ஊற்றங்கரையில்
விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பிறந்தநாள் விழாவும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
படத்திறப்பு விழாவும் ஓய்வு பெற்ற
அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது .
.
இந் நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தின் துணை செயலாளர் ஆடிட்டர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா . அப்பாசாமி வாசித்தார் , மாவட்ட திராவிடர் கழக துணை செயலர் எம்.கே.எஸ் .இளங்கோவன் விழா அறிமுக உரையை ஆற்றினார்
இந் நிகழ்ச்சிக்கு ஊற்றங்கரை அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மருத்துவர் .கே .கந்தசாமி தலைமை வகித்து உரையாற்றினார் .கிராம நிர்வாக அலுவலர் மோ .சீனிவாசன் ,திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ .வெங்கடாசலம் ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படத்தினை சிவா மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் முத்து .செல்வராசன் திறந்து வைத்து பட்டுக்கோட்டை கவிதை வரிகளில் பொதிந்த பகுத்தறிவு சிந்தனை கருத்துக்களை சிறப்பான முறையில் எடுத்துக் கூறினார்
ஊற்றங்கரை நகரில் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொண்டாற்றிய பல்வேறு துறையினை சார்ந்தவர்களை தேர்ந்தெடுத்து வாசகர் வட்டம் சார்பில் பாராட்டப் படுகின்றனர் .அந்த அடிப்படையில் நேசம் தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு சமுக பணியினை செய்துவரும் சமுக சேவகர் குணசேகரன் பாராட்டப்பட்டர் .அவரை பற்றிய அறிமுக குறிப்பினை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு வாசித்தார் .வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு மண்டல மாணவரணி பொறுப்பாளர் எ .சிற்றரசன் ,திருப்பத்தூர் அன்பழகன் , அரிமா ராசா ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர்
பெரியார் வழியில் பாரதிதாசன் என்னும் தலைப்பில் திராவிடர் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் மிக சிறப்பான கருத்துரையை நகைச்சுவையுடனும் பாடலுடனும் வருகை தந்த பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் உரையாற்றினார் .நிறைவாக வாசகர் வட்ட துணைத்தலைவர் இர.வேங்கடம் நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியினை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் தொகுத்து வழங்கினார்
அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்

No comments:
Post a Comment