விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Tuesday, 12 March 2013


மணியம்மையார் பிறந்தநாள் விழாவும் மகளிர் எழுச்சிக் கருத்தரங்கமும்



















































ஊற்றங்கரையில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்துடன் இணைந்து மிக சிறப்புடன் கொண்டாடப்பட்டது .முன்னதாக ஊற்றங்கரை அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த அன்னை மணியம்மையாரின் உருவப் படத்திற்கு மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலாளர் ம.கவிதா இளங்கோ அவர்கள் தலைமை தாங்க ஊடகவியலாளர் கவி மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது ன் மலர் அவர்கள் வாழ்த்தொலிகளுக்கு  இடையே மாலை அணிவித்தார்
இந் நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பாபு சிவக்குமார் ,மாவட்ட திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவையின் அமைப்பாளரும் விடுதலை வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ,வேலூர் மண்டல செயலாளர் பழ,வெங்கடாசலம் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா .சரவணன் ,மாவட்ட துணை செயலாளர் எம்கேஎஸ்.இளங்கோவன் முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,மாவட்ட இளஞ்சரணி பொறுப்பாளர் வண்டி .ஆறுமுகம் ,ஒன்றிய இளஞ்சரணி பொறுப்பாளர் செ.சிவராஜ் ,தலைமை ஆசிரியர் காந்தன்,ஆசிரியர் வெங்கடேசன் ,மத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் வெங்கடாசலம் ,அண்ணா ,அப்பாசாமி உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .மாலை அணிவித்த பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .
மேலும் ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழாவும் மகளிர் எழுச்சிக் கருத்தரங்கமாய் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது .
மத்தூர் அன்னை மணியம்மையார் கலைக்குழுவை சார்ந்த பெண்கள் பெண்ணிய எழுச்சி பாடல்களுக்கு நடனம்ஆடினார் .கலை நிகழ்சிகளுக்கு பின் கருத்தரங்கம் தொடங்கியது .கலை நிகழ்ச்சிகளை அளித்த மாணவிகளுக்கு மகளிரணி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது .
இந் நிகழ்ச்சிக்கு வசந்தமல்லி சிவராஜ் வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை முருகம்மாள் அப்பாசாமி வாசித்தார் , நல்லாசிரியர் விருது பெற்ற மாதம்பதி தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி விழா அறிமுக உரையை ஆற்றிய பின் கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் ஆவணப் படம் திரை இடப்பட்டது

இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலாளர் ம.கவிதா இளங்கோ தலைமை வகித்து ஆவணப் படம் பற்றிய ஆய்வுரையை நிகழ்த்தினார் .ஊற்றங்கரை ஒன்றிய திமுக மகளிரணி செயலாளர் சின்னதாய் , ஊற்றங்கரை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அழகுமணி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.வேலூர் ஸ்மைல் பல் மருத்துவமனையின் மருத்துவர் தி.அனிதா அவர்கள் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்

ஊடகவியலாளர் கவின் மலர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ''ஊடகங்களில் வர்ண பேதமும் பாலியலில் வர்க்க பேதமும் ''என்னும் தலைப்பில் சிறப்பானதொரு கருத்துரையாற்றினார் ,முன்னதாக சிறப்பு விருந்தினரை கவிஞர் நா.சுப்புலட்சுமி அவர்கள் அறிமுகப்படுத்தி உரையாற்றினார் .வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள் ஆசிரியர் சுமதி ,தணிகைகுமாரி ,வெண்ணிலா ,இந்திராகாந்தி ,ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் . விழாவினை ம.வித்யா பிரபு அவர்கள் தொகுத்து வழங்கினார் மத்தூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் ம.ஜான்சிராணி நன்றியுரையாற்றினார்

அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்