட்ட ஆட்சி தலைவரின் உதவியுடன் நிதி திரட்டி ஒரு நிலையான வைப்பு தொகையை உண்டாக்கி அதிலிருந்து வரும் வட்டி பணத்தில் சுகாதார பணிக்கு பயன்படுத்தி  உள்ளார்.மாநில அளவில் முதல்முயற்சியாக இதை செய்தமைக்கு பாராட்டு பெற்றுள்ளார் .மாவட்ட அளவில் சிறந்த அதிகாரியாக கிருட்டினகிரி மாவட்ட ஆட்சி தலைவரால் பாராட்டுப்பெற்றவர் 
ஊற்றங்கரை முதல் முது நிலை மருத்துவரான தேவராசு அவர்கள் சீரிய தமிழ் பற்றாளர் ,கவிஞரும் கூட ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்கத்தின் காவலர் ,சமுக சிந்தனையாளர் ,ஊற்றங்கரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ அலுவலராக இவர் பொறுப்பேற்ற பின்னரே மருத்துவமனை  பல கோடி செலவில் விரிவாக்கம் செய்ய திட்டம் தீட்டப்பட்டது .மருத்துவமனை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது
 
என்னரும் தமிழ் நாட்டின் கண்

எல்லோரும் கல்வி கற்று
பன்னறும் கலை ஞானத்தால்
பராக்கிரமத்தால் அன்பால்
உன்னத இம மலை போல்
ஓங்கிடும் கீர்த்தியுடன் வாழவேண்டும் !என்கிற புரட்சிக் கவிஞரின் ஏக்கத்தை போக்கிடும் வகையில் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து தனது அறிவால்,உழைப்பால் ,மருத்துவராய் ,மிகச்சிறந்த மனித நேய மான்பாளராய் ,மிளிர்ந்துள்ள இத் தமிழரை விடுதலை வாசகர் வட்டம் பாராட்டி மகிழ்கிறது

No comments:

Post a Comment