விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 10 January 2016

57 ஆம் மாத நிகழ்வாக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா





ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 57 ஆம் மாத நிகழ்வாக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும்
நடிகவேள் எம்.ஆர் .இராதா அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா கருத்தரங்கமும்  திராவிட இயக்க தீரர் பட்டுக்கோட்டை அழகிரி  அவர்களின் படத்திறப்பும் ஊற்றங்கரை திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது .
ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி வரவேற்புரையற்றினார் . திமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளரும் ,விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவருமான மருத்துவர்.வெ.தேவராசு  விழா அறிமுக உரையாற்றினார் .
இந் நிகழ்ச்சிக்கு திமுக  ஆதிராவிடர் நல சங்கத்தின் மாவட்ட துணை செயலர் அரூர் இராஜேந்திரன்அவர்களும் திராவிடர் கழக மண்டலத்தலைவரும்வாசகர் வட்ட அமைப்பாளருமான  பழ .வெங்கடாசலம் அவர்களும்  முன்னிலை வகித்து உரையாற்றினார்.
மத்தூர் கலைமகள் கலாலயா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சிந்தை.மு இராசேந்திரன் அவர்கள் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் படத்தினை திறந்து வைத்து திராவிடர் இயக்கத்தில் அழகிரி அவர்கள் ஆற்றிய சிறப்பான தொண்டினையும் ஈடில்லா தியாகத்தையும் குறிப்பிட்டு உரை ஆற்றினார் .வருகை தந்த விருந்தினர்களுக்கு திமுக  நகர  செயலாளர்  இர.பாபு சிவக்குமார் ,திமுக ஒன்றிய செயலாளர் வ.சுவாமிநாதன் ,நல்லாசிரியர் விருது பெற்ற கவி.செங்குட்டுவன்  ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர் .
 விடுதலை வாசகர் வட்ட தலைவரும் ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளருமான தணிகை ஜி.கருணாநிதி அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கி தமிழ்கூறும் நல்லுலகம் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோர்களின் பிறந்த நாள் கொண்டாடவேண்டிய அவசியத்தையும் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் திராவிடர் இயக்கத்திற்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பையும் குறித்து உரையாற்றினார் 

பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் அண்ணா .சரவணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார் .மண்ணும் மனித நேயமும் மகத்தான தலைவர்களும்  '' என்கிற தலைப்பில் திரைப்பட வசன நெறியாளரும் எழுத்தாளருமான அஜயன் பாலா உரையாற்றினார் .
விழாவை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு ஒருங்கிணைக்க வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் இராசேந்திரன் நன்றியுரையாற்றினார் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் ,பிஸ்கட்  தரப்பட்டது  இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்

No comments:

Post a Comment