ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் "முத்தமிழைக் காப்போம் முனைந்து" எனும் சிறப்புக் கருத்தரங்கமும், ஆசிரியர் இரா. பழனி அவர்களுக்கான பாராட்டு விழாவும் 23-03-2025, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் மாவட்ட இணைசெயலாளர் சீனிமுத்து இராஜேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். விடுதலை வாசகர் வட்டத்தின் மாதாந்திர புரவலரும், கிருட்டிணகிரி மாவட்ட திமுக மருத்துவரணித் தலைவருமான மருத்துவர் கை. கந்தசாமி தலைமை தாங்கினார்
. ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதமும் ஊற்றங்கரை நகரின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்களைப் பாராட்டி வருகிறது. இந்த வரிசையில், ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சி, திருமண மண்டபம், தமிழ்ச்சங்கம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் போன்ற பல அமைப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர் இரா. பழனி அவர்கள் இக்கருத்தரங்கில் பாராட்டப்பட்டார். ஆசிரியர் இரா. பழனி அவர்களுக்கும், அவரது துணைவியார் பரிமளா அவர்களுக்கும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் மருத்துவர் கை. கந்தசாமி பயனாடை அணிவித்துப் பாராட்டினார். விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளையின் உறுப்பினரும், கல்வியாளருமான வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வே. சந்திரசேகரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். ஊற்றங்கரை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயலாளர் பழ. வெங்கடாசலம் பாராட்டுரை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து ஏராளமானோர் பயனாடை அணிவித்துப் பாராட்டினர். கிருட்டிணகிரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் விஜய் இராஜசேகர், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளர் தணிக்கையாளர் ந. இராசேந்திரன், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெ. கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்புரை ஆற்றினர்.
தணிக்கையாளர் லோகநாதன் சேகர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் படத்தைத் திறந்து உரையாற்றினார். வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ஊற்றங்கரை நகர திமுக அவைத்தலைவர் தணிகைகுமரன், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன், வழக்கறிஞர் ஜெயசீலன், எழுத்தாளர் நாணா, கவிஞர் இ. சாகுல் அமீது, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் "தமிழ்நிலத்தில் தமிழிய ஆளுமையே" எனும் தலைப்பில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ. பொன்முடி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செ. சிவராஜ் நன்றி கூற, விழா இனிதே நிறைவு பெற்றது. நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவரும் தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டம் இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தனர். நிகழ்வின் ஒளிப்படங்களைக் காண : https://photos.app.goo.gl/9pAP92rvKNeQasB4Ahttps://photos.app.goo.gl/9pAP92rvKNeQasB4A
No comments:
Post a Comment