விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 26 August 2012

மனித நேயக் கருத்தரங்கம் மற்றும் திருவிக படத்திறப்பு விழா

























ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற 
மனித நேயக் கருத்தரங்கம் 

ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மனித நேயக்   கருத்தரங்கம் ,   கடந்த  ஆகஸ்ட்   26 ஆம்    தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற்றது 

இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் சே.சிவராஜ்    வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின்  பொருளாளர் அண்ணா .அப்பாசாமிவாசித்தார் ,விழா அறிமுக உரையை வாசகர் வட்டத்தின்  துணை செயலாளர் ஆடிட்டர் ராசேந்திரன்  ஆற்றினார் 
  இந் நிகழ்ச்சிக்கு ஊற்றங்கரை அரசு மேல் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ப. பொன்னுசாமி தலைமை வகித்து விடுதலை வாசகர் வட்ட செயல் பாடுகளை பாராட்டியும் பாராட்டு பெரும் கவி.செங்குட்டுவன் அவர்களின் தமில்பனிகள் குறித்தும்  உரையையாற்றினார் 

ஊற்றங்கரை மண்டல மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் ச.ஞான சேகரன், மருத்துவர்  அருண் தேவராசு,  திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர்  எம்.கே.எஸ்.இளங்கோ  மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதிஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் 

ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் இந்தியாவிலேயே அரசு பள்ளிக்கென்று தனி இணைய தளம் உருவாக்கி தமிழ் இலக்கிய உலகிற்கும் ,தமிழ் இணைய தளத்திற்கும் பெரும் பங்களிப்பை செய்துவரும் மண்ணின் கவிஞர் கவி.செங்குட்டுவன் என்கிற செ.இராசேந்திரன்  பாராட்டப்பட்டார்   .திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் , பாரட்டுரையாற்றினார் .வாசகர் வட்ட உறுப்பினரும் நகர திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் இரா.பாபுசிவக்குமார்  பாராட்டி நினைவு பரிசு வழங்கினார் .

  ஆகஸ்ட் 26 தமிழ்த் தென்றல் திருவிக அவர்களின்   பிறந்த நாளையொட்டி தமிழ்த் தென்றல் திருவிக படத்தினை ஊற்றங்கரை அதியமான்  மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பிச்சை .முத்து லட்சுமி அவர்கள் திறந்து  வைத்து உரையாற்றினார் .ஊற்றங்கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் சிராஜுதீன்    அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு  ''யார் மனிதன் '' என்னும் தலைப்பில் சிறப்பானதொரு கருத்துரையாற்றினார்   வருகை தந்த  சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள்  ராம்செட்டி  ஆசிரியர் ,பழனிஆசிரியர். பன்னீர்செல்வம் ,ராசேந்திரன் ,பேராசிரியர் செந்தில்நாதன் ,ஆடிடர் ராசேந்திரன் ,காண்பாய் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் .விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் .ஈ வே ரா ஜோ .திருப்தி  நன்றியுரையாற்றினார் 

அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்

மண்ணின் கவிஞன் கவி.செங்குட்டுவன்

ஆகஸ்ட் மாதம் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டு பெற்ற மண்ணின் கவிஞர் கவி.செங்குட்டுவன் அவர்கள் 1968 ஆம் வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி இரா .சென்ன கிருஷ்ணன் ராஜேஸ்வரி தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர்.
  1986 ஆம் ஆண்டு அரசு பணியில் இணைந்தார் .குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா 1987 ஆம் ஆண்டு இவருக்கு ராசேந்திரன் என்கிற இவரது இயற் பெயரை மாற்றி செங்குட்டுவன் என மாற்றினார்

எம் .ஏ.பி .எட்.எம் .பில் .பி.ஜி.டி.சி.ஏ  கல்வி தகுதி கொண்ட இவர் நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக மிக பாராட்டுதலுடன் செயலாற்றி வருகிறார்

இவர் இதுவரை 39 பட்டிமன்றங்கள்,47 கவியரங்கங்கள் 51 இலக்கிய சொற்பொழிவுகள் பங்கேற்று இலக்கிய பணியாற்றி உள்ளார்

965 கவிதைகள் 68 கட்டுரைகள் 43 சிறுகதைகள் 14 நாடகங்கள் 12 ஆய்வு கட்டுரைகள் தமிழ் கூறும் நல்உலகிற்கு வழங்கி உள்ளார் 
அரசு பள்ளிக்கென இந்தியாவிலேயே வலைபூ தளம் உருவாகிய பெருமை இவருக்கு சாரும் http://pumskottukarampatti.blogspot.com
உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் தென் தமிழ் முரசு என பர்ராட்டப்பட்டவர்
சிறந்த இளம் செச்சிலுவை சங்க ஆலோசகர் ,சிறந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்ப்பார்வையாளர் ,என்று மாவட்ட ஆட்சி தலைவரால் பாராட்டப் பட்டவர்
தமிழக ஆசிரியர் கூட்டணியின் செயலாளராகவும் ,தமிழ் எழுத்தர் பேரவையின் மாவட்ட செயலராகவும் ,சீன வானொலி நேயர் மன்றத்தின் மாவட்ட தலைவராகவும் ,உலக தமிழ் கவிஞர் பேரவையின் அமைப்பாளராகவும்  தமிழ் முற்போக்கு எழுத்தர் சங்கத்தின் துணை செயலராகவும் திறம்பட பணியாற்றிவருகிறார்
இவருக்கு ஈ .அகிலாண்டேஸ்வரி என்கிற வாழ்வினையரும் அ.இரா.பொன்னரசி ,அ.இரா.தென்னரசு என்கிற குழந்தைகளும் உண்டு

இவரது முகவரி 119 கச்சேரி சாலை ஊற்றங்கரை 635207
அலைபேசி எண் 9842712109 / 99656345
மின் அஞ்சல் kavi .senguttuvan @  gmail .com

இணையம்    http://kalvikoyil.blogspot.in/2012/08/blog-post_26.html?spref=fb
இவரது பள்ளியை பற்றிய ஒரு கட்டுரை

 http://www.luckylookonline.com/2010/02/blog-post_20.html


மண்ணின் கவியாய் மிக சிறப்பான பங்களிப்பை தமிழ் இலக்கிய உலகிற்கு ,தமிழ் இணையதளத்திற்கு ,கிராமப்புற பள்ளிக்கு  ஆற்றி வரும் கவி .செங்குட்டுவன் அவர்களை விடுதலை வாசகர் வட்டம் பாராட்டுவதுடன் இத் தமிழரின் தமிழ் பணிமென் மேலும் தொடர வாழ்த்துகிறது

மனிதநேயக் கருத்தரங்கம் மற்றும் தமிழ்த் தென்றல் திருவிக படத் திறப்பு விழா


 அனைவரும் வருக !