ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் கொண்டாடிய குழந்தைகள் தின விழா !
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 59 ஆம் நிகழ்வு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நவம்பர் 14 காலை 10 மணியளவில் ஊற்றங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் உள்அரங்கில் நடைபெற்றது
இந் நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் அவர்கள் தலைமை தாங்கினார் .கிருட்டிணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும் கஞ்சனூர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான சித.வீரமணி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு ,ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
புதுவை பல்கலைக்கழக பேராசிரியரும் ,குழந்தை நாடகக்கலைஞருமான வேலு.சரவணன் அவர்கள் நிகழ்வில் பங்கேற்று ‘’கடல் பூதம்’’ நாடகத்தினை நடத்தி பார்வையாளர்கள் அனைவரையும் நாடகத்தில் பங்கேற்க செய்தார் .குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க உற்சாகத்துடன் கண்டு களித்தனர் . நிகழ்ச்சியில் ஒன்றிய மகளிரணி தலைவர் வித்யா ,பெரியார் பிஞ்சு இன்னிசை ,அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பொறுப்பாளர் சீனி.இராஜா ஏராளாமான ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தங்கள் பள்ளியில் நிகழ்வினை நடத்தியமைக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்திற்கு பள்ளியின் நிர்வாகிகள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்
No comments:
Post a Comment