விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 3 January 2016

கனவு மெய்பட கலைஞர் காட்டிய வழி

புகைப்படங்களை காண 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 54 ஆம் மாத நிகழ்வான கலைஞர் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மற்றும் திராவிட இயக்க வீரர் முரசொலி மாறன் படத்திறப்பு நிகழ்வு 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது .அந்த நிகழ்வில் திமுக இளைஞரணி துணை செயலர் அசன் முகமது ஜின்னா ஆற்றிய உரை


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 54 ஆம் மாத நிகழ்வாக டாக்டர் கலைஞர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கமும் திராவிட இயக்க வீரர் முரசொலி மாறன்  அவர்களின் படத்திறப்பும் ஊற்றங்கரை திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது .
ஊற்றங்கரை திமுக இணையதள பொறுப்பாளர் தணிகை குமரன் வரவேற்புரையற்றினார் . திமுக நகர செயலாளரும் ,விடுதலை வாசகர் வட்ட உறுப்பினருமான இர .பாபு சிவக்குமார்  விழா அறிமுக உரையாற்றினார் .
இந் நிகழ்ச்சிக்கு திமுக  வடக்கு ஒன்றிய செயலாளர் வி .சாமிநாதன்  ,திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் ,மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரஜினி  செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
திமுக மாவட்ட செயலாளர் இ .ஜி .சுகவனம்  அவர்கள்  திராவிட இயக்க வீரர் முரசொலி மாறன்  அவர்களின் படத்தினை திறந்து வைத்து கல்லூரியில் படிக்கிற காலத்தில் இருந்து முரசொலி மாறன் அவர்களிடம் ஏற்ப்பட்டிருந்த தொடர்பையும் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆன பிறகு அவருடன் ஏற்ப்பட்ட பாராளுமன்ற அனுபவங்களையும் குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் மாறன் ஆற்றிய பணிகளை விளக்கி மிகச் சிறப்பான நினைவேந்தல்  உரையை ஆற்றினார் .வருகை தந்த விருந்தினர்களுக்கு திமுக  மாவட்ட துணை செயலாளர்  ஆசிரியர் சந்திரன் ,திமுக நகர அவைத்தலைவர் பா .அமானுல்லா ,மத்தூர் கலைமகள் கலாலய கல்வி நிறுவனத்தின்  நிறுவனர் சிந்தை .இராசேந்திரன் ,மாவட்ட இளைஞரணி துணை செயலர் செ.கார்த்திகேயன் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர் . விடுதலை வாசகர் வட்ட தலைவரும் ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளருமான தணிகை ஜி.கருணாநிதி அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றினார் 
சிறப்பு விருந்தினரை திராவிடர் கழக மண்டலத்தலைவரும், வாசகர் வட்ட அமைப்பாளருமான  பழ .வெங்கடாசலம் அறிமுகம் செய்து உரையாற்றினார் .''கனவு மெய்ப் பட கலைஞர் காட்டிய வழி '' என்கிற தலைப்பில் மாநில திமுக இளைஞரணி துணை செயலரும் ,வழக்கறிஞருமான அசன் முகமது ஜின்னா அவர்கள் உரையாற்றினார் .அவர் தமது உரையில் கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் முதலில் நாம் கனவு காண வேண்டும் ,அப்படி ஒரு கனவு காண தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் .இங்கே தகுதி என்று குறிப்பிடுவது தன்னம்பிக்கை ,குறிக்கோள் ,திறமை என்கிற மூன்றைத் தான் ,இவற்றுடன் அவமானங்களை பொறுத்துக் கொள்ளுதல் .இந்த நான்கு பண்புகளை பெற்றால் தான் நம்முடைய கனவு மெய்ப்படும் ,இந்த நான்கு பண்புகளும் கலைஞர் அவர்களிடம் இயற்கையாய் அமைந்த காரணத்தினால் தான் திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கிறார் என்று கலைஞர் வாழ்வில் நடைபெற்ற பல சம்பவங்களை சுட்டிக்காட்டி மிக சிறப்பான உரையை ஆற்றினார் 
விழாவை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு ஒருங்கிணைக்க வாசகர் வட்ட மேனாள் பொருளாளர் அண்ணா.அப்பாசாமி நன்றியுரையாற்றினார் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கலைஞர்  குறித்த குறிப்புக்களும் ,தன்னம்பிக்கை செய்தியும் தரப்பட்டன .அனைவருக்கும் தேநீர் ,பிஸ்கட்  தரப்பட இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்​

No comments:

Post a Comment