.இந் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக இளஞ்சரணி பொறுப்பாளர் வண்டி .ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார் . வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு அறிமுக உரையாற்றினார்
இந் நிகழ்ச்சிக்கு திராவிடர் மகளிர் பாசறையின் பொருளாளர் அகிலா எழிலரசன் தலைமை வகித்து உரையாற்றினார் .திராவிடர் கழக மாவட்ட செயலர் வி.ஜி இளங்கோ ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டஅமைப்பாளரும் ,திராவிடர் கழக மண்டல செயலாளருமான பழ .வெங்கடாசலம் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
இயற்கை வேளாண் விஞ்சானி கோ .நம்மாழ்வார் படத்தினை திறந்து வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ் .ஏ.சின்னசாமி புகழுரை ஆற்றினார்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமூன்றாண்டு செயல்பாடுகள் குறித்து இந்திய அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் வரதராசன் அவர்களும் ,மேனாள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி முருகேசன் அவர்களும் ,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர் மேனாள் தலைமை ஆசிரியர் எஸ்,ஏ.காந்தன் அவர்களும் உரையாற்றினர்
.வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு இளஞ்சரணி பொறுப்பாளர் வண்டி ஆறுமுகம் ,திராவிடர் கழக ஒன்றிய செயலர் மா .ரவிச்சந்திரன் ,தருமபுரி மாவட்ட செயலர் வி.சிவாஜி பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் தகடூர் .தமிழ்செல்வி,தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் புலவர் .வேட்ராயன்.உள்ளிட்ட பலர் நூல்கள் மற்றும் சால்வைகள் அளித்து சிறப்பு செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு ஆப்ரிக்காவில் இருந்து வந்திருந்த பெரியார் ஆப்ரிக்கன் பவுண்டெசன் உறுப்பினர் அரவிந்தன் அவர்களுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ ,அன்புராஜ் நினைவுப் பரிசு வழங்கினார்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் மாதந்தோறும் ஊற்றங்கரை நகருக்கு பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்கள் தேர்ந்தெடுத்து பாராட்டப்பட்டு வருகின்றனர் அதனடிப்படையில் ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள (e-library ) மின்னணு நூலகத்திற்கு ருபாய் 20 இலட்சம் வழங்கிய தொழிலதிபர் தும்கூர் சன் மினரல்ஸ் உரிமையாளர் வே .செல்வராஜ் பாராட்டப்பட்டார் .அவரை பாராட்டி திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் நினைவுப்பரிசு வழங்கினர் .தொழிலதிபர் வே .செல்வராஜ் அவர்களை பாராட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுசாமி பாரட்டுரையற்றினார்
''ஆப்ரிக்காவில் பெரியார்'' என்னும் தலைப்பில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் அவர்கள் மிகச் சிறப்பான உரையினை வழங்கினார் ,முன்னதாக மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் வெங்கடேசன் ஆசிரியர் சுமதி ஆகியோர்களின் ஆண் பெயர் குழந்தைக்கு சூட்டி மகிழ்வினை பரிமாறிக்கொண்டார் . ''ஆப்ரிக்காவில் பெரியார்'' என்னும் தலைப்பில் ஆப்ரிக்கா கானா நாட்டில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் அனுபவங்களை சுவைப்பட பகிர்ந்த திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் அவர்களுக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நினைவு பரிசினை வித்யா மந்திர் கல்வி குழுமத்தின் நிறுவனர் வே .சந்திரசேகரன் அவர்களும் ,வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி .கருணாநிதி அவர்களும் வழங்கினர்
நிறைவாக வாசகர் வட்ட செயற் குழு உறுப்பினர் செ. சிவராஜ் நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியினை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் தொகுத்து வழங்கினார்
அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட், ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்
No comments:
Post a Comment