விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 26 August 2012

மனித நேயக் கருத்தரங்கம் மற்றும் திருவிக படத்திறப்பு விழா

























ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற 
மனித நேயக் கருத்தரங்கம் 

ஊற்றங்கரையில்  விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மனித நேயக்   கருத்தரங்கம் ,   கடந்த  ஆகஸ்ட்   26 ஆம்    தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில்  நடைபெற்றது 

இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் சே.சிவராஜ்    வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின்  பொருளாளர் அண்ணா .அப்பாசாமிவாசித்தார் ,விழா அறிமுக உரையை வாசகர் வட்டத்தின்  துணை செயலாளர் ஆடிட்டர் ராசேந்திரன்  ஆற்றினார் 
  இந் நிகழ்ச்சிக்கு ஊற்றங்கரை அரசு மேல் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ப. பொன்னுசாமி தலைமை வகித்து விடுதலை வாசகர் வட்ட செயல் பாடுகளை பாராட்டியும் பாராட்டு பெரும் கவி.செங்குட்டுவன் அவர்களின் தமில்பனிகள் குறித்தும்  உரையையாற்றினார் 

ஊற்றங்கரை மண்டல மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் ச.ஞான சேகரன், மருத்துவர்  அருண் தேவராசு,  திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர்  எம்.கே.எஸ்.இளங்கோ  மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதிஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் 

ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் இந்தியாவிலேயே அரசு பள்ளிக்கென்று தனி இணைய தளம் உருவாக்கி தமிழ் இலக்கிய உலகிற்கும் ,தமிழ் இணைய தளத்திற்கும் பெரும் பங்களிப்பை செய்துவரும் மண்ணின் கவிஞர் கவி.செங்குட்டுவன் என்கிற செ.இராசேந்திரன்  பாராட்டப்பட்டார்   .திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் , பாரட்டுரையாற்றினார் .வாசகர் வட்ட உறுப்பினரும் நகர திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் இரா.பாபுசிவக்குமார்  பாராட்டி நினைவு பரிசு வழங்கினார் .

  ஆகஸ்ட் 26 தமிழ்த் தென்றல் திருவிக அவர்களின்   பிறந்த நாளையொட்டி தமிழ்த் தென்றல் திருவிக படத்தினை ஊற்றங்கரை அதியமான்  மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பிச்சை .முத்து லட்சுமி அவர்கள் திறந்து  வைத்து உரையாற்றினார் .ஊற்றங்கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் சிராஜுதீன்    அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு  ''யார் மனிதன் '' என்னும் தலைப்பில் சிறப்பானதொரு கருத்துரையாற்றினார்   வருகை தந்த  சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள்  ராம்செட்டி  ஆசிரியர் ,பழனிஆசிரியர். பன்னீர்செல்வம் ,ராசேந்திரன் ,பேராசிரியர் செந்தில்நாதன் ,ஆடிடர் ராசேந்திரன் ,காண்பாய் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் .விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் .ஈ வே ரா ஜோ .திருப்தி  நன்றியுரையாற்றினார் 

அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற  கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்

No comments:

Post a Comment