விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 10 January 2016

அய்ந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழகத் தலைவரும் ,விடுதலை நாளேட்டின் ஆசிரியருமான தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

























ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் அய்ந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழகத் தலைவரும் ,விடுதலை நாளேட்டின் ஆசிரியருமான தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம்  ஊற்றங்கரை திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது .
நிகழ்ச்சியின் தொடக்கமாக வாசகர்  வட்ட பொருளாளர் ஆடிட்டர் .இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார் .திமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளரும் ,விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவருமான மருத்துவர்.வெ.தேவராசு  விழா அறிமுக உரையாற்றினார் . மத்தூர் கலைமகள் கலாலயா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சிந்தை.மு இராசேந்திரன் முன்னிலை வகித்து உரையாற்றினர்
சென்னை கடலூர் வெள்ள நிவாரண பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வரும் பெரியார் மருத்துவ குழுமத்திற்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் திரட்டிய 20,000 மதிப்புள்ள மருந்து பொருட்களை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி கருணாநிதி ,அமைப்பாளர் பழ.வெங்கடாசலம் ,பழ.பிரபு ஆகியோர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி .இளங்கோ அவர்கள் மூலம் வழங்கினர்.
வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு திராவிடர் கழக ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி ,வித்யா மந்திர் தமிழ் துறை தலைவர் தெய்வம் ,திமுக ஒன்றிய செயலாளர் வ.சாமிநாதன் ,திமுக நகர செயலர் இர.பாபு சிவக்குமார் ஆகியோர் நூல்களை வழங்கி சிறப்பு செய்தனர்.உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் படத்தினை திறந்து வைத்து அவருடன் பழகிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கவிஞர் சாகுல் அமீத் .
 நிறைவாக திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான நெல்லை ஜெயந்தா ''திராவிடம் வளர்க்கு தமிழ்''என்னும் தலைப்பில் மிக சிறப்பான உரையை நிகழ்த்தினார் . விழாவை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு ஒருங்கிணைக்க ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
பங்கேற்ற அனைவருக்கும் நீதிக்கட்சியின் சாதனை  குறிப்புக்களும் ,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறித்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கவிதை நகல் அனைவருக்கும்  தரப்பட்டன . இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்​

No comments:

Post a Comment