விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Monday, 19 March 2012

வழிகாட்டும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்



 http://www.viduthalai.in/page4.html
கடந்த ஒன்றரை வருடங்களாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சிறப்புடன் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள் .இயக்கத்திற்கு ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாய் தொடங்கப்பட்ட இவ் வட்டம் பெரு வெற்றியடைந்துள்ளது ஒவொரு மாதமும் ஊற்றங்கரை நகரில் சிறப்பாக பணியாற்றிய ,அல்லது நகரில் பிறந்து நகருக்குக் புகழ் சேர்க்கும் பலரையும் அழைத்து பாராட்டி வருகிறோம்.     அந்த அடிப்படையில் வருகிற ஜூன் 10 ஆம் தேதி எங்கள் மண்ணின் மைந்தர் தங்களுக்கு நன்கு அறிமுகமான ,வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் தண்டபாணி குப்புசாமி அவர்களை பாராட்ட திட்டமிட்டுள்ளோம் .அவரும் நிகழ்வில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்து மெயில் அனுப்பி உள்ளார். இந் நிகழ்வில் தாங்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்ற வேண்டும் என பெரிதும் விரும்பு கிறோம். தங்களின் வருகை வாசகர் வட்ட உறுப்பினர்கள்  அனை வருக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கும். இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிட அன்புடன் வேண்டுகிறேன்  நன்றி!
அன்புடன்
பழ.பிரபு D.pharm .B.H.M.,M.B.A.
செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்
மு.  மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம்
இராசா மருந்தகம் ஊற்றங்கரை  கைப்பேசி: 9942166695
தலைவர்: தணிகை .கருணாநிதி கைப்பேசி: 9865817165
அமைப்பாளர்: பழ .வெங்கடாசலம் கைப்பேசி ;9443910444
செயலாளர்: பழ. பிரபு - செல் 9942166695
வாசகர் வட்ட நிகழ்வுகளின் பதிவுகளை காண http://ugividuthalai.blogspot.com/
வாசகர் வட்டத்தில் நடை பெற்றுள்ள கருத்தரங்கமும், - கருத்துரையாளர்களும் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி பிறந்தநாள் கருத்தரங்கம், -முன்னாள் என்.ஜி.ஒ சங்க தலைவர் அறிவுக்கரசு, தமிழ் புத்தாண்டு & தமிழர் திருநாள் கருத்தரங்கம் -துரை.சந்திரசேகரன், இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம், - டாக்டர் சிவசுப்பிரமனியம்  எம்.டி. ..(cardio) மகளிர் தின கருத்தரங்கம்  வழக்கறிஞர் அ.அருள்மொழி தன்னம்பிக்கை பயிற்சி கருத்தரங்கம் -தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஜாகிர் ஹுசைன் மே தின கருத்தரங்கம் - சாகுல் அமீத் திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்தரங்கம் - பெரியாரியல் பேச்சாளர் பெரியார் செல்வன் காமராஜர் பிறந்த நாள் விழா - கவிஞர் கலி. பூங்குன்றன் தமிழ் இணைய பயிலரங்கம் -புதுவை பேராசிரியர் .மு.இளங்கோவன் பெரியார் பிறந்த நாள் விழா  முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் ஊடகம் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் - நிழல் .திருநாவுக்கரசு மூடநம்பிக்கை குறித்த சிறப்பு கருத்தரங்கம் - மருத்துவர் எழிலன் மொழிப் போர்த் தியாகிகள் நினைவு கருத்தரங்கம் - இ .ஜி .சுகவனம்  தமிழர் தொன்மை குறித்த கருத்தரங்கம் -ஒரிசா பாலு என்கிற சிவ.பாலசுப்ரமணியம் உலக மகளிர் தின விழா -கவிஞர் ருக்மணி.

வாசகர் வட்டத்தால் பாராட்டப்பட்டவர்கள்
1. பெரியார் பெருந்தொண் டர்கள்
2. வித்யா மந்திர் நிறுவனர் வே.சந்திரசேகரன்
3. பத்திரிகை முகவர் ரகோத்தமன்
4. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை புவனேஸ்வரி
5. அரிமா. முத்து .சந்திரசேகரன்  சிகிரி பெட்ரோலியம்
6. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் வரதராசன்
7. அதியமான் கல்வி நிறுவனர் திருமால் முருகன்
8. மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன்
9. சங்கர் IAS அகடமியின் நிறுவனர் சங்கர்
10. வித்யா மந்திர் கல்லூரியின் முதல்வர் க.அருள்
11. தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கோ.முரளி
12. மருத்துவர் .கொ.மாரிமுத்து
13. கவிஞர் .சாகுல் அமீத்
14. மருத்துவர் வெ.தேவராசு
15. மரு.பிருந்தா இ.ஆ..ப
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தை இணையத்தில் தொடர்பு கொள்ள http://ugividuthalai.blogspot.in/

Monday, 5 March 2012

திராவிட இயக்க வீராங்கனைகள் படத்திறப்பு -காணொளி



அன்னை மணியம்மையார் ,அன்னை நாகம்மையார் ,மூவலூர் ராமாமிர்தம் ,மீனாம்பாள் சிவராஜ் ,தருமாம்பாள் ஆகிய திராவிட இயக்க வீராங்கனைகள் படத்தினை ஊற்றங்கரை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் அழகுமணி திறந்து வைத்து ஆற்றிய உரை



                                                 
கிருட்டிணகிரி மாவட்ட முதல் IAS மருத்துவர் . தே.பிருந்தா அவர்களை பாராட்டி திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் ம.கவிதா ஆற்றிய உரை 

மருத்துவர் பிருந்தா IAS அவர்கள் ஆற்றிய ஏற்புரை
 
தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் முதல்வர் Rev .பிலோமினா ஆற்றிய உரை 
 

Sunday, 4 March 2012

அனைத்து உலக மகளிர் நாள் கருத்தரங்கம்

                       ''தந்தையே தா உன் கைத்தடி''
                                             
            அனைத்து  உலக மகளிர் நாள் கருத்தரங்கம்

       திராவிட இயக்க வீராங்கனைகள் படத்திறப்பு 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 16 ஆம் நிகழ்வாக  மார்ச் 4 ஆம்  தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் உலக மகளிர் தின விழாவும் கிருட்டினகிரி மாவட்டத்தின் முதல் இந்திய ஆட்சி பணியிற்கு (I .A .S )தேர்வு பெற்ற ஊற்றங்கரையின் பெருமைக்குரிய  மருத்துவர் தே.பிருந்தா IAS அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைப்பெற்றது 

 இவ் விழாவிற்கு மகளிர் பாசறையின் மாவட்ட செயலாளரும் மாதம்பதி அரசினர்உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியருமான மு .இந்திராகாந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .
 விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலர் முருகம்மாள் அப்பாசாமி அவர்கள் மாத  அறிக்கை வாசித்தார்  .

 அறிமுக உரையை ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்பகவல்லி கணேசன்   உரையாற்றினார்.


 இந்நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கண்காணிப்பாளர் கரு.தணிகைகுமாரி அவர்களும்  ,சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் முதல்வருமான பிலோமினா அவர்களும்  ,திலகவதி அருள் அவர்களும் ,வழக்குரைஞர் பிரபாவதி அவர்களும்  முன்னிலை வகித்து உரையாற்றினர் .

முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி ,அமைப்பாளர் பழ .வெங்கடாசலம் ,துணைசெயலாளர் ஆடிட்டர் ராஜேந்திரன் ,கி.ஆ .கோபாலன் ,  ஆகியோர் சிறப்பு செய்தனர்.





 இவ் விழாவில் அன்னை மணியம்மையார் ,அன்னை நாகம்மையார் ,மூவலூர் ராமாமிர்தம் ,மீனாம்பாள் சிவராஜ் ,தருமாம்பாள் ஆகிய திராவிட இயக்க வீராங்கனைகள் படத்தினை ஊற்றங்கரை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் அழகுமணி திறந்து வைத்து உரையாற்றினார்.


 ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் ,நகருக்கு பெருமை சேர்த்த பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டப்படுவார் .இம் மாதம் கிருட்டினகிரி மாவட்டத்தின் முதல் இந்திய ஆட்சி பணி பொறுப்பை (I .A S )ஏற்றவரும் ,முதல் முயற்சியிலேயே தனது சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி வெற்றி  பெற்றவருமான ஊற்றங்கரையின்  பெருமைக்குரிய மண்ணின் மைந்தர் மருத்துவர் .தே.பிருந்தா அவர்கள் அவர்கள் பாராட்டப்பட்டார். திராவிடர் கழக மாவட்ட மகளிரணி  செயலாளர் கவிதா அவர்கள் பாராட்டுரையாற்றினார்






 .மருத்துவர் .தே.பிருந்தா அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாய் திகழ்ந்த அவரது தாயார் தெய்வாணை பாராட்டப்பட்டார். அவருக்கு மேனாள் திராவிடர் கழக மாவட்ட மகளிரணி தலைவர்  கலைமணி பழனியப்பன் சால்வை அணிவித்தார் 


 ஊற்றங்கரை புனித அந்தோணியார் திருச்சபையின் அருட்தந்தை அ.ஜோசப் அவர்கள் மருத்துவர் .தே .பிருந்தா அவர்களுக்கு சால்வை அணிவித்தார்








'' பெரியாரும் பெண்ணியமும் '' என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் என்கிற பெருமை பெற்றவரும் கவிஞரும்  முனைவருமான ருக்மணி அவர்கள் தந்தையே தா உன் கைத் தடி என்னும் தலைப்பில் ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் மிகமிக அற்புதமான காணக்கிடைக்காத அதிசயம் பெரியார். பெரியாரின் சிந்தனை யிலும், செயலிலும் மிக உன்னதமானது பெண்ணுரிமைக் கோட்பாடு. தனி வாழ்க்கை வேறு; பொதுவாழ்க்கை வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாதது பெரியாரின் வாழ்வு. உண்மையும், நேர்மையும், துணிச்சலும் மனிதத்துவமும் நிறைந்த அவரைப் போன்ற பொதுத்தொண்டு புரிந்தோர் அரிதினும் அரிதானவர்களே! உலகில் பெண்ணியச் சிந்தனைக்கும், பெண் விடுதலைக்குமான செயல்பாடு களுக்கும் முன் மாதிரியாகவும், வேறு எவரையும் ஒப்பிடமுடியாதபடி திகழ்ந்த வரும் பெரியாரே ஆவார். பெண் உரிமைக் காவலர் என்பதன் முழு அடையாளமும் அவரேஎன்று கூறி .இன்னமும் பெண்ணுக்கு வாழ்வுரிமை கிடைக்காமல், தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பாலும் எருக்கம்பாலும் தந்து கொல்லப்படும் நிலையில் தந்தையின் தத்துவமே பெண்  இனத்தை மீட்டு எடுக்கும் கைத்தடியாய் பயன் படுத்துவோம் என்று உரையாற்றினார்.


                                          


 இந் நிகழ்ச்சியை வித்யா பிரபு தொகுத்து வழங்கினார் .நா .வசந்த மல்லி சிவராஜ் நன்றி உரையாற்றினார்





நிகழ்ச்சியில் பங்கு பெற வந்திருந்த அனைவருக்கும்  தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள்  நகலெடுத்து வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவு வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு ,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.

Thursday, 1 March 2012

மானுட சேவையில் மங்கையர் செம்மல் மருத்துவர் பிருந்தா !

மருத்துவம் முதல் மாவட்ட ஆட்சி பணி வரை  மானுட சேவையில்
மங்கையர் செம்மல் மருத்துவர் பிருந்தா !

  கிருட்டினகிரி மாவட்டத்தின் முதல் இந்திய ஆட்சி பணி பொறுப்பை (I .A S )ஏற்றவரும் ,முதல் முயற்சியிலேயே தனது சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி வெற்றி  பெற்றவருமான ஊற்றங்கரையின்  பெருமைக்குரிய மண்ணின் மைந்தர் மருத்துவர் .தே.பிருந்தா அவர்கள் கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் 15 -5 -1982  அன்று தேவராஜ் -தெய்வானை தம்பதியருக்கு இளைய  மகளாய் பிறந்தார். தமிழகத்தின் முன்னணி  ஐ.ஏ.எஸ்., அகாடமிகளில் ஒன்றான சங்கர்  ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் திரு .சங்கர் அவர்கள் இவருடைய சகோதரர் ஆவார் .

 ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல் வகுப்பினையும் ,இரண்டாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான உயர் நிலைக் கல்வியினை ஊற்றங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியிலும், தனது மேல் நிலைக் கல்வியினை இராசிபுரம்   எஸ் .ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார் .விளையாட்டிலும் நாட்டியத்திலும் மிகுந்த ஆர்வம் உள்ள மருத்துவர் .பிருந்தா அவர்கள் பள்ளி ,கல்லூரி நாட்களில்  பல பரிசுகளை பெற்றுள்ளார் .மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற அவரின் தணியாத ஆர்வத்தினால் நுழைவு தேர்வு எழுதி ,மருத்துவத்திற்கு இன்னும் மதிப்பெண்கள் தேவைப்பட்ட சூழலில் இம்ப்ருமென்ட் எழுதி திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம்(MBBS ) கற்றார் .அதன் பின்னர் 5  மாத காலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றினார். மருத்துவ மேல் படிப்பு படிக்க சென்னையில் அண்ணன் சங்கர் இல்லத்தில் தங்கியிருந்த போது, சங்கர்  ஐ.ஏ.எஸ் அகாடமியில் அமர்ந்து இருப்பார் .அப்போது அங்கு படிக்கும் மாணவர்களை பார்த்து நாமும் சிவில் சர்வீஸ் எழுதினால் என்ன என  முயற்சி செய்தார்
ப்ரீலிமினரிக்கு புவியியல் பாடத்தையும் மெயின் தேர்வுக்கு புவியியல் மற்றும் விலங்கியல் பாடத்தையும் தேர்ந்தெடுத்து 2009 ஆண்டு நடைப்பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில்  152  ஆம் இடத்தை  பெற்று முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் . 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 1  ஆம் நாள் இந்திய ஆட்சிப்  பணியில் இணைந்தார் .டேராடூன்  அடுத்த முசௌரியில் உள்ள லால்பகதூர் சாஸ்த்ரி தேசியஆட்சிப் பணி அகாதமியில் மூன்று மாத கால பயிற்சி முடித்து ஒரிசா மாநில கிரன்சூர் மாவட்ட பயிற்சி ஆட்சியராக   பணியில் உள்ளார்
இளம் வயதில் தந்தையை இழந்த மருத்துவர் பிருந்தா அவர்களின் வாழ்க்கையில் அவரது சகோதரர் திரு .சங்கர் அவர்களின் பங்கு மகத்தானது ,போற்றத்தக்கது ,கல்வி ,பணி மட்டும் அல்ல மருத்துவர் பிருந்தா அவர்களின்  வாழ்வினையரையும் அவரே ஏற்பாடு செய்தார் .இணையத்தின் மூலம் மணமக்களை ஒருவருக்கொருவர்  தேர்ந்து  எடுத்துக்கொண்டனர்.
மருத்துவர் பிருந்தா அவர்களின் வாழ்விணையர் முனைவர் .இ.சிவக்குமார் அலஸ்காவில் உள்ள  ஜியார்ஜியா   மருத்துவ பல்கலைக் கழகத்தில் புற்றுநோய் துறை அறிஞராக பணியாற்றுகின்றார் .இவர்கள் இருவருக்கும் 2010 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 21  ஆம் தேதி ஊற்றங்கரையில் திருமணம் நடைபெற்றது
.
நம்ம நாட்டுல மக்கள் தொகை அதிகம். அது நம்பளோட வளர்ச்சிக்கு தடையா? இது ஐ.ஏ.எஸ். நேர்முக தேர்வின் போது மருத்துவர் பிருந்தா அவர்களிடம்  கேட்கப்பட்ட கேள்வி. ஒரு போதும் தடையில்லை. மக்கள் சக்தியை முழுமையாக பரவலாக பயன்படுத்தினால், நம்முடைய வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியே அடையாது. மேலும், ஜனத்தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ள சில வெளிநாடுகளில் நம் மனித வளத்தை பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் கிட்டும். பிருந்தாவின் இந்த பதில் தான் ஐ.ஏ.எஸ் “. தேர்வில் அகில இந்திய அளவில் ரேங்க் ஹோல்டராக அவரை உயர்த்தியிருக்கிறது.

ஒரு எளிய விவசாய ,பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து தமது கடும் உழைப்பால் தன்னையும் உயர்த்தி,பிறருக்கும் உதவி எடுத்துக்காட்டாக விளங்கி வரும் திரு .சங்கர் அவர்களுக்கும்  பெண்ணாய் பிறத்தலே பாவம் என்கிற சமுகத்தில் தன்னையே உதாரணமாக்கி
''செல்வப் பிள்ளாய் இன்று புவியின்  பெண்கள் சிறு நிலையில் இருக்கவில்லை ;விழித்துக்கொண்டார் !
என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின்  எழுச்சியுற்ற பெண்ணாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் .பிருந்தா அவர்களையும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் பாராட்டி மகிழ்கிறது
"அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
எண்ணும்படி அமைத்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகும்நாள் எந்நாளோ அந்நாளேதுன்பமெல்லாம்
போகும்நாள் இன்பப் புதிய நாள் என்றுரைப்போம்!'' என்றார் புரட்சிக் கவிஞர் இன்றைக்கு அந்த புதிய நாளுக்கான வாயிலை திறந்த பிருந்தா அவர்களின் மானுட சேவை என்றும் தொடரட்டும் வாழ்க !