விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 29 September 2016

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் பயணம் தொடங்கியது !


கடந்த அய்ந்து ஆண்டுகளாய் 6௦ மாதங்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து தொய்வின்றி இயங்கி வந்த .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நண்பர்கள் ,தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சின்ன ஓய்வுக்கு பிறகு இன்னும் புத்துணர்ச்சியோடு ,ஏராளமான செயல்திட்டங்களோடு வரும் செப்டம்பர் 15 முதல் மீண்டும் செயல்படத்துவங்குகிறது .     ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா ,பச்சை தமிழர் காமராஜர் ,அண்ணல் அம்பேத்கர் ,டாக்டர் கலைஞர் ,தமிழர் தலைவர் வீரமணி ,விடுதலை உண்மை எடுகளினால்  கவரப்பட்ட சிந்தனையாளர்களை   ஒன்றிணைத்து மாதந்தோறும் கலை ,இலக்கியம்,அறிவியல் ,மருத்துவம் ,அரசியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்களின் கீழ் கருத்துரையாளர்களை அழைத்து வந்து கருத்தரங்குகள் நடத்தி  ,ஊற்றங்கரை நகருக்கு பெருமை சேர்த்த  மண்ணின் மைந்தர்களை பாராட்டி  ,மக்களுக்காக உழைத்த  மறைந்த தலைவர்களின்  படங்களை திறந்து நினைவு கூர்ந்து  கடந்த காலங்களில் நடைபெற்றதை காட்டிலும் எழுச்சியுடனும்  கட்சி , ஜாதி ,மதம் ,அரசியல் ,ஆத்திகம் ,நாத்திகம் பேதமின்றி அனைவருக்குமான பொது அமைப்பாக தன் பயணத்தை தொடர்கிறது
 பல்வேறு கருத்துகளை விவாதிக்கும் களமாக ,கருத்து சுதந்திரத்தின் மேடையாக செயல்பட்டு வரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தை தாங்கி பிடியுங்கள் ! தோள் கொடுத்து உதவுங்கள் ! புரவலராக இணைத்து கொண்டு ஆதரித்து மகிழுங்கள் ! உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் உறுப்பினராக்கி வாசகர் வட்டத்தை வளர்த்தெடுங்கள் ! உங்கள் வாழ்த்துக்களை  அள்ளி வழங்குங்கள் !!   



No comments:

Post a Comment