விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Saturday, 2 January 2016

வணிகர் சங்க கருத்தரங்கில் ஜெயரட்சகன்




























ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 50 ஆம் மாத நிகழ்வான வணிகர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் ஊற்றங்கரை திருமணக்கூடத்தில் மாலை 5 மணியளவில் நடைப்பெற்றது.   

                    இந்நிகழ்ச்சிக்குவாசகர்வட்ட பொறுப்பாளரும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினருமான இர.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றினார்.வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர்.ராஜேந்திரன் விழா அறிமுக உரையை ஆற்றினார்.ஆடிட்டர் மகபூப்கான் ஆடிட்டர் சத்யமூர்த்தி  ஆகியோர் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்கள்
இந்நிகழ்ச்சிக்கு. திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி தலைமை வகித்தார் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர்  செங்கோட்டையன் ,அனைத்து வணிகர்கள் சங்க செயலாளர் இர .உமாபதி ஜவுளி வணிகர்கள் சங்க தலைவர் இர .சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
வணிக ரீதியான வழிகாட்டல் நெறிமுறைகளை திருச்செங்கோடு மேனாள் துணை வணிகவரி அலுவலர் திருமிகு .S.நாகராஜன் ஈரோடு ஆடிட்டர் திருமிகு .S.சுந்தர்  கரூர்  வைசியா வங்கியின்  சாமல்பட்டி  கிளை மேலாளர் திருமிகு .பிரபாகர் ஆகியோர் வழங்கி வணிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்        
              வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ஊற்றங்கரை நகர திராவிடர் கழகத் தலைவர் இர.வேங்கடம் ,ஓய்வுபெற்ற அலுவலர் சங்க பொருளாளர் சு.சுவாமிநாதன் ,வணிகர்கள் சங்க பொருளாளர் லாலலஜபதி , அனைத்து வணிகர்கள் சங்க செயலாளர் இர .உமாபதி ,பாத்திரக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோசப் கார்ட்டர் ஆகியோர் பயனாடை அளித்து சிறப்பு செய்தனர் .சிறப்பு விருந்தினரை திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான  பழ.வெங்கடாசலம் அறிமுகம் செய்து உரையாற்றினார்
        ‘’வணிகர்களுக்கான புதிய சிந்தனைகள் ‘’என்னும்  தலைப்பில் மிகச் சிறப்பான கருத்துரையை வளர் தொழில் இதழின் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் வழங்கினார் அவரது உரையில் ஜோசியம் ,வாஸ்து ,நல்ல நேரம் கெட்ட நேரம் ஆகியவற்றை தவிர்த்து வணிகர்கள் அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்
நிறைவாக வணிகர்கள் சங்க பொருளாளர் லாலலஜபதி நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அறிவாசான் தந்தை பெரியார் எழுதிய குறிப்புக்கள் தரப்பட்டன .அனைவருக்கும் இரவு உணவு தரப்பட இது போன்ற  நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்

No comments:

Post a Comment