- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில்
மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் மூவலூர் இராமாமிர்தம் படத்திறப்பு
திமுக துணை பொதுசெயலர் மேனாள் அமைச்சர்
சுப்புலட்சுமிஜெகதீசன் கலந்துகொண்டு எழுச்சியுரை
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 52 மாத நிகழ்வாக மகளிர் தின சிறப்பு கருத்தரங்கமும் மூவலூர் இராமாமிர்தம் அவர்களின் படத்திறப்பும் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது . விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் முருகம்மாள் அப்பாசாமி வரவேற்புரையற்றினார் . மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக துணை செயலர் ஆசிரியர் வெ.சுமதி விழா அறிமுக உரையாற்றினார் . இந் நிகழ்ச்சிக்கு சாந்தி தேவராஜ் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
ந.க.மங்களமுருகேசன் எழுதிய‘’தொண்டில் உயர்ந்த தூயவர் ஈ.வெ.ராமணியம்மையார் ’’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது . தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேனாள் துணை மேலாளர் தணிகை குமாரி கருணாநிதி அவர்கள் வெளியிடமத்தூர் ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி செயலாளர் மா.ஜான்சி ராணி மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி நகர தலைவர் இ.வெண்ணிலா மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் ஆசிரியர் .ஆ,ஜெ.காயத்திரி மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி இரா .சௌந்தரி மத்தூர் ஒன்றிய திராவிடர் மகளிர் பாசறையின் துணைத்தலைவர் க .வசந்தி ஊற்றங்கரை திராவிடர் மகளிர் பாசறையின் ஒன்றிய தலைவர் கோ.கண்ணாம்பாள் ஆகியோர் நூல்களை பெற்று கொண்டனர் திராவிடர் மகளிர் பாசறையின் மாவட்ட தலைவர் .நல்லாசிரியர் மு .இந்திராகாந்தி நூல் அறிமுகவுரை யாற்றினார்
திராவிடர் மகளிர் பாசறையின் மாவட்ட அமைப்பாளர் கவிஞர் சுப்புலட்சுமி அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அவர்கள் படத்தினை திறந்து வைத்து கருத்துரையாற்றினார் வருகை தந்த விருந்தினர்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் எக்கூர்.த.செல்வம் திமுக நகர ,செயலாளர் இர .பாபு சிவக்குமார் திமுக ஒன்றிய செயலாளர் (வடக்கு) வி.சாமிநாதன் வி டுதலை வாசகர் வட்ட தலைவரும் ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளருமான தணிகை ஜி.கருணாநிதி தருமபுரி மண்டலத் தலைவர் பழ .வெங்கடாசலம் ஆகியோர் நினைவு பரிசாக நூல்களை வழங்கி சிறப்பித்தனர்
விழாவிற்கு வருகைதந்திருந்த திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கே .சி .எழிலரசன் ,திமுக மாவட்ட செயலாளர் இ.ஜி .சுகவனம் ,தொழிலதிபர் வி.பாலசுப்ரமணியம் ஆகியோர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினர் .’சிறப்பு விருந்தினரை திராவிடர் கழக ஒன்றிய மகளிரணித் தலைவர் ம .வித்யா அறிமுகம் செய்து உரையாற்றினார் ’சமுதாய வளர்ச்சியில் மகளிர் பங்கு ‘’என்கிற தலைப்பில் மேனாள் அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான மானமிகு ,சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மிகச் சிறப்பான கருத்துரையை வழங்கினார்
விழாவை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு ஒருங்கிணைக்க ஒன்றிய மகளிரணி செயலாளர் வசந்தமல்லி சிவராஜ் நன்றியுரையாற்றினார் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அறிவாசான் தந்தை பெரியார் எழுதிய குறிப்புக்களும்,மகளிர் தின வாழ்த்து செய்தியும் தரப்பட்டன .அனைவருக்கும் மதிய உணவு தரப்பட இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்
No comments:
Post a Comment