விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 23 December 2011

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா











































     எழுச்சியுடன் நடைபெற்ற 
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா 
                                                                                               மற்றும்
வீரமணி ஒரு விமர்சனம் நூல் வெளியீட்டு விழா

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவும் மருத்துவர் கொ .மாரிமுத்து   அவர்களுக்கு பாராட்டு விழாவும் ,விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் ,மூடநம்பிக்கை குறித்த கருத்தரங்கமும் ,சமூகநீதிக் காவலர் விபி சிங் பட திறப்பும் ,வீரமணி ஒரு விமர்சனம் நூல் வெளியீட்டு விழாவும்  கடந்த  திசம்பர்   திங்கள் 18 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில்   ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது

இவ் விழாவிற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணா .சரவணன்   வரவேற்புரை ஆற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் மானமிகு.அண்ணா .அப்பாசாமி அவர்கள் ஆண்டு  அறிக்கை வாசித்தார்  . எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெ.செந்தில் நாதன்M.B.B.S.,M.S(ortho) ராஜ் ஆர்த்தோ கேர்    தலைமை தாங்கி உரையாற்றினார் அவர் உரையில் வாசகர் வட்ட கூட்டத்தில் பங்கேற்ப்பதை பெருமையாய் கறுதுவதாய் கூறினார்   ,விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக மண்டல செயலாளருமான   மானமிகு பழ .வெங்கடாசலம்   அவர்கள் விழா கூறித்த அறிமுக உரை ஆற்றினார் ,நிகழ்வின் தொடக்கமாக ஓராண்டுகளாக மிக சிறப்பாக விடுதலை வாசகர் வட்டத்தை நடத்தி வரும் பொறுப்பாளர்களை பாராட்டி வாசகர் வட்ட  தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நினைவு பரிசு வழங்க பட்டது

மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் அவர்கள் மூத்த எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி -ஒரு விமர்சனம் என்னும் நூலை வெளியிடவித்யா மந்திர் கல்வி நிறுவனக்களின் நிறுவனர் வே .சந்திரசேகரன் ,காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் கணேஷ்மல் ,தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை மரியஅந்தோணி ராஜ்,தூய நெஞ்சக் கல்லூரியின் தேர்வுக் கண்காணிப்பாளர் அருட் தந்தை பிரவீன் பீட்டர் , ,  விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி,திருப்பத்தூர் காங்கிரஸ் பொறுப்பாளர்  T V மாதவன் ,  ஆகியோர் நூல்களை ருபாய் 1000 அளித்து  பெற்று கொண்டனர்

 ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் 2009 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் கிருட்டினகிரி மாவட்டத்தில் சிறந்த மருத்துவர் எனமாவட்ட ஆட்சி தலைவரிடத்தில் விருது பெற்ற திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து பாராட்டபட்டார் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முக தாடை அறுவை சிகிச்சை நிபுணர் பழ .ஜெகன்பாபு M.D.S.பாராட்டுரை நிகழ்த்தினார்

முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா .அப்பாசாமி ,மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன் திருப்பத்தூர் நகர திராவிடர் கழக தலைவர் காளிதாஸ் மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் ஆகியோர் சிறப்பு செய்தனர்

             நவம்பர் 27  சமுக நீதிக் காவலர் விபி சிங் அவர்களின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில் சமுக நீதிக் காவலர் விபி சிங் அவர்களின் படத்தினை சென்னை பல் மருத்துவர் ப்ரியா எழிலன் அவர்கள் திறந்து வைத்தார்

''தமிழ் நாடும் மூடநம்பிக்கையும்   ''என்னும் தலைப்பில் இளைஞ்சர் இயக்கத்தின் நிறுவனர் மருத்துவர் நா .எழிலன் MBBS.,MD அவர்கள் ஒளிபடம் முலம் சோதிடம் ,வாஸ்து ,ஜாதி ,கடவுள் என முட நம்பிக்கைகள் குறித்து  கருத்துரையாற்றினார்

விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்கினார்.மானமிகு இரா .வேங்கடம்    நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியில் பங்கு பெற வந்திருந்த அனைவருக்கும் உண்மை இதழில் வெளி வந்த தமிழர் தலைவரின் சிந்தனை துளிகள் தொகுத்து  நகலெடுத்து வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவு வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு ,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் .

Wednesday, 14 December 2011

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா !

  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம்      ஆண்டு துவக்க விழா !
                                                                          மற்றும்

                         மருத்துவர் .கொ.மாரிமுத்து M .B .B .S ., D .C .H .,DNB அவர்களுக்கு பாராட்டு விழா
                            * விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி 79 ஆம் ஆண்டு  பிறந்த நாள்
                             * மூடநம்பிக்கை குறித்த கருத்தரங்கம்
                              * சமூகநீதிக் காவலர் வி.பி சிங் பட திறப்பு
                              * வீரமணி - ஒரு விமர்சனம் நூல் வெளியீடு
                                                              அன்புடன் அழைக்கிறோம் !
  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவும் மருத்துவர் கொ .மாரிமுத்து   அவர்களுக்கு பாராட்டு விழாவும் ,விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் ,மூடநம்பிக்கை குறித்த கருத்தரங்கமும் ,சமூகநீதிக் காவலர் விபி சிங் பட திறப்பும் ,வீரமணி ஒரு விமர்சனம் நூல் வெளியீட்டு விழாவும்  வரும் திசம்பர்   திங்கள் 18 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில்   ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெறுகிறது

இவ் விழாவிற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணா .சரவணன்   வரவேற்புரையாற்றுகிறார்.விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் மானமிகு.அண்ணா .அப்பாசாமி அவர்கள் ஆண்டு  அறிக்கை வாசிக்கிறார் . எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெ.செந்தில் நாதன்M.B.B.S.,M.S(ortho) ராஜ் ஆர்த்தோ கேர்    தலைமை தாங்குகிறார்  ,விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக மண்டல செயலாளருமான   மானமிகு பழ .வெங்கடாசலம்   அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றுகின்றார்

மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் அவர்கள் மூத்த எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி -ஒரு விமர்சனம் என்னும் நூலை வெளியிடவித்யா மந்திர் கல்வி நிறுவனக்களின் நிறுவனர் வே .சந்திரசேகரன் ,காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் கணேஷ்மல் ,தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை மரியஅந்தோணி ராஜ்,தூய நெஞ்சக் கல்லூரியின் தேர்வுக் கண்காணிப்பாளர் அருட் தந்தை பிரவீன் பீட்டர் ,மத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் பொன்.குணசேகரன் ,  விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி,திருப்பத்தூர் காங்கிரஸ் பொறுப்பாளர்  T V மாதவன் ,  ஆகியோர் நூல்களை பெற்று கொள்கின்றனர்

 ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் 2009 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் கிருட்டினகிரி மாவட்டத்தில் சிறந்த மருத்துவர் எனமாவட்ட ஆட்சி தலைவரிடத்தில் விருது பெற்ற திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து பாராட்டப்படுகிறார் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முக தாடை அறுவை சிகிச்சை நிபுணர் பழ .ஜெகன்பாபு M.D.S.பாராட்டுரை நிகழ்த்துகிறார்



             நவம்பர் 27  சமுக நீதிக் காவலர் விபி சிங் அவர்களின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில் சமுக நீதிக் காவலர் விபி சிங் அவர்களின் படத்தினை வேலூர் கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் முகமது சயி M.B.B.S.M.S(opthal)திறந்து வைத்து உரையாற்றுகின்றார்  


''தமிழ் நாடும் மூடநம்பிக்கையும்   ''என்னும் தலைப்பில் இளைஞ்சர் இயக்கத்தின் நிறுவனர் மருத்துவர் நா .எழிலன் MBBS.,MD  கருத்துரையாற்றுகின்றார்

விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்குகின்றார்.மானமிகு இரா .வேங்கடம்    நன்றி உரையாற்றுகின்றார்
அனைவரும் வருக !

Sunday, 13 November 2011

''ஊடகங்களை புரிந்து கொள்வோம் ''

''ஊடகங்களை புரிந்து கொள்வோம்  ''என்னும் தலைப்பில் பெரியார் சுயமரியாதை பிரச்சார ஊடகத்துறையின் அமைப்பாளர் ச.பிரின்ஸ் என்னாரசு  பெரியார்  பத்திரிக்கைகள் ,திரைப்படங்களின் இன்றைய போக்கு நடுநிலை என்னும் பெயரில் நடக்கின்ற பார்ப்பன மோசடியை அம்பலப்படுத்தி ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் ஆற்றிய உரை 

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்


































புதிய சாளரத்தில்
அனைத்தையும் அச்சிடு


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கமும் ,தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கோ.முரளி  அவர்களுக்கு பாராட்டு விழாவும் கடந்த  நவம்பர்  திங்கள் 13 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில்   ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது 
இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் மானமிகு.அண்ணா .அப்பாசாமி அவர்கள்   வரவேற்புரையாற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் சிவராஜ்  மாத அறிக்கை வாசித்தார்  . ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான எஸ்.பூபதி   தலைமை தாங்கி தலைமை உரை யாற்றினார்   ,விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர்  மானமிகு .இர.வேங்கடம்  அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்


மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் ,விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக செயலாளருமான பழ.வெங்கடாசலம் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி,விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலாளரும் காங்கிரஸ் பொருப்பளருமான இர .திருநாவுக்கரசு  அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர்
 ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் 2010 ஆண்டிற்க்கான  சியாம் -ராத் -சாகர் என்னும் ஹிந்தி மற்றும் ஆங்கில குறும்பட சிறந்த ஒளிப் பதிவிர்க்கான 58 வது அகில இந்திய சினிமா விருதினை மாண்புமிகு குடியரசு தலைவரிடம் பெற்ற திரு .கோ .முரளி  அவர்களுக்கு  ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் எஸ்..பூபதி  அவர்கள் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நினைவு பரிசினை வழங்கினார் .குறும் பட ஆவண பட ஆய்வாளரும்  நிழல் இதழின் ஆசிரியரும்மான நிழல் .திருநாவுக்கரசு அவர்கள் பாராட்டுரை நிகழ்த்தினார் வேலூர் தமிழ் சங்கத்தின்  செயலாளர் மானமிகு மு.சுகுமார் அவர்கள் கலைவாணர்  என் .எஸ்..கே படத்தினை திறந்து வைத்து  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்த பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார்


''ஊடகங்களை புரிந்து கொள்வோம்  ''என்னும் தலைப்பில் பெரியார் சுயமரியாதை பிரச்சார ஊடகத்துறையின் அமைப்பாளர் ச.பிரின்ஸ் என்னாரசு  பெரியார்  பத்திரிக்கைகள் ,திரைப்படங்களின் இன்றைய போக்கு நடுநிலை என்னும் பெயரில் நடக்கின்ற பார்ப்பன மோசடியை அம்பலப்படுத்தி உரையாற்றினார்


விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்கினார் .ஆசிரியர் தமிழ் குடிமகன்   நன்றி உரையாற்றினார் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மாநிலபொருளாளர் அகிலா , வித்யா ,மாவட்ட செயலாளர் வி.ஜி இளங்கோ  ,ஒன்றிய இளஞ்சரணி பொறுப்பாளர் துரை,மாவட்ட இளஞ்சரணி பொறுப்பாளர் வண்டி .ஆறுமுகம் ,நிருபர் .கி .ஆ.கோபாலன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்

நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் விடுதலையில் வெளிவந்த வாழ்வியல் சிந்தனைகள்  நகலும் கலைவாணர் என்.எஸ்.கே பற்றிய குறிப்பும்  வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்