ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கமும் ,தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கோ.முரளி அவர்களுக்கு பாராட்டு விழாவும் கடந்த நவம்பர் திங்கள் 13 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது
இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் மானமிகு.அண்ணா .அப்பாசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் சிவராஜ் மாத அறிக்கை வாசித்தார் . ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான எஸ்.பூபதி தலைமை தாங்கி தலைமை உரை யாற்றினார் ,விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் மானமிகு .இர.வேங்கடம் அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்
மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் ,விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக செயலாளருமான பழ.வெங்கடாசலம் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி,விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலாளரும் காங்கிரஸ் பொருப்பளருமான இர .திருநாவுக்கரசு அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர்
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் 2010 ஆண்டிற்க்கான சியாம் -ராத் -சாகர் என்னும் ஹிந்தி மற்றும் ஆங்கில குறும்பட சிறந்த ஒளிப் பதிவிர்க்கான 58 வது அகில இந்திய சினிமா விருதினை மாண்புமிகு குடியரசு தலைவரிடம் பெற்ற திரு .கோ .முரளி அவர்களுக்கு ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் எஸ்..பூபதி அவர்கள் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நினைவு பரிசினை வழங்கினார் .குறும் பட ஆவண பட ஆய்வாளரும் நிழல் இதழின் ஆசிரியரும்மான நிழல் .திருநாவுக்கரசு அவர்கள் பாராட்டுரை நிகழ்த்தினார் வேலூர் தமிழ் சங்கத்தின் செயலாளர் மானமிகு மு.சுகுமார் அவர்கள் கலைவாணர் என் .எஸ்..கே படத்தினை திறந்து வைத்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்த பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார்
''ஊடகங்களை புரிந்து கொள்வோம் ''என்னும் தலைப்பில் பெரியார் சுயமரியாதை பிரச்சார ஊடகத்துறையின் அமைப்பாளர் ச.பிரின்ஸ் என்னாரசு பெரியார் பத்திரிக்கைகள் ,திரைப்படங்களின் இன்றைய போக்கு நடுநிலை என்னும் பெயரில் நடக்கின்ற பார்ப்பன மோசடியை அம்பலப்படுத்தி உரையாற்றினார்
விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்கினார் .ஆசிரியர் தமிழ் குடிமகன் நன்றி உரையாற்றினார் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மாநிலபொருளாளர் அகிலா , வித்யா ,மாவட்ட செயலாளர் வி.ஜி இளங்கோ ,ஒன்றிய இளஞ்சரணி பொறுப்பாளர் துரை,மாவட்ட இளஞ்சரணி பொறுப்பாளர் வண்டி .ஆறுமுகம் ,நிருபர் .கி .ஆ.கோபாலன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் விடுதலையில் வெளிவந்த வாழ்வியல் சிந்தனைகள் நகலும் கலைவாணர் என்.எஸ்.கே பற்றிய குறிப்பும் வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்

No comments:
Post a Comment