விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 28 February 2014

38 வது கருத்தரங்க அழைப்பிதழ்





பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரை

மரபுகளை மீறி மன்னர் பங்கேற்ற பெரியார் பிறந்த நாள் விழா



ஊற்றங்கரை, பிப். 13- ஊற் றங்கரையில் ஜனவரி 30ஆம் நாள் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்ட கூட்டத்தில் ஆப்ரிக்காவில் பெரியார் என்னும் தலைப்பில் திரா விடர் கழக பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் உரையாற் றினார். ஆப்பிரிக்கா கானா நாட்டில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வில் அவர் பங்கேற்றது குறித்து குறிப்பிட்டு உரை யாற்றியதாவது:-
விடுதலை வாசகர் வட்ட கூட்டங்களிலேயே மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட கூட்டமாகும். தமிழகத்தில் வடலூர், தஞ்சை,  குமரி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் விடுதலை வாசகர் வட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் முதன் மையானது  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட மாகும். தொடர்ந்து மாதந் தோறும் பல்வேறு தலைப்பு களின் கீழ் அறிஞர் பெரு மக்களை அழைத்து வந்து கருத்தரங்குகளை நடத்தி இன்றைக்கு 37ஆவது கருத் தரங்கமாய்  4ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்தது மட் டும் அல்ல இந்த பகுதிக்கு சிறப்பு சேர்த்த பெரியவர் களையும் அறிஞர் பெருமக்க ளையும் அழைத்து பாராட்டி 150 உறுப்பினர்களுக்கும் மேல் சேர்த்து வளர்ச்சிய டைந்திருப்பது மிகுந்த  மகிழ்ச் சிக்குரியது. வாசகர் வட்ட செயலாளர் சகோதரர் பழ. பிரபு என்னை உரையாற்ற அழைத்தபோது அங்கே ஏதாவது செயலாற்ற வேண் டுமா? வருகிறேன். ஊற்றங் கரையில் வாசகர் வட்டம் எப்படி செயல்படுகிறது அதை போல் மற்ற மாவட் டங்களில் செயல்படுத்த முடி யுமா என்பதைக் காண விரும் புகிறேன்.
ஆகவே  உரையாற்ற அல்ல பார்வையாளனா கவே வர விரும்புகிறேன் என்
றேன், அதோடு எனது சில அனுபவங்களை உங்க ளோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதையொட் டியே எனக்கு ஆப்ரிக்காவில் பெரியார் என்கிற தலைப்பு தரப்பட்டிருந்தது.
சென்ற ஆண்டு எதிர் பார்த்திராத வாய்ப்பாக பெரியார் ஆப்ரிக்கன் பவுண் டேசன்  தந்தை பெரியார் பிறந்த நாளை கானா நாட் டில் மிக சிறப்பாக கொண் டாட திட்டமிட்டு தலைமை யுடன் தொடர்பு கொள்ளும் போது நீங்கள் வருகிறீர்களா ? எனக் கேட்டார்கள். பயணச் சீட்டு எடுத்து கொடுத்தால் வருவதற்கு எங்களுக்கு என்ன தயக்கம் என்று மிக சாதாரணமாக சொன்னோம். அவர்கள் எல்லா ஏற்பாடு களையும் செய்துவிட்டு தமி ழர் தலைவர் அவர்களின் அனுமதி கேட்டபோது தந்தை பெரியாரை உலக மயமாக்க அயராது உழைத்து கொண்டிருக்கும்  என்னை, அனுமதி கொடுத்து சென்று வந்து அதை ஒரு அறிக்கை யாகவும் கொடுக்க கட்டளை இட்டார். ஆப்பிரிக்கா போன பின் தான் தெரிந்தது  4 அல் லது 5 பேர் சேர்ந்து தந்தை பெரியாரை ஆப்பிரிக்கா கண்டத்தில் மிகச் சிறப்பான அளவில் பரப்பி இருக் கிறார்கள்.
கே.சி.எழிலரசனின் பங்கு
இந்த பெருமை எல்லாம் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசனைத்  தான் சாரும், அதிலும் குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி எழிலரசன் பங்களிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. முதன் முதலாய் அந்த நாட் டிற்குச் சென்றேன். என் னோடு விமானத்தில் 200 பேர் பயணம் செய்து இருப் பார்கள். ஆனால் அவர்களில் 120 பேர் பெண்கள். விமான நிலையத்தை அடைந்தவு டன் ஒவ்வொரு பெண்களும் யாருடைய உதவியும் எதிர் பார்க்காமல் அவர்களுடைய பெட்டியை அவர்களே சுமந் தனர். ஒரு பெட்டி சுமாராக 20 கிலோ எடை கொண்டதாய் இருக்கும் ஒவ்வொரு பெண் களும் 5 அல்லது 6 பெட்டி களை சுமந்து சென்றனர். நம்மவர்களாக இருந்தால் சுமை தூக்க யாராவது உள்ளார்களா  என்று தேடிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் எவருடைய உதவியும் எதிர் நோக்காமல்  மூட்டைகளை தூக்கிப் போடுவது போல் பெட்டி களை தூக்கி போட்டு தள்ளிக் கொண்டு சென்றது மிகுந்த ஆச்சரியமாய் இருந்தது. என்னை வரவேற்க வந்த பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவன தலைவர் கே.சி.எழிலரசன் அவர்களிடம்  இவர்கள் எல்லாம் யார் ? என்று கேட் டேன். அவர் சொன்னார் இன்றைக்கு ஞாயிற்று கிழமை, திங்கள் முதல் வெள்ளி வரை இந்த பெண் கள் கடைத்தெருவில் போட்டு வியாபாரம் செய்வார்கள். வெள்ளி இரவு விமானம் பிடித்து  பக்கத்தில் உள்ள துபாய் நாட்டில் அடுத்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வரு வார்கள்;  இப்படி வாரம் வாரம் சென்று வாங்கி வந்து விற்று அவர்களின் பொரு ளாதாரத்தை நிலைநிறுத்தி குடும்பத்தை காப்பாற்று வார்கள்.
பெரியார் கண்ட புரட்சிப் பெண்கள்
ஆணின் துணை இன்றி தனித்து செயல்பட்டு பெரி யார் காண விரும்பிய புரட்சி  பெண்களை அங்குதான் கண்டேன், பெண்கள் அங்கே கடுமையாய் உழைக்கிறார் கள். எல்லா துறைகளிலும், அரசு அதிகார மய்யங்களி லும் 54 விழுக்காட்டிற்கும் மேல் பெண்கள் உள்ளனர். இந்த நிலை இந்தியாவில் கூட கிடையாது. தந்தை பெரியார் காண விரும்பிய சில அங்கே நடைமுறையில் இருப்பதை கண்டு எழிலர சன் அவர்களிடம்  பெரியா ருக்கு இங்கு வேலை இருப் பதாக தெரியவில்லையே என்றேன். அவர் இல்லை இல்லை பெரியார்   இங்கு நிறைய தேவைப்படுகிறார் என்றார். அங்கே உள்ள சாலைகளில் வைக்கப்பட் டுள்ள விளம்பர பதாகை களில் சுப்ரீம் கோர்டில் உங்கள் வழக்கு வெற்றி பெற வேண்டுமா வாருங்கள் பிரார்த்தனை செய்வோம் உங்கள் குடும்பத்தில் பிரச் சினையா? கடவுளிடம் மன் றாடுவோம் என பல்வேறு கம்பெனிகளின் விளம்பரங் கள் பார்த்த பின் ஆமாம் பெரியார் இங்கே தேவைப் படுகிறார் என்று உணர்ந் தேன். இந்தியாவை போல் அவர்களும் பிரிட்டிஷ் ஆதிக் கத்தின் கீழ் இருந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து 10 ஆண்டுகள் கழித்து அதா வது 1957இல் அவர்கள் சுதந் திரம் அடைந்தார்கள். அங்கே கேப்டவுன் என்கிற நகரில் நம் சென்னை எலியட்ஸ் கடற்கரையில் அமைக்க பட்டுள்ளதை போல் ஒரு நுழைவாயில் கொண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதை பாயிண்ட் ஆப் ரிட்டர்ன் என்பார்கள். அதாவது இந்த எல்லையை தாண்டி போனவர்கள் திரும்பி வந்ததாக சரித்திரம் இல்லை. முதன் முதலாய் அந்த நாட்டிலிருந்து அடி மைகளை பிரிட்டிஷ்காரர்கள் விலைக்கு வாங்கிய இடம். இங்கிருந்து அந்த மக்களை விலைக்கு வாங்கி வெளி நாட்டிற்கு அழைத்துச் சென்று விட்டால் மீண்டும் அவர்கள் அந்த நாட்டிற்கு திரும்ப வரவே முடியாது. அத்தகைய கொடுமைகளையெல்லாம் தாங்கி கொண்டு இன்றைக்கு முன்னேற்றப் பாதைக்கு வந்து கொண்டுள்ளனர். அந்த நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு அரசு மட்டு மின்றி அய்.நா சபை, பல நாட்டு தொண்டு நிறுவனங் கள் பொருளாதார உதவி, தொழில் நுட்ப உதவி , கல்வி மற்றும் மருத்துவ உதவி களை செய்து வருகின்றன. அதை அந்த நாட்டு அரசு வரவேற்று அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இப்படிப்பட்ட அமைப்புக் களில் ஒன்றாகத்தான் பெரி யார் ஆப்பிரிக்கன் பவுண் டேசன் முதலில் தொடங்கப் பட்டது.
பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் தொடங்கப் பட்டு அந்த மக்களுக்கான பல பணிகள் செய்யப்பட் டன. குழந்தை பிறந்து தவழ்ந்து நடை போடுவது போல் பெரியார் குறித்த செய்திகள் சிறிது சிறிதாய் பரப்பப்பட்டன. பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி. எழிலரசனை எவர் சந்திக்க வந்தாலும் அவர் அலுவல கத்தில் உள்ள தந்தை பெரி யார் படம் காட்டி அய்யா குறித்த செய்திகளை சொல் லியே பேசுவார். இப்படியாக பெரியார் அம்மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அறிமுகப்படுத்தப்பட்டார். இதற்கிடையில் முதலா மாண்டு நிறைவு விழாவை நடத்த திட்டமிட்டனர். அங்கு விழா என்றால் 20 அல்லது 25 பேர் வந்தால் அது பெரிய நிகழ்ச்சி. காரணம் மக்கள் கடும் உழைப்பாளி கள், நேரத்தை வரையறுத்து தான் நிகழ்ச்சியில் கலந்து கொள் வார்கள்.
முதலாமாண்டு நிகழ் விற்கு பலர் வந்திருந்தனர். அந்த நாட்டில் நிகழ்ச்சிக்கு அழைத்தால் நன்கொடை  தருவது வழக்கம். இந்த நிகழ்விற்கும் பெரியார் ஆப் பிரிக்கன் பவுண்டேசன் வளர்ச்சிக்கு சிலர் பணத்தை கவரில் போட்டு நன்கொடை யாக  எடுத்து வந்திருந்தனர். பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி.எழிலரசன் அவர்கள் இது பெரியார் பிறந்த நாள் கொண்டாட  நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி, நன்கொடை வேண் டாம் என்று அன்பளிப்புக் களை வாங்க மறுத்து அய்யா குறித்த காணொலிக் காட் சியை ஒளிபரப்பி அய்யா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள். இதன் விளைவாக பலர் வெவ்வேறு காரணங்களுக்காக பெரியார் ஆப்பிரிகன் பவுண்டேசனு டன்  ஒன்றிணைய ஆரம்பித் தார்கள். முதலில் கானா நாட்டில் உள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகத்துடன் நமது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இணைந்து செயலாற்ற சில திட்டங்கள் வகுத்து அந்த பல்கலைக்கழக பேராசிரியர் கள் சென்னைக்கும், தஞ்சை வல்லத்திற்கும் வருகை தந் தனர். சில கல்வி ஒப்பந்தங் கள் செய்யப்பட்டன. அதன் விளைவாக மாணவர்கள் பரிமாற்றம் பேராசிரியர்கள் பரிமாற்றம் செய்கிற வாய்ப்பு ஏற்பட்டது.
இது மட்டும் அல்லாமல் புத்தாக்க எரிசக்தி துறை யிலும், அந்த நாட்டின் அரசு டனும், தொண்டு நிறுவனங் களுடனும் இணைந்து செய லாற்றிடும் வாய்ப்பு கிட்டி யது. மருத்துவ முகாம்கள் அமைத்தல், நீர் ஆதாரம் கண்டுபிடித்து கொடுத்தல் போன்ற பணிகள் நடை பெற்று வருகின்றன. நம் முடைய சுயமரியாதைச் சுட ரொளி மாவட்டத் தலைவர் கே.கே.சின்னராஜ் அய்யா அவர்களை பற்றி சொல்கிற போது அவர் பலருக்கு கடன் உதவி அளிப்பார். ஆனால் வட்டி வாங்காமல் ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி அந்த தேதிக்குள் பணத்தை முழுமையாய். கொடுக்கச் சொல்வார். பெரும்பாலும் அவர் சொல்கிற தேதி இயக்க சம்பந்தப்பட்ட தேதியாக அதாவது அய்யா பிறந்த நாள், நினைவு நாள் போன்ற வையாக இருக்கும். இதே பணியை அவரது மகன் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி.எழிலரசன் கானா நாட்டில் செய்து கொண்டிருக்கிறார். எவருக் கும் இலவசமாய் எதையும் கொடுக்கக் கூடாது வேலை செய்து சம்பாதித்து குறிப் பிட்ட நாளில் கொடுக்கும் பணத்தை திருப்பி தரவேண் டும் என்பார்.
அவர்கள் போற்றும் நாணயம்
ஒரு குறிப்பிட்ட நிகழ்வை உங்களுடன் பகிர வேண்டும். அந்த நாட்டில் அன்னாசித் தோட்டம் அதிகம். பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் அலுவலகத்தில் காலையில் இருந்தே ஒரு அன்னாசி விவசாயி  காத்து கொண்டி ருந்தார். பொறுப்பாளர்கள் வந்ததும் பணத்தைக் கொடுத் தார். சொன்ன தேதியில் விவ சாயி பணத்தை கொடுத்ததில் என்ன சிறப்பு என்றால் அதற்கு முந்தைய நாள் இரவு தான் அவரது வாழ்விணை யர் இறந்து விட்டார். மனை வியின் உடலை வீட்டில் வைத்து விட்டு நாணயத்தைக் காப்பாற்ற சொன்ன தேதியில் கொண்டுவந்து பணத்தைக் கொடுத்தார்.
தந்தை பெரியார் போற் றிய நாணயத்தை அந்த மக் களிடம் கண்டேன். பெரியார் ஆப்பிரிகன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி. எழிலரசன் அவர்களும் அவ ரிடம் சொன்னதை போல் அன்று மாலையே அந்த விவசாயி வீட்டிற்குச் சென்று மீண்டும் அடுத்த ஆண்டிற் கான பணத்தைக் கொடுத் தார். பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் மிகச் சிறந்த முறையில் மனிதநேயத்து டன் அங்கேசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமானவர்கள் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி.எழிலரசன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீரிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார் மீது அளவு கடந்த பற்று கொண்ட பட் டல்ஜி புரவலராக உள்ளார். மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் தூதராக பணி யாற்றிய மிகச்சிறந்த கல்வி யாளர் பென்டன் வில்லி யம்ஸ் இந்த அமைப்பின் மூத்த ஆலோசகராக உள்ளார். இவர் ஆப்பிரிக்கர் ஆனாலும் அய்யாவைப் பற்றிய நூல் களை வாங்கி படித்து சென்னை வந்து தமிழர் தலைவரிடம் பலமணிநேரம் கலந்துரையாடி பெரியார் ஆப்பிரிக்காவில் பிறந்திருந் தால் இன்னும் ஏராளமான பயன்களைஆப்பிரிக்கர்கள் பெற்றிருப்பார்கள் என ஆதங்கப்பட்டு பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் வளர்ச்சிக்கு எத்தகைய உத விகள் வேண்டும் என்றா லும் செய்து தருகிறேன் என் கிற உணர்வுடன் பணியாற்று கிறார். அங்கே கானா நாட்டில் தெற்கு பகுதி வளமான பகுதி ஆனால் வடக்கு பகுதி மிக வும் பின் தங்கியது. கல்வி யிலும், பொருளாதாரத்தி லும் பின் தங்கிய அந்த மக்களுக்கு தந்தை பெரியார் வழி ஒன்றே தீர்வு என்று கூறி  ஆப்பிரிக்க தேசிய வள தலை வர்  பக்காரி சாஹித் நியாரி அவர்கள் பெரியார் ஆப்பி ரிக்கன் பவுண்டேசனுடன் இணைந்துள்ளார். இப்படி யாக ஒரு சிறப்பான பெரி யாரை போற்றும் குழு அங்கே உருவாகிவுள்ளது.
வெளிநாட்டினர் கலந்து கொண்ட பெரியார் விழா
இரண்டாம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு அந்நாட்டு அமைச் சர்  அழைக்கப்பட்டிருந்தார். முதலில் அந்த விழாவிற்கு 25 பேரை அழைக்க திட்டமிடப் பட்டிருந்தது. ஒரு சிலர் தொடர்பு கொண்டு எங்களை அழைக்கவில்லையே எனக் கேட்டனர். அவர்களையும் அழைக்கலாம் என முடிவு செய்து 50 பேருக்கான அரங்கு பதிவு செய்யப்பட்ட நிலை யில் நூற்றிற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மிக சிறப்பாக அய்யா பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. அனைவரும் வெளி நாட்டினர்,  அமைச்சர் பெரு மக்கள், அரசு அதிகாரிகள் பல்கலைக்கழக துணைவேந் தர்கள், அதிபர் தேர்தலில் போட்டி இட்டவர், முன்னாள் அதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் அய்யா வாழ்க்கை, பணிகள், நமது கல்வி நிறுவனங்கள், இயக்க செயல்பாடுகள் குறித்த காணொலி காட்டப்பட்டது. குறிப்பாக அய்யா அவர்க ளின், இனி வரும் உலகம் குறித்து எடுத்து சொல்லப் பட்டது.
மரபுகளை மீறி மன்னர் பங்கேற்பு!
ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கி றோம் அரை மணி நேரம் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்கி றோம் என்று சொல்லி வந்த பலரும் மூன்று மணி நேரத் திற்கும் மேல்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அய்யா குறித்த செய்திகளை ஆர்வ முடன் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அங்கு ஒவ்வொரு பகு திக்கும் ஒரு மன்னர் உண்டு. மன்னர் என்ன சொல்கி றாரோ அதை அரசுகேட்கும், பெரும்பாலும் மன்னர் பொது நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார். நாம் தான் அவரைச் சந்திக்க வேண்டும்  ஆனால் அய்யா பிறந்த நாள் விழாவில் மன்னர் கலந்து கொண்டது மட்டும் அல்லாமல் அவர் உரையாற்றும்போது மரபு களை மீறி, விழாவில் நான் கலந்து கொள்ள காரணம் பெரியார், பெரியாரைப் படித்தேன் இந்த விழாவில் கலந்து கொள்வது எனது கடமை மட்டும் அல்ல அவ ருக்கும் அவரது இயக்கத் திற்கும் ஏதாகிலும் நான் செய்ய முடியுமா என்கிற ஆலோசனையைப் பெற இங்கு வந்துள்ளேன் என்று உரையாற்றினார். நிலமும் சுரங்கமும் தான் அந்த நாட் டின் மிகப்பெரும் வருவாய், அந்த நாட்டு நிலம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொண்டு என்னையும் பெரி யார் ஆப்பிரிக்கன் பவுண் டேசன் உறுப்பினராக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத் ததுடன் மட்டும் அல்லாமல், பத்திரிகையாளர் பேட்டி யில் தென் இந்தியாவில் தோன்றிய இந்த மாமனிதர் மட்டும் நமது நாட்டில் தோன்றி இருந்தால் எத்த கைய புரட்சியெல்லாம் நம் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் என்று புகழாரம் சூட்டினார். ஆப்பிரிக்காவில் அய்யா வைக் கொண்டு போய் சேர்த்த பெருமை நமது  பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி.எழிலசன்,  செயலாளர் சாலை. மாணிக் கம் உள்ளிட்ட  தோழர்கள் தாங்கள் சந்திக்கின்ற ஒவ் வொரு நபர்களிடத்திலும் பெரியார் பற்றி சொல்லி இன்றைக்கு பெரியார் அனை வராலும் அறியப்பட்டவ ராய் இருக்கிறார். இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் அப்துல்லா  என்னும் பேரா சிரியர் என்னோடு உரை யாடும் போது சொன்னார் இன்னும் கொஞ்சம் நாட் களில் இங்கு பிறக்கும் குழந் தைக்கு பெரியார் என்று பெயர் சூட்டினால் ஆச்சரிய மில்லை என்றார். இரண்டே  ஆண்டுகளில் நமக்கு கிடைத்த வெற்றி இது!
ராஜபாளையம் மாநாடு
நான் எப்போதும் ராஜ பாளையம் திராவிடர் கழக மாநாட்டின் வெற்றி குறித்து தோழர்களுடன் பேசுவேன். காரணம் நீண்ட நாட்களுக்கு பின் மிக எழுச்சியுடனும், சிறப்புடனும் நடைபெற்ற மாநாடு அது மாநாட்டினை திட்டமிட முதலில் கலந்து ரையாடல் கூட்டம் நடத்தப் பட்டது. அக்கூட்டத்தில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர். அவ்வூரைச் சேர்ந்த தோழர்கள் வெறும் நால்வர் மட்டுமே. அந்த நான்கில் தொடங் கிய திட்ட மிடல், உழைப்பு, தன்னம் பிக்கை  ஒரு மாபெரும் மாநாட் டின் வெற்றியில் முடிந்தது. அது யாராலும் முடியாது ஒரு தோழர்களால் மட்டுமே முடியும்; ஒரு சில இயக்கத் தால் மட்டுமே முடியும்.  அது திராவிடர் கழகத்தால் மட் டுமே முடியும், அப்படி உருவானது தான் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் அரவிந்தன், சதிஷ்குமார், பழனிச்சாமி, திருப்பத்தூர் மாவட்ட கழகத் தோழர்கள் அருமையான பணியினை அங்கு செய்கிறார்கள். அந்த நாட்டிற்கு செல்கிற தமிழர் களுக்கு பெரியார் ஆப்பிரிகன் பவுண்டேசன் தான் புகலிட மாய் இருப்பதை கண்டு வியந்து போனேன். அங்கு பெரியார் எல்லோரையும் ஒருங்கிணைக்கிறார். நாமக் கல் மாவட்டத்தில் இருந்து ஒரு தோழரும், ஜெயம் கொண் டம் மாவட்டத்தில் இருந்து ஒரு தோழரும் தொழில் நிமித்தமாக அந்த நாட்டிற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு சில விவரங்கள் தேவைப் பட்டது. அவர்கள் விசாரித் தனர் பெரியார் என்கிற பெயரை கேள்விபட்ட உடன் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் வந்ததுடன் அய்யா பிறந்த நாள் விழா விலும் பங்கேற்று மகிழ் வுடன் தங்கள் பிறந்த நாள் விழா போல் எல்லா வேலை களையும் அவர்களும் இணைந்து செய்தனர். ஆப் பிரிக்காவிலிருந்து புறப்படும் முன் அய்யா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட இந்திய தூதரக அதிகாரி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத் திருந்தார்.
அவரை சந்திக்க சென் றோம். வரவேற்றவர் ஒரு அய்ந்து நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு கணினியில்  அவசர அவசரமாய் தட்டச்சு செய்து முடித்தார். பிறகு எங்களுடன் உரையாடினார். அய்யாவின் நூல்கள் ஆங்கில பதிப்பில் வெளிவந்தவைகளை அன்பளிப்பாக வழங்கி னேன், நூல்களை புரட்டிய வர் அய்யாவின் இனி வரும் உலகம் நூலை எடுத்து பார்த்து வியந்தார். 1943 லேயே கம்பி இல்லா சாதனம் மூலம் வகுப்பறைகள் நடத் தப்படவேண்டும் என்று இன்றைக்கு 3ஜி, 4ஜி என்று சொல்லப்படுகின்றவற்றை எல்லாம் அன்றைக்கே சொல்லி இருக்கிறாரே? என்றார்.
இப்போது கூட அது குறித்து தான் தட்டச்சு செய்து அனுப்பினேன். வேறு ஒரு இடத்தில் இதை பற்றி பேச அழைத்திருக்கிறார்கள் இனி நான் பெரியாரை பற்றி மட்டுமே பேசப் போகிறேன் உண்மையில் எனக்கு மிக பயனுள்ள புத்தகம் இது என்றார். இன்னும் இன்னும் பெரியாரை ஆப்ரிக்கா முழு மைக்கும் பரப்புவதற்கான செயல்திட்டம் தயாராகி உள்ளது. தொடர்ந்து அதற் கான பணிகள் நடைபெறும். அதே போல் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இந்தப் பகுதியில் மிக சிறப்பாக நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000 நிகழ்வுகளை கடந்து சிறப்புடன் நடை பெறுவதை  போல் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட் டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று வாழ்த்து கிறேன் என்றார். - இவ்வாறு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் உரையாற்றினார்.

மரபுகளை மீறி மன்னர் பங்கேற்ற பெரியார் பிறந்த நாள் விழா