விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Tuesday, 22 April 2025

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் வெகு சிறப்புடன் நடைபெற்ற தவத்திரு.குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா !


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில்  தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா மற்றும்  ஊற்றங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 35ஆண்டு கால பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் .தேவராசன் அவர்களுக்கு பாராட்டு விழா கடந்த ஏப்ரல் 20 (20/04/2025 ) ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 4  மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்புடன் நடைப்பெற்றது

 

https://photos.app.goo.gl/KBaLNkoX9bbnA8iM9


திராவிடர் கழக செயலாளர்  செ.சிவராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஊற்றங்கரை பேரூராட்சி தலைவர் பா.அமானுல்லா  தலைமை தாங்கினார். தவத்திரு.குன்றக்குடி அடிகளார்  அவர்களின் படத்தினை திறந்து வைத்து அடிகளாரின் சமூக புரட்சியை நினைவு கூர்ந்து அரிமா.மு.இராசா உரையாற்றினார்

 

திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் .கி.வீரமணி அவர்களால்  தொகுக்கப்பட்டதவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப் பெட்டகம்என்கிற நூலினை ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா  வெளியிட முதல் பிரதியின அரசுப் பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளையின்  தலைவர் தணிக்கையாளர் லோகநாதன் சேகர் பெற்றுக் கொண்டார்.அவரை தொடந்து ஊற்றங்கரையின்   முக்கிய பிரமுகர்கள்  ஏராளமானோர் வரிசையில் நின்று நூலினை பெற்றுக்  கொண்டனர்


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதமும் ஊற்றங்கரை நகரின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்களைப் பாராட்டி வருகிறது. இந்த வரிசையில், ஊற்றங்கரை அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியின்  35 வருட பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் .தேவராசன் அவர்கள் பாராட்டப்பட்டார். திரு தேவராசன் அவர்களுக்கும், அவரது துணைவியார் கௌசல்யா   அவர்களுக்கும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளையின் உறுப்பினரும், கல்வியாளருமான வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வே. சந்திரசேகரன்  அவர்கள்  பலத்த கரவொலிகளுக்கு  இடையே  பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .அதை தொடர்ந்து ஊற்றங்கரை நகரின் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்களும் கல்வியாளர்களும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்

 

விடுதலை வாசகர் வட்டத்தின் பணிகளைப் பாராட்டி .தேவராசன் அவர்களின் குடும்பத்தினர்  திருமதி கௌசல்யா  திரு தினேஷ்  திரு சதீஷ் திருமதி மகிஷா  ஆகியோர்  விடுதலை வாசகர் வட்டத்திற்கு PODIUM நன்கொடையாக வழங்கினார்கள் விடுதலை வாசகர் வட்டத்தின்  சார்பில்  பொருளர் ஆடிட்டர் .இராசேந்திரன்   வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ. .பொன்முடி மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து .இராஜேசன் ஊற்றங்கரை ஒன்றியத்தலைவர் அண்ணா .அப்பாசாமி ஒன்றிய செயலர் சிவராசன் ஆகியோர் பெற்றுக்கொண்டார்

 

இந்த நிகழ்விற்கு ...தி.மு.. நகர செயலார் சிக்னல்.ஆறுமுகம் காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.திருநாதன் ,கிருட்டிணகிரி மாவட்ட ...தி.மு.. துணை செயலாளர் பா.சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கே...கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பாராட்டுரை நிகழ்த்தினார் . அதைத் தொடர்ந்துமனிதம் வெல்லட்டும்என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரையை அரிமா  நூருல்லா ஷெரிப் அவர்கள் வழங்கினார்கள் நிறைவாக இரவீந்திரன்  நன்றியுரையாற்றினார்

 

 

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும்  உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவரும் விடுதலை வாசகர் வட்டத்தின் தொடர் பணிகளை பாராட்டியதுடன்   இதுபோன்ற கருத்தரங்குகளை தொடர்ந்து  நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

 

 

விழா நிகழ்வின் புகைப்படங்களை காண :

https://photos.app.goo.gl/KBaLNkoX9bbnA8iM9 

 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் "முத்தமிழைக் காப்போம் முனைந்து" சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் ஆசிரியர் இரா. பழனி பாராட்டு விழா*

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் "முத்தமிழைக் காப்போம் முனைந்து" எனும் சிறப்புக் கருத்தரங்கமும், ஆசிரியர் இரா. பழனி அவர்களுக்கான பாராட்டு விழாவும் 23-03-2025, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.



 இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் மாவட்ட இணைசெயலாளர் சீனிமுத்து இராஜேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். விடுதலை வாசகர் வட்டத்தின் மாதாந்திர புரவலரும், கிருட்டிணகிரி மாவட்ட திமுக மருத்துவரணித் தலைவருமான மருத்துவர் கை. கந்தசாமி தலைமை தாங்கினார்




. ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதமும் ஊற்றங்கரை நகரின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்களைப் பாராட்டி வருகிறது. இந்த வரிசையில், ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சி, திருமண மண்டபம், தமிழ்ச்சங்கம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் போன்ற பல அமைப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர் இரா. பழனி அவர்கள் இக்கருத்தரங்கில் பாராட்டப்பட்டார். ஆசிரியர் இரா. பழனி அவர்களுக்கும், அவரது துணைவியார் பரிமளா அவர்களுக்கும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் மருத்துவர் கை. கந்தசாமி பயனாடை அணிவித்துப் பாராட்டினார். விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளையின் உறுப்பினரும், கல்வியாளருமான வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வே. சந்திரசேகரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். ஊற்றங்கரை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயலாளர் பழ. வெங்கடாசலம் பாராட்டுரை நிகழ்த்தினார். 



அதைத் தொடர்ந்து ஏராளமானோர் பயனாடை அணிவித்துப் பாராட்டினர். கிருட்டிணகிரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் விஜய் இராஜசேகர், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளர் தணிக்கையாளர் ந. இராசேந்திரன், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெ. கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்புரை ஆற்றினர்.



 தணிக்கையாளர் லோகநாதன் சேகர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் படத்தைத் திறந்து உரையாற்றினார். வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ஊற்றங்கரை நகர திமுக அவைத்தலைவர் தணிகைகுமரன், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன், வழக்கறிஞர் ஜெயசீலன், எழுத்தாளர் நாணா, கவிஞர் இ. சாகுல் அமீது, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் "தமிழ்நிலத்தில் தமிழிய ஆளுமையே" எனும் தலைப்பில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.



 கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ. பொன்முடி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செ. சிவராஜ் நன்றி கூற, விழா இனிதே நிறைவு பெற்றது. நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவரும் தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டம் இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள்


 விடுத்தனர். நிகழ்வின் ஒளிப்படங்களைக் காண : https://photos.app.goo.gl/9pAP92rvKNeQasB4Ahttps://photos.app.goo.gl/9pAP92rvKNeQasB4A