விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 3 November 2011

ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் மற்றும் ஒளிபதிவாளர் .கோ.முரளி அவர்களுக்கு பாராட்டு விழா



                                 
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில்
                             ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்
                                                     மற்றும்
                                                                                                          தேசிய விருது பெற்ற
                                                                                          ஒளிபதிவாளர்  .கோ.முரளி  அவர்களுக்கு பாராட்டு விழா
***************************************************************************************************************************************************************
                             அன்புடன் அழைக்கிறோம் !
  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கமும் ,தேசிய விருது பெற்ற ஒளிபதிவாளர் கோ.முரளி  அவர்களுக்கு பாராட்டு விழாவும் வரும் நவம்பர்  திங்கள் 13 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில்   ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெறுகிறது

இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் மானமிகு.அண்ணா .அப்பாசாமி அவர்கள்   வரவேற்புரையாற்றுகிறார்.விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் சிவராஜ்  மாத அறிக்கை வாசிக்கிறார் . ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான எஸ்.பூபதி   தலைமை தாங்குகிறார்  ,விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர்  மானமிகு .இர.வேங்கடம்  அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றுகின்றார்

மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் ,விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக செயலாளருமான பழ.வெங்கடாசலம் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி,விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலாளரும் காங்கிரஸ் பொருப்பளரும்மான இர .திருநாவுக்கரசு  அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர் 
 ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் 2010 ஆண்டிற்க்கான  சியாம் -ராத் -சாகர் என்னும் ஹிந்தி மற்றும் ஆங்கில குறும்பட சிறந்த ஒலிபதிவிர்க்கான 58 வது அகில இந்திய சினிமா விருதினை மாண்புமிகு குடியரசு தலைவரிடம் பெற்ற திரு .கோ .முரளி  பாராட்ட படுகிறார்.குறும் பட ஆவன பட ஆய்வாளரும்  நிழல் இதழின் ஆசிரியரும்மான நிழல் .திருநாவுக்கரசு பாராட்டுரை நிகழ்த்துகின்றார் வேலூர் தமிழ் சங்கத்தின்  செயலாளர் மானமிகு மு.சுகுமார் அவர்கள் கலைவாணர்  என் .எஸ்..கே படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார்

''ஊடகங்களை புரிந்து கொள்வோம்  ''என்னும் தலைப்பில் பெரியார் சுயமரியாதை பிரச்சார ஊடகத்துறையின் அமைப்பாளர் ச.பிரின்ஸ் என்னராஸ் பெரியார்  கருத்துரையாற்றுகின்றார்

விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்குகின்றார்.மானமிகு இரு .கிருட்டிணன்  நன்றி உரையாற்றுகின்றார்
அனைவரும் வருக !

No comments:

Post a Comment