ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் மே மாத கூட்டம் முற்போக்கு தமிழ் இலக்கிய கருத்தரங்கம் மற்றும் கார்ல் மார்க்ஸ் 203 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக மே மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் மிக சிறப்புடன் நடைபெற்றது
மே மாத ஒளிப்படங்கள் காண இங்கு கிளிக் செய்யவும்
தொடக்கமாக
ஊற்றங்கரை
ஒன்றிய திராவிடர் கழகத்தலைவர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டத்தின்
பொருளர் ஆடிட்டர் ந.இராசேந்திரன் மாத அறிக்கையை வாசித்தார்
ஊற்றங்கரை
த.மு.எ.க.ச செயற்குழு உறுப்பினர் இரா.லெனின் ,தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணியின்
மாவட்ட பொறுப்பாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி ,விடுதலை வாசகர் வட்ட
செயலர் பழ.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்
விடுதலை
வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி தலைமை வகித்து தலைமை உரையாற்றி உறுப்பினர் மற்றும்
புரவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்
இந்
நிகழ்வில் எழுத்தாளர்
கரிசல் குயில் கி.ராஜநாராயணன் படத்தினை
ஆசிரியர்
நா.இராமமூர்த்தி திறந்து
வைத்து அவர் குறித்து புகழுரையாற்றினார் .
உங்களுக்குள்
ஓர் இலக்கியவாதி என்கிற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மிக சிறப்பான உரையை நிகழ்த்தினார்
மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணை செயலர் அழகி.இராஜேசன்
நிகழ்வை ஒருங்கிணைத்தார் நிறைவாக திராவிடர் கழக
ஒன்றிய செயலாளர்
செ.சிவராஜ் நன்றியுரையாற்ற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
வருகை
தந்த அனைவருக்கும்
தேநீர்
,பிஸ்கட் , மதிய உணவு வழ்ங்கப்பட்டது.
இது போன்ற சிந்தனைக்கு விருந்தளிக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என நிகழ்வில்
பங்கேற்ற அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்
https://photos.app.goo.gl/9qzdvvGN2s9T3ELa7
No comments:
Post a Comment