திருமணக்கூடத்தில் காலை1௦மணியளவில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்குவாசகர்வட்டபொரு ளாளர்ஆடிட்டர்.ராஜேந்திரன் வரவ ேற்புரையாற்றினார்., பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் இர.பழனி விழா அறிமுக உரையை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு. திருவனப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவரும் மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர் ரஜினி செல்வம் தலைமை வகித்தார் கலையாசிரியர் கவிஞர் .சாகுல் அமீத் ,கலையாசிரியர் சு.செந்தில்குமார் , திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.திராவிட இயக்க ஆய்வாளர் எம்.எஸ் எஸ் பாண்டியன்படத்தினை பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன் திறந்து வைத்து சிறப்பான நினைவேந்தல் உரையாற்றினார்
வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு வெ.அன்புச்செல்வன், விடுதலை சிறுத்தைகளின் ஒன்றிய பொறுப்பாளர் துரை.வளவன் ,புலவர் .அண்ணாமலை ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர். சிறப்புரையாற்ற வந்த ஓவியர் ஓவியர் புகழேந்தியின் ''சிதைந்த கூடு ''நூலினை மேனாள் தலைமை ஆசிரியர் எஸ்.ஏ.காந்தன் வெளியிட கலையாசிரியர் கவிஞர் சாகுல் அமீத், கலையாசிரியர் செந்தில்குமார் ,பெற்றுகொண்டார். ஓவியர் புகழேந்தி குறித்த இயக்குனர் மகேந்திரன் மேற்பார்வையில் ஜான் இயக்கிய ஆவணப்படத்தை மருத்துவர் பத்மனாபன் வெளியிட திராவிடர் கழக மகளிரணி செயலர் கவிதா அவர்கள் பெற்றுகொண்டார்..சிறப்பு விருந்தினரை திராவிடர் கழக மாவட்ட செயலர் வி.ஜி.இளங்கோ அறிமுகம் செய்து வைக்க ‘’எரியும் வண்ணங்கள் உறங்கா உண்மைகள் ‘’என்னும் தலைப்பில் மிகச் சிறப்பான கருத்துரையை ஓவியர்புகழேந்தி வழங்கினார்
நிறைவாக வாசகர் வட்ட துணைத்தலைவர் இர.வேங்கடம் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அறிவாசான் தந்தை பெரியார் எழுதிய குறிப்புக்களும் ,புத்தாண்டு வாழ்த்து செய்தியும் தரப்பட்டன .அனைவருக்கும் இரவு உணவு தரப்பட இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்
No comments:
Post a Comment