விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 22 May 2025

கோடை விடுமுறையை ஒட்டி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் "பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்"

கோடை விடுமுறையை ஒட்டி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் "பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்" 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.










கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.பொன்முடி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி நிகழ்வினை தொடங்கி வைத்தார். விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு கூட்டத்தின் நோக்கத்தை கூறி உரையாற்றினார் இக் கருத்தரங்கத்திற்கு வழக்கறிஞர் ந. ஜெயசீலன் தலைமை தாங்கி தமது தமது இளைமைக் கால கோடை விடுமுறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் தமது ஆஸ்திரேலிய பயண அனுபவங்களையும் விவரித்தார்

பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கிற்கு சமூக செயற்பாட்டாளர் சா. யாசர் அராபத் மாருதி பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் மு.மாதையன் தொழிலதிபர் சி.ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினர் 70 வது வயதில் இமயமலையின் ஒரு சிகரத்தை தொட்டு திரும்பிய வழக்கறிஞர் பொ. வே. ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் தமது பயண அனுபவங்களை சுவைப்பட பகிர்ந்து கொண்டார் அதைத்தொடந்து “பயணங்கள் முடிவதில்லை” என்ற தலைப்பில் பல்வேறு பயணங்கள் குறித்து வரலாற்று தகவல்களையும் இணைத்து கவிஞர்.இ.சாகுல் அமீது சிறப்புரையாற்றினார்


வருகை தந்த விருந்தினர்களுக்கு மேனாள் திராவிடர் கழக மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் , தணிக்கையாளர்கள் லோகநாதன் சேகர் ,ஜெயசுதா ,கவிஞர் எழு. ஞாயிறு , கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர் இந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் அண்ணா. அப்பாசாமி நன்றியுரை தெரிவிக்க நிகழ்ச்சியை திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து.இராஜேசன் நிகழ்வினை சமூக ஊடகங்களில் வெளியிட ஒளிப்பதிவு செய்தார் பங்கேற்றோர் விடுதலை வாசகர் வட்டத்தின் இத்தகைய பயன்மிகு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். கருத்தரங்கத்தின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment