ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த
நாளையொட்டி திரைத்திருவிழா செப்டம்பர் 15 முதல்
செப்டம்பர் 23 வரை நடைபெற்றது திரைத்திருவிழாவில்
சமூக கருத்துக்களை வெள்ளித்திரையில் பதிவு செய்த சில திரைப்படங்கள் திரையிடப்பட்டன
ஊற்றங்கரை
விடுதலை வாசகர் வட்டத்தின் 9 நாட்கள்
திரைத்திருவிழாவில் முதல் நாள் ஊற்றங்கரை
அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் அண்ணா- பெருங்கடலில் இருந்து சில துளிகள்
என்கிற ஆவணப்படம் திரையிடப்பட்டது 





நிகழ்விற்கு ஊற்றங்கரை அரசினர் மகளிர் மேல்நிலை
பள்ளியின் தலைமையாசிரியர் யுவராஜ் வரவேற்புரையாற்ற மேனாள் இணை இயக்குனரும் விடுதலை
வாசகர் வட்ட துணைத்தலைவருமான மருத்துவர் .வெ.தேவராசு தலைமை தாங்கினார் .நிகழ்வினை
அறிமுகப்படுத்தி பழ.பிரபு உரையாற்றினார் .தந்தை பெரியார் அறிஞர் அண்ணா தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினை விவரிக்கும்போது
மாணவர்கள் கைத்தட்டி தங்களின் நன்றிபெருக்கை வெளிப்படுத்தினர் .
நம் தாத்தா படிக்கவில்லை நமது பெற்றோர்கள் ஓரளவு
படித்தனர் நாம் படிக்கிறோம் என்றால் இந்த கல்வி நமக்கு கிடைக்க யார் காரணம் என்று
கேட்டவுடன் அத்துணை மாணவர்களும் தந்தை பெரியார் ஒருவரே என்று சத்தமாக கூறி
மகிழ்ந்தனர்.இந்த
நிகழ்வில் திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி,,நகர திராவிடர் கழக
தலைவர் இர.வேங்கடம் ,பகுத்தறிவாளர்
கழக நகர செயலர் சி.சாமிநாதன் .பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இர.பழனி ,வாசகர் வட்ட பொருளாளர்
ஆடிட்டர் இராஜேந்திரன் ,மாவட்ட
இளைஞரணி செயலர் செ.சிவராஜ் ,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
எஸ்.ஏ.காந்தன் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர் .தேர்வு காலம்
என்பதால் ஆவணப்படத்தை காண வாய்ப்பு கிட்டாத பள்ளியின் பிற மாணவர்கள் ஆவணப்படத்தினை
காண வேண்டி ஆவணப்படத்தின் நகலை பள்ளியின் சார்பில் கேட்டு பெற்றுகொண்டனார்
.பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரிய பெருமக்கள் பலரும் வாசகர்
வட்ட பணிகளை பாராட்டி நன்றி தெரிவித்தனர் .





திரைத்திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வாக ஊற்றங்கரை
விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 138வது பிறந்தநாள் விழா
ஊற்றங்கரை திருமண கூடத்தில் கொண்டாடப்பட்டது . சென்னை பெரியார் திடலில் நடைபெற்று
கொண்டிருந்த பெரியார் பிறந்த நாள் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பபட்டது .மாணவர்
கருத்தரங்கம் ,அதனை
தொடர்ந்து நடைபெற்ற மணவிழா வழக்கறிஞர் அருள்மொழி ,மேனாள் அமைச்சர்
ஆ.இராசா ,பேராசிரியர்
சுபவீ ,பழ.கருப்பையா
,கவிஞர்
கலி.பூங்குன்றன் ,தமிழர்
தலைவர் வீரமணி ஆகியோர்களின் உரைகளை கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தனர் .இந்த நிகழ்வல்
ஏராளமான திராவிடர் கழக தோழர்களும் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் விடுதலை வாசகர்
வட்ட தோழர்களும் ,திமுக
,விடுதலை
சிறுத்தை தோழர்களும் கலந்து கொண்டனர் விழாவின் அனைவருக்கும் புலால் உணவு விருந்து
அளிக்கப்பட்டது முன்னதாக தந்தை
பெரியார் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் திமுக ஒன்றிய செயலர்
வ.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் ‘’பெரியார் பிறந்த நாள்
கேக் ‘’ வெட்டி கொண்டாடப்பட்டது.வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி தனது 84 ஆம் பிறந்தநாளை
கொண்டாடும் பெரியார் பெருந்தொண்டர் சி.சுவாமிநாதன் அவர்கள் 138
என்கிற
எண்ணை கொண்ட மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டி அனைத்து தோழர்களுக்கும்
வழங்கினார்
நான்காம்
நிகழ்வாக மாலை 5.3௦ மணியளவில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இசைஞானி
இளையராஜா இசையில் எழுத்தாளர் பாஸ்கர்சக்தியின் சிறுகதையில் பகுத்தறிவு
கருத்துக்களை வெள்ளித்திரையில் பதிவு செய்த அழகர்சாமியின் குதிரை
என்கிற நகைச்சுவை திரைப்படம் :ஊற்றங்கரை திருமணக்கூடத்தில் திரையிடப்பட்டது இந்த
நிகழ்ச்சிக்கு மேனாள் இணை இயக்குனரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின்
துணைத்தலைவருமான :மரு .வெ.தேவராசு எம்.டி அவர்கள் தலைமை தாங்கி நிகழ்வினை தொடங்கி
வைத்தார்
அய்ந்தாம்
நாள் நிகழ்வாக பேரறிஞர் அண்ணா அவர்களின் கதை வசனத்தில் ப.நீலகண்டன் இயக்கத்தில்
புரட்சிகவிஞர் பாரதிதாசன் பாடல் வரிகளில் உருவான ஓர்
இரவு திரைப்படம் ஊற்றங்கரை திருமணக்கூடத்தில் திரையிடப்பட்டது
இந்த நிகழ்விற்கு ஊற்றங்கரை திமுக நகர செயலாளர் திருமிகு இர .பாபுசிவக்குமார் அவர்கள் தலைமை தாங்கி திரைப்படம் பற்றிய தனது கருத்துக்க்களை கூறி
உரையாற்றி திரைப்படத்தினை தொடங்கி வைத்தார்
ஆறாம் நாள் நிகழ்வாக மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை திருமணக்கூடத்தில்
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு ,அட்டைக்கத்தி நந்திதா உள்ளிட்ட
பலரும் நடித்த மூடநம்பிக்கைகளை தோலுரித்த முன்டாசுப்பட்டி என்னும் நகைச்சுவை
திரைப்படம் திரையிடப்பட்டது ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலரும் நகர திராவிடர் கழக
தலைவருமான மானமிகு.இர .வேங்கடம்
அவர்கள் தலைமை தாங்கி திரைப்படம் குறித்த கருத்துக்களை
பதிவு செய்து திரைப்படத்தினை தொடங்கி வைத்தார்
ஏழாம் நாள் நிகழ்வாக மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை திருமணக்கூடத்தில்
வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி,அட்டகத்தி நந்திதா ,தினேஷ் ,ஆனந்தி ,ஆடுகளம் முருகதாஸ்
உள்ளிட்ட பலர் நடித்து 63 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படமாக
தேர்ந்தெடுக்கப்பட்டு மனித உரிமைகளை வலியுறுத்திய விசாரணை திரைப்படம்
திரையிடப்பட்டது இந்த நிகழ்விற்கு சி.பி.எம் கட்சியின் மாவட்ட பொதுக்குழு
உறுப்பினர் திருமிகு .கே .மகாலிங்கம்
அவர்கள் தலைமை தாங்கினார் .மனித உரிமைகள் எங்கெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதை விளக்கி திரைப்படம் குறித்த தமது பார்வையை விவரித்து திரைப்பட நிகழ்வினை தொடங்கி வைத்தார்
அவர்கள் தலைமை தாங்கினார் .மனித உரிமைகள் எங்கெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதை விளக்கி திரைப்படம் குறித்த தமது பார்வையை விவரித்து திரைப்பட நிகழ்வினை தொடங்கி வைத்தார்
எட்டாம் நாள் நிகழ்வாக மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை திருமணக்கூடத்தில்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ,விஜய் சேதுபதி ,பாபி சிம்ஹா ,அஞ்சலி ஆகியோர் நடித்த
பெண்ணுரிமையை வலியுறுத்திய இறைவி திரைப்படம் திரையிடப்பட்டது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.செஞ்சுடர் (எ)
ஜெயலட்சுமி
அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கி,பொதுவாழ்வில் பெண்
என்பதற்காக தான் பட்ட துன்பங்களை எல்லாம் விளக்கி தந்தை பெரியார் ,அண்ணல்
அம்பேத்கார் பெண்ணுரிமைக்காகவும் ,சமுக விடுதலைக்காகவும் ஆற்றிய பணிகளை நினைவு
கூர்ந்து திரைப்பட நிகழ்வினை தொடங்கி வைத்தார்
திரைத்திருவிழாவின்
நிறைவு நாளான 9 ஆம் நாள் நிகழ்வு மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை திருமணக்கூடத்தில் நடைபெற்றது விமல் ,அஞ்சலி,ராதாரவி,,சூரி.,ஆகியோர் நடித்து டான்
அசோக் கதை வசனத்தில் இராஜசேகர் இயக்கத்தில் வெளியான மாப்ள
சிங்கம் திரைப்படம் திரையிடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு ஆடிட்டர்
.ந.இராசேந்திரன் தலைமை தாங்கி திரைப்பட நிகழ்வினை தொடங்கி வைத்தார்
ஊற்றங்கரை
விடுதலை வாசகர் வட்டம் சிறிய இடைவெளிக்கு பின்னர் அய்யா அண்ணா பிறந்த நாளையொட்டி
தொடர்ந்து 9 நிகழ்வுகள் நடத்தி 69ஆம் நிகழ்வை நிறைவு செய்ததை பல்வேறு கட்சியை
சார்ந்தவர்களும் ,அரசியலுக்கு அப்பாற்பட்டு வாசகர் வட்டத்திற்கு ஆதரவு அளித்த
பொதுமக்களும் மனம் திறந்து பாராட்டினர் .விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து
செயல்பட்டு ஊற்றங்கரை நகரத்திற்கு அறிவார்ந்த நிகழ்வுகளை வழங்கிட வேண்டினர்