விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 3 January 2016

ண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் ஆவணப் படம் வெளியீடு விழாவும் இசை முரசு நாகூர் அனிபா அவர்களின் படத்திறப்பு





ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 53 மாத நிகழ்வாக கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் ஆவணப் படம் வெளியீடு விழாவும் இசை முரசு நாகூர் அனிபா அவர்களின் படத்திறப்பும் ஊற்றங்கரை திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது .
விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஆடிட்டர் இராசேந்திரன் வரவேற்புரையற்றினார் . வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் மருத்துவர் வெ.தேவராசன் விழா அறிமுக உரையாற்றினார் .
இந் நிகழ்ச்சிக்கு திமுக நகர பொருளாளர் தவுலத் பாஷா ,ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.ஆளுர் ஷாநவாஸ் இயக்கிய காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. மேனாள் நாடாளுமன்ற உறப்பினரும் திமுக சட்ட பாதுகாப்பு குழுவின் மாநில பொறுப்பாளருமான வழக்கறிஞர் இர .தாமரை செல்வன் ஆவணப்படத்தின் முதல் பிரதியை வெளியிட தருமபுரி மண்டல திராவிடர் கழக செயலாளர் கரு .பாலன் பெற்று கொண்டார் அவ்வாறே ஊற்றங்கரை நகர திமுக அவைத் தலைவர் பா .அமானுல்லா அவர்கள் வெளியிட மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரஜினி செல்வம் ,ஜோக்கர் என்கிற அகமத் பாஷா ,தமுமுக மாவட்ட துணைத் தலைவர் வாகித் பாஷா ,தமுமுக நகர செயலாளர் சதாம் ,மம க ஒன்றிய செயலர் யாசீன் ஆகியோர் பெற்று கொண்டனர்
மேனாள் நாடாளுமன்ற உறப்பினரும் திமுக சட்ட பாதுகாப்பு குழுவின் மாநில பொறுப்பாளருமான வழக்கறிஞர் இர .தாமரை செல்வன் அவர்கள் இசை முரசு நாகூர் அனிபா அவர்கள் படத்தினை திறந்து வைத்து தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நாகூர் அனிபா அவர்கள் குறித்த மிக சிறப்பனா நினைவேந்தல் உரையை ஆற்றினார் வருகை தந்த விருந்தினர்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் எக்கூர்.த.செல்வம் திமுக நகர் செயலாளர் இர .பாபு சிவக்குமார் திமுக ஒன்றிய செயலாளர் (வடக்கு) வி.சாமிநாதன் ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அசோகன் ,விசி கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்கள் குபேந்திரன் ,நாசி .சரவணன் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர் . விடுதலை வாசகர் வட்ட தலைவரும் ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளருமான தணிகை ஜி.கருணாநிதி அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றினார்
சிறப்பு விருந்தினரை மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன் அறிமுகம் செய்து உரையாற்றினார் .விடுதலை சிறுத்தைகளின் மாநில துணைப் பொது செயலாளரும் காயிதே மில்லத் ஆவணப் பட இயக்குனருமான தோழர் ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் மிகச் சிறப்பான கருத்துரையை வழங்கினார் .
விழாவை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு ஒருங்கிணைக்க வாசகர் வட்ட மேனாள் பொருளாளர் அண்ணா.அப்பாசாமி நன்றியுரையாற்றினார் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நாகூர் அனிபா குறித்த குறிப்புக்களும் ,தன்னம்பிக்கை செய்தியும் தரப்பட்டன .அனைவருக்கும் மதிய உணவு தரப்பட இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்

No comments:

Post a Comment