http://viduthalai.in/new/e-paper/17041.html
http://muelangovan.blogspot.com/2011/08/blog-post_21.html

http://muelangovan.blogspot.com/2011/08/blog-post_21.html
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கம்!
பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

ஊற்றங்கரை, செப்.1-ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயில ரங்கம் ஞாயிற்றுக் கிழமை(21.08.2011) காலை 10 மணியளவில் ஊற்றங்கரை காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் நடைபெற்றது. திட்டமும் செயற்பாடு களும்முன்னதாக இணையம் என்ற உலக வலைத்தளத்தைப் பாம ரரும் புரிந்துகொள்ள வும், தமிழ் இணை யத்தை பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் அறிந்து கொள்ளவும் தமிழ் இணையப் பயில ரங்கத்தை நடத்த ஊற் றங்கரை விடுதலை வாச கர் வட்டம் முடிவு செய் தது.
இப் பயிலரங்கத் திற்கு தேவையானது திரையிடும் கருவி, திரை, ஒலிவாங்கி, மற்றும் ஒலிபெருக்கிக் கருவிகள் மற்றும் பங்கேற்போ ருக்கு ஒரு எழுதுகோல், ஒரு குறிப்பேடு மட் டுமே. ஒரு கல்லூரி நிறு வனத்தின் மூலம் எளி மையாக ஏற்பாடுகளை செய்யலாம் என திட்ட மிட்டு ஊற்றங்கரை நகரின் மிகச் சிறப்பு வாய்ந்த வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர் கல்வி செம்மல் வே.சந்திரசே கரன் அவர்களை அணு கிய போது நிகழ்ச்சி நடத்த அரங்கம், திரை யிடும் கருவி, திரை, ஒலிவாங்கி, ஒலிபெருக் கிக் கருவிகள் மற்றும் பங்கேற்கும் அனைவ ருக்கும் உணவு,தேனீர், போக்குவரத்து வசதி களை ஏற்பாடு செய்து தருவதாக பெரு உள் ளத்துடன்ஒப்புக் கொண்டார்.
சுற்றறிக்கை
ஊற்றங்கரை ஒன்றி யத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ் இணையப் பயில ரங்கம் குறித்த சுற்ற றிக்கை அனுப்பி, பங் கேற்பாளர்கள் முன் பதிவு செய்ய வேண்டு கோள் விடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி, கேபிள் விளம்பரம், முக நூல் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுகோள் வைக்கப் பட்டது. பலரும் ஆர் வத்துடன் பதிவு செய் தனர். பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாண விகளின் பெயர் பட்டி யலை தலைமை ஆசிரி யர்கள் அனுப்பி வைத்த னர். பொதுமக்கள் விளம் பரத்திற்கு டிஜிட்டல் பதாகையை ஜெசிந்தா மெட்டல் மார்ட் வழங் கினார்.
மாணவர்களுக்கு குறிப்பேடு ரவிக்குமார் பேப்பர் ஸ்டோர்ஸ் அவர்களும், எழுது கோல்களை ராசி புக் ஸ்டோர்ஸ் உரிமையா ளர் திருமதி கவிதா சுரேஷ் அவர்களும் நன் கொடையாக வழங்கி னர்.
குவிந்தனர்
நிகழ்ச்சி நிரல் 200-க்கும் மேற்பட்ட மாண விகள் தனிப் பேருந்து கள் மூலமும், பொது மக்கள் இணைய ஆர்வ லர்கள் ஊற்றங்கரை பேருந்து நிலையத்தில் இருந்து மற்றுமொரு தனி பேருந்து மூலமும் காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வரப்பட் டனர். பயிலரங்கு காலை பத்து முப்பது மணிய ளவில் தொடங்கியது. மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா.சர வணன் விழாவினை தொகுக்க விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் பழ.பிரபு வரவேற் புரை ஆற்றினார். வித்யா மந்திர் நிறுவங்களின் நிறுவனர் திரு.வே.சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், திராவிடர் கழக மாவட் டத் தலைவர் கே.சி எழிலரசன், திராவிடர் கழக மண்டல செயலாள ரும் விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப் பாளருமான பழ.வெங்க டாசலம், மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளரும் விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை. ஜி.கருணாநிதி ஆகி யோர்முன்னிலை வகித்து உரையாற்றினர். முன்னதாக வித்யா மந்திர் நிறுவங்களின் நிறுவனர் திரு.வே.சந்திர சேகரன் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் வி.ஜி. இளங்கோ அவர்களும், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் அவர்களுக்கு மாவட்ட இணைச் செய லாளர் அரங்க.இரவி அவர்களும், மண்டல செயலாளர் பழ.வெங்க டாசலம் அவர்களுக்கு திருப்பத்தூர் பாண்டி யன் அவர்களும், வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக் கிய அணி துணை செய லாளர் தணிகை.ஜி.கரு ணாநிதி அவர்களுக்கு ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் சிவராஜ் அவர்களும், மாநில ப.க செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கு பெரியார் பெருந்தொண்டர் கி.ஆ.கோபாலன் அவர் களும், பயிலரங்கத்தை நடத்த வந்த பேராசிரியர் மு.இளங்கோவன் அவர் களுக்கு மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் அவர்களும், வித்யா மந் திர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் முதல் வர் அருள் அவர்களுக்கு வாசகர் வட்ட செயலா ளர் பழ.பிரபு அவர் களும், கல்லூரி நிர்வாக அலுவலர் செங்கோடன் அவர்களுக்கு வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி.கருணாநிதி அவர் களும் நினைவுப் பரிசு வழங்கினர். வாசகர் வட்ட துணைத் தலைவர் இர.வேங்கடம் நன்றி உரைக்கு பின் மேடை மாநில பக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் அறிமுக உரைக்காக ஒப் படைக்கபட்டது. இணையத்தின் தேவை குறித்தும், அறிவியலை தமிழில் வளர்க்க வேண் டியதைப் பற்றி தந்தை பெரியாரின் கருத் துகளை எடுத்துக்காட் டியும், செம்மொழி இளம் அறிஞர் விருது வென்ற முனைவர் மு. இளங்கோவன் குறித்தும் அவர்கள் இணையப் பயிலரங்கத்தை அறி முகம், செய்தும் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.
கருத்தைக் கவர்ந்த பயிலரங்கம்
புதுச்சேரி பாரதிதா சன் மகளிர் கல்லூரியின் துணை பேராசிரியர் முனைவர்.மு .இளங்கோ வன் அவர்கள் இணை யத்தில் எளிமையாக, தமிழ்த்தட்டச்சு செய் வது குறித்து முதலில் அறிமுகம் செய்தார். மின்னஞ்சல் கணக்கு உரு வாக்கம், தமிழ் விசைப் பலகை அறிமுகம், மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, நூலகம், தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, இணைய இதழ்கள், தமிழ் இணையப் பல் கலைக்கழகம், தமிழ் இணைய மாநாடுகள், விக்கிப்பீடியா, விக்சனரி, மின்நூலகம், மின்னகர முதலிகள், இணைய வழித் தமிழ்ப்பாடங்கள், சமூகவலைத்தளங்கள் பற்றிய பல செய்திகளை முற்பகல் வகுப்பில் எடுத் துரைத்தார். மதியஉணவு இடைவேளைக்குப் பிறகு ப.க. துணை தலைவர் அண்ணா.சர வணன் அவர்களின், தமிழா நீ பேசுவது தமிழா என்னும் பாட லுடன் வகுப்புக்கள் தொடங்கின. இரண்டு மணிமுதல் நான்குமணி வரை செய்முறையாக வலைப்பூ உருவாக்கம் முதல் இணையவழிக் கல்வி பற்றிய செய்தி களைப் பகிர்ந்து கொண்டார். நிறைவாகப் பயிற்சி பெற்ற மாணவர்களும் பொதுமக்களும் தங்கள் கருத்துகளை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக நிகழ்வு சிறப்பாக நடக்க ஒத்துழைத்த கல்லூரி கணினி துறைத் தலைவர் செந்தில்நாதன், நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளர் கோவிந் தன் ஆகியோருக்கு முனைவர் மு.இளங்கோவன் நினை வுப் பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் அருள், கவி.செங் குட்டுவன், மக்கள் தொடர்பு பொறுப் பாளர் தர்மலிங்கம், கல்லூரி ஆசிரியர் பெரு மக்கள்,மாணவர்களை அழைத்து வந்த பள்ளி களின் தலைமை ஆசிரி யர்கள், ஆசிரிய பெரு மக்கள் அனைவருக்கும் வாசகர் வட்டத்தின் சார்பில் நன்றி தெரி விக்கப்பட்டது.
அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப் பேடு, எழுதுகோல், பிஸ்கட் தரப்பட்டது. நிகழ்ச்சி யின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது . இது போன்ற பயில ரங்குகள் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் அல்லது திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுக்க நடத்தவேண் டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டு கோள் விடுத்தனர்.
மகிழ்ச்சி..
ReplyDeleteபாராட்டுக்கள்